‘தன் கையே தன் உதவி’, பதற்றம் நம் திறமையை மறக்கடிக்கச் செய்யும், பதற்றத்தில் நம் மூளை வேலை செய்யாது என்ற கருத்தைக் கொண்ட கதையிது.மேலும் படிக்க –>

கோவை தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிவர்ஷ்னி ராஜேஷ். தம் ஒன்பதாவது வயதில், இந்தச் சிறுவர் கதை நூலை வெளியிட்டுள்ளார்.மேலும் படிக்க –>

இதில் குழந்தைகள் ரசிக்கக் கூடிய 10 கதைகள், இத்தொகுப்பில் உள்ளன. குழந்தைகளின் அன்பு நிறைந்த உலகை அற்புதமாய்ப் படம் பிடிக்கும் கதையிது.மேலும் படிக்க –>

தேன் மிட்டாய் சாப்பிட விரும்பும் சிறுவன் முகிலனுக்கு, அவனது அம்மா வாங்கிக் கொடுத்தாரா? முகிலனுக்கு அவனது நாய்க்குட்டி, தேன் மிட்டாய் சாப்பிட எப்படி உதவியது, தேனை விட சுவையான பண்டத்தை, காட்டில் முகிலனுக்கு யார் யாரெல்லாம் கண்டுபிடிக்க உதவினார்கள், அதன் சிறப்புகள் என, பல்வேறு தகவல்களின் களஞ்சியமாக, இந்நூலை ஆசிரியர் எழுதி உள்ளார்.மேலும் படிக்க –>

இதில் மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி என இரண்டு கதைகள் உள்ளன முதலாவது பைலோரஷ்ய நாடோடிக்கதை. இரண்டாவது வடசோவியத் கதை.  இரினா ஸெலஸ்னோவா ஆங்கிலத்தில் எழுதிய இக்கதைகளைச் சரவணன் பார்த்தசாரதி, தமிழாக்கம் செய்திருக்கிறார்.மேலும் படிக்க –>

இந்நூலில் பறவைகளின் தமிழ்ப்பெயர்களும், நூலின் இறுதியில் அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்களும், கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்ற, பறவை சரணாலயங்கள் குறித்தும் இப்புத்தகம் பேசுகின்றது. சரணாலயங்கள் அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள், பறவைகளைப் பாதுகாப்பதில் காட்டும் இயல்பான ஆர்வத்தையும் அக்கறையையும் குறித்து, ஆசிரியர் வியந்து பேசுகிறார்.
தமிழகப் பறவைகளின் பெயர்கள், அவற்றின் இயல்புகள், தோற்றம், சரணாலயங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள, வாசிக்க வேண்டிய புத்தகம். சிறுவர் முதல் பெரியவர் வரை, இயற்கையிலும், பறவை கூர் நோக்கலிலும் ஆர்வம் ஏற்படுத்த, உதவும் புத்தகம்.மேலும் படிக்க –>

ரஷ்ய எழுத்தாளர் டட்டியானா மக்கரோவா (Tatiana Makarova) எழுதிய ‘The Brave ant’ என்ற கதையைச் சரவணன் பார்த்தசாரதி, ‘படகோட்டி எறும்பு’ என்ற தலைப்பில், தமிழாக்கம் செய்துள்ளார்.மேலும் படிக்க –>

இக்கதையில் கராத்தே முட்டன் ஆடு என்ற ஆட்டுக்கடா செய்யும் சாகசங்கள் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளனமேலும் படிக்க –>