அம்மா என்னை பழம் வாங்கி வரச் சொன்னாங்க. இந்த கடையில் என்னென்ன பழங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்து கமெண்ட்ஸ் பகுதியில் சொல்லுங்க குட்டீஸ்…மேலும் படிக்க –>

அரசர் வீரமகேந்திரர் பட்டத்தரசி எழினியிடம் மலைக்கோட்டை மாயாவியின் நிபந்தனையை எடுத்துச் சொன்னதுமே பட்டத்தரசி எழினி துடித்துப் போய் விட்டாள். “என்ன இது அநியாயம்? இரண்டு கண்களில் எந்தக் கண் வேண்டும் என்றால் என்ன சொல்ல முடியும்?”  தங்களுடைய கண்ணின் மணியான இளவரசியை மாயாவியிடம் தூக்கிக் கொடுக்கவும் தாய் மனதிற்கு விருப்பமில்லை. ஆனால் நாட்டு மக்களும் அவர்களுக்குக் குழந்தைகள் தானே! அவர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை இழந்து துயரத்தில் துடிப்பதையும் பார்த்துக்மேலும் படிக்க –>

குழந்தைகளே, உங்கள் கைச்சுவடுகளை அழகிய பறவை மற்றும் விலங்கு ஓவியங்களாக மாற்றுவோமா? குழந்தைகளின் கைகளை வெள்ளைத் தாளின் மீது வைத்து, அதனை பேனா அல்லது பென்சில் கொண்டு சுவடு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் தேவையான கண், மூக்கு, வாய், கால், இறகுகள் என நாம் வரைய விரும்பும் பறவை/விலங்கின் அடையாளங்களை வரைந்து கொள்ளலாம். இம்முறையில், யானை, மயில், வான்கோழி, ஆமை, குருவி, கோழி, மீன், குதிரை, வரிக்குதிரை இன்னும்மேலும் படிக்க –>

அவ்வழகிய தேசம் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டு இருந்தது. ஆம், அத்தேசத்தின் வளமையைப் பெருக்க சகி நதி அழகிய தேசத்தை சுற்றி சூழ்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. அந்நாட்டின் பெயரும் சகி தான். ‘சகி’ என்றால் தோழி என்பது பொருள். சகி நாடும் நாட்டு மக்களும் மிகுந்த தோழமை உணர்வு உள்ளவர்கள்.  சகி நதியில் அழகழகான வஜ்ரா எனும் மீன்கள் காணப்பட்டன. அந்நாட்டிற்கு வறுமை என்பதே கிடையாது யாரும் எதையும் விளைவிக்கமேலும் படிக்க –>

புளூட்டோ கிரகமா இல்லையா? நித்யா, விழுப்புரம் பல காலமாகச் சூரியனைச் சுற்றும் கிரகங்களின் எண்ணிக்கை 9 என்றும் ஒன்பதாவது கிரகம் புளூட்டோ என்றும் சொல்லப்பட்டது.2006 ஆம் ஆண்டு வானியல் அறிஞர்கள் புளூட்டோ கிரகமல்ல; அது ஒரு குள்ளக் கிரகம் (Dwarf planet) என்று அறிவித்தனர்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன தெரியுமா? கிரகம் சூரியனை மையமாக வைத்த வட்டப்பாதையில், சூரியனைச் சுற்ற வேண்டும். கோள வடிவில் ஈர்ப்பு விசையுடன் இருக்கமேலும் படிக்க –>

கீச் கீச் கீச்!  பூஞ்சிட்டு வந்திருக்கேன்! ஓடி வாங்க செல்லங்களே! கணிணியிலும்,தொலைக்காட்சியிலும் பாடம் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்க எல்லோருக்கும் சிட்டுவின் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! இந்த இனிய நாளில், நம் நாட்டு விடுதலைக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த தியாகிகளைப் போற்றி வணங்க வேண்டும்; போன மாதம் மாயக்கட்டம் சரியாகச் செய்து, விடையெழுதிய எல்லோருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.  கதைகளைப் படித்தீர்களா? பிடித்திருந்ததா?  கடி ஜோக்கைப் படித்துவிட்டுச் சிரித்தீர்கள் தானே? யாரெல்லாம்மேலும் படிக்க –>

திரு. இரவிசங்கர் அய்யாக்கண்ணு அவர்கள் பூஞ்சிட்டு என்ற பெயரில் குழந்தைகளுக்கான மின்னிதழ் மலர இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். கடந்த பிப்ரவரி 2020 முதல், திராவிட வாசகர் வட்டம் சார்பில் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி என்னும் போட்டியை நடத்தினோம். இப்போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் இடையே ஒரு இயல்பான நட்பு முகிழ்த்து, அவர்கள் இணைந்து சிறுவர்களுக்கான மின்னிதழை வெளியிட முனைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே போட்டியை ஒருங்கிணைத்த எங்களுக்கான பரிசாகக்மேலும் படிக்க –>

மித்து என்கிற மித்தேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் கெட்டி.  மிகவும் சுட்டி. அவனுடைய அப்பா அரவிந்த் ஒரு வங்கி அதிகாரி. அவனுடைய அம்மா மீனாட்சி ஒரு பள்ளி ஆசிரியை.  சென்னை வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீடு, மூன்றாம் தளத்தில் உள்ளது.  அவனுடைய பக்கத்து வீட்டில் பார்வதிப் பாட்டியும் பட்டாபி தாத்தாவும் வசிக்கிறார்கள். மித்துவும் பட்டாபி தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவன் அவரைமேலும் படிக்க –>