இதழ் – 7 (Page 3)

appadiya

பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் கற்பனை உலகத்தில் வானத்திற்கு நிறமே கிடையாது. காலையில் சூரியனும் இரவில் நிலவும் நட்சத்திரங்களும் நிறமற்ற வானத்தில் உலாவி வந்தன. அங்கே ஓர் உயரமான,  பல நூறு உயிர்களின் வாழ்விடமாக மலை ஒன்று இருந்தது. அந்த மலையின் பெயர் நீல மலை. அந்த பெயருக்குப் காரணம் அந்த மலை எங்கும் பூத்திருக்கும் நீலநிறப்பூ. அந்த மலையின் அடிவாரத்தில் பல அழகான கிராமங்கள் இருந்தன. அந்தமேலும் படிக்க…

rabbit

ஒருமுறை, முயல்கள்  தங்கள் வாழ்வில் படும் கஷ்டங்களைப் பற்றிப் பேசுவதற்காக ஒரு கூட்டம் போட்டன. “எப்பவுமே நம்மளைச் சாவைக் காட்டிப் பயமுறுத்திக்கிட்டே இருக்காங்க.  மனுஷன்லேர்ந்து நாய், கழுகு, நரி வரைக்கும் நம்மளைப் பயத்திலேயே வைச்சிருக்காங்க.  நமக்கு மகிழ்ச்சிங்கிறதே சுத்தமா இல்ல.  அதுக்குப் பேசாம உடனடியா நாம செத்துப் போயிடுறது நல்லது” என்று அந்தக் கூட்டத்தில், முயல்களின் தலைவன் சொன்னது. “ஆமாம்.  எப்பப் பார்த்தாலும், ஏதாவது நம்மளைப்  பயமுறுத்திச் சோகமா ஆக்குது. மேலும் படிக்க…

chutti

டூடுல் ஆர்ட் கொரானா காரணமாக அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் பெருமளவு தளர்த்தப்பட்டதால், குடியிருப்புவாசிகள் பலர் கிறிஸ்துஸ், புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களுக்காகத் தங்கள் சொந்த ஊர் கிளம்பிச் சென்றுவிட, குடியிருப்பில் மிகக் குறைவானவர்களே இருந்தார்கள்.  அதிலும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்க, சுட்டி மித்து தன் நண்பர்களை ரொம்பவே மிஸ் செய்தான்.  “பட்டு! என் ஃப்ரண்ட்ஸ் யாரும் இங்க இல்ல! உங்க வீட்டுக்கும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க! செம்மையாமேலும் படிக்க…

maayavanam

ஷிவானி தன்னோட அப்பா அம்மா பாட்டி தாத்தாவோட பொங்கல் பண்டிகை கொண்டாட தன் தாத்தாவோட கிராமத்துக்கு போயிருக்கா.. ஆனா அவங்க அங்க போனதில் இருந்து பொசும்பலா(தூறல்) விழுந்துக்கிட்டு இருந்தது. கிராமத்துல வந்து, தாத்தா வளர்க்குற ஆடு,மாடு,கோழி எல்லாத்தோடவும் விளையாடனும் அப்டின்னு ஆசையா வந்த ஷிவானிக்கு ஏமாற்றமா இருந்தது. அதனால, அவ அவங்க தாத்தாவோட செல்பேசிய வாங்கி அதுல விளையாட ஆரம்பிச்சிட்டா.. வானத்துல முகாமிட்டு இருந்த மேகக்கூட்டம் மெல்லமா விலகி, சூரியக்மேலும் படிக்க…