திண்டுக்கல்லைச் சொந்த ஊராகக் கொண்ட முனைவர் வே.வசந்திதேவி வரலாற்றில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்நாட்டின் மூத்த முக்கிய கல்வியாளர்களில் ஒருவரான இவர், 1992-98ஆம் ஆண்டுகளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை பதவி வகித்த பெருமைக்கு உரியவர்.மேலும் படிக்க –>

சிங்கப்பூரில் நடந்த சதுரங்க விளையாட்டுப் போட்டியில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் தொம்மராஜூ, சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளார்.மேலும் படிக்க –>

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பதக்கங்களை வென்றவர், மிகவும் பாராட்டுக்குரிய மாரியப்பன் அவர்களைப் பற்றி இந்த மாதம் இவர் யார் தெரியுமா? பகுதியில் தெரிந்து கொள்வோம் குழந்தைகளே!மேலும் படிக்க –>

குழந்தை இலக்கிய படைப்பாளர்களில் குறிப்பிடத் தக்கவர், வாண்டு மாமா. வி.கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் என்ற ஊரில் பிறந்தவர். இளம் வயதில் தந்தையை இழந்த இவர், திருச்சியில் அத்தை வீட்டில் வளர்ந்தார்.
சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில், இவருக்கு நாட்டம் இருந்தது. கதை எழுதுவதிலும், இவருக்கு ஆர்வம் அதிகம். பள்ளியில் படித்த போது இவர் எழுதிய ‘குல்ருக்’ என்ற கதை, கலைமகளில் வெளியாகிப் பரவலான கவனம் பெற்றது. ‘கெளசிகன்’ என்ற புனை பெயரில், பெரியவர்களுக்காகப் பிரபல பத்திரிக்கைகளில் கதைகள் எழுதினார். ஆனந்த விகடன் ஓவியர் மாலி இவரைச் சிறுவர்க்காகக் கதை எழுதச் சொன்னார். இவருக்கு ‘வாண்டு மாமா’ என்ற புனை பெயரைச் சூட்டியதும், ஓவியர் மாலி தான்.
கல்கியின் ‘கோகுலம்’ இதழில், 23 ஆண்டுகள் பணி புரிந்து, சிறுவர்க்காகக் கதை,கட்டுரைகள் எழுதினார். அவற்றுள் ‘பலே பாலு’ சமத்து சாரு’ஆகியவை குறிப்பிடத் தக்கவை.
1984இல் ‘பூந்தளிர்’ இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். இந்த இதழில் படக்கதை,நீதிக்கதை ஆகியவற்றை, அழகான படங்களுடன் கொடுத்தார். அறிவியல் தொழில் நுட்பச் செய்திகளையும், பொது அறிவுச் செய்திகளையும், எளிய தமிழில் எழுதினார். இவர் ஓவியராகவும். இதழ் வடிவமைப்பாளராகவும் இருந்தமையால், பல்வேறு புதுமைகளைப் ‘பூந்தளிர்’ இதழில் புகுத்தினார். பல அயல்மொழி இலக்கியங்களையும், தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
இவர் எழுதியுள்ள 160க்கும் மேற்பட்ட நூல்களில், 150 சிறுவர்க்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. 65 ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றிய இவர், தம் நூல்களுக்காகப் பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் படிக்க –>

வைஷாலி செஸ் விளையாட்டில், தமிழ் நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.மேலும் படிக்க –>

சென்னை மருத்துவக் கல்லூரியில், எம்பிபிஎஸ் முடித்த லட்சுமி சாகல் இளம் வயது முதலே, நம் நாட்டின் விடுதலை குறித்து அக்கறை  கொண்டு இருந்தார்.மேலும் படிக்க –>

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வீர மங்கையரில் ஒருவரான, கிட்டூர் ராணி சென்னம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்வோம் மேலும் படிக்க –>

ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louis Carson) அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்க மீன்வளப் பணியகத்தில், கடல் உயிரியலாளராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார்மேலும் படிக்க –>