“பாட்டி, தாத்தா எங்க இருக்கீங்க? நாங்க ஸ்கூல்லேர்ந்து வந்துட்டோம்!”

“வாங்க, வாங்க வினிதா கண்ணு!” -பாட்டி

“ராமு கண்ணு! ஓடிவாங்க இஸ்கூல் போய்டு வந்துட்டீங்களா?” -தாத்தா

ராமு “ம்ம்.. வந்துட்டோம் தாத்தா! தாத்தா எனக்கு சாப்ட எதாவது காரமா வேணும்.”

வினிதா “இல்ல இல்ல! எனக்கு இன்னிக்கு சாப்ட ஸ்வீட்டு தான் வேணும்…”

தாத்தா “சரி சரி! ரெண்டு பேரும் சண்டைபோட கூடாது. நீங்க கேட்ட ரெண்டுமே செய்யலாம். போங்க போய் கைகால் கழுவிட்டு வாங்க”

“சரி தாத்தா..”

ராமு “பாட்டி! என்ன வாசனை இது ?சூப்பரா இருக்கு… ஹான் நிலக்கடலைய வறுக்கறீங்களா? இதுல என்ன செய்யப் போறீங்க?”

பாட்டி “உனக்குப் பிடிச்ச மாதிரி காரக் கடலை செய்யப் போறேன் டா கண்ணு..”

ராமு “எப்டி பாட்டி.. நானும் உங்களுக்கு உதவி செய்றேன்.”

பாட்டி “சரிடா கண்ணு! அந்த வறுத்த வேர்க்கடலைய  இந்தப் பாத்திரத்தில போடு, அது கூட பொடியா நறுக்கி வதக்கின வெங்காயம், தக்காளி, கேரட் எல்லாத்தையும் சேர்த்துடுங்க, அப்றம் அதுமேல கொஞ்சம் காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு எல்லாத்தையும் ருசிக்கு ஏத்தாப்பல போடனும்.

அதுக்கும் மேல பொறி  கொஞ்சம் தூவிக்கங்க. எல்லாத்தையும் நல்லா கலந்துட்டு அதுமேல ஒரு பிடி கொத்தமல்லி தழையத் தூவி எடுத்து வச்சா, என் பேராண்டிக்குப் பிடிச்ச காரக் கடலை ரெடி!”

ராமு “ஹையா காரக் கடலை, ரொம்ப வாசனையா இருக்கு. வினிதா உங்க இனிப்பு என்னாச்சு?”

kadalai 1

வினிதா “தாத்தா நம்ப இனிப்பு செய்ய என்ன பண்ணனும்?”

தாத்தா “மிக்ஸில இந்த வறுத்த கடலைய ரெண்டு டம்ளர் அளவு போடு பாப்பா. அதைக் கொஞ்சம் கொறகொறப்பா அரச்சுக்கோங்க.. அரச்சுட்டீங்களா?”

 வினிதா “ம்ம் ஆச்சி தாத்தா! அடுத்து?”

தாத்தா “அடுத்து ரெண்டு டம்ளர்  கடலைக்கு ஒன்றரை டம்ளர் வெல்லம் எடுத்து, அதையும் கடலை கூடச் சேர்த்து வாசனைக்கு ஏலக்காயும் சேர்த்து அரைச்சுடுங்க.. அத ஒரு தட்டில போட்டு கொஞ்ச  கொஞ்சமா நெய்விட்டு உருண்ட பிடிச்சு எடுத்தா கடலை உருண்டை ரெடி!”

kadalai 2

ராமுவும் வினிதாவும் அவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.

டிப்ஸ் கார்னர்
பனைவெல்லத்தை நன்கு இடித்து ஒரு கிலோ வெல்லத்திற்கு கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த வெல்லக் கரைசலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகித்து வரலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
3 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments