அனு, “ஹாய் பூஞ்சிட்டுக்களே! உங்க பிண்டு மற்றும் அனு வந்தாச்சு! இதுவரை நாங்க சொல்லித் தந்த சின்னச்சின்ன சோதனைகளைச் செய்து பாத்தீங்களா? இந்த வாரம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு அட்டகாசமான விஷயம் சொல்லித் தரப் போறோம். அது என்னன்னு நீயே சொல்லிடேன் பிண்டு”

ஹலோ பட்டூஸ்! இந்த வாரம் சூப்பரான காகிதப் பூக்களை செய்யப் போகிறோம். அதை வெச்சு நீங்க உங்க வீட்டை அலங்கரிக்கலாம். அனு பின்வரும் பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வா சீக்கிரம் என்றது பிண்டு.

தேவையான பொருட்கள்

1. பேப்பர் டவல்/ ஃபில்டர் பேப்பர்

2. கலர் மார்க்கர்/ ஸ்கெட்ச் பென்ஸ்

3. பேப்பர் கப்

4. தண்ணீர்

5. கத்தரிக்கோல்

6. பைப் க்ளீனர்

செய்முறை:

1. முதலில் பேப்பர் கப்பில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை தூரம் வைத்து விடுங்கள்.

2. பிறகு ஃபில்டர் பேப்பரில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறத்திலுள்ள மார்க்கரை வைத்து வட்டம் வடிவமாக வரைந்து கொள்ளுங்கள்.

flower1

3. அடுத்து ஃபில்டர் பேப்பரை குறுக்காக மடித்து, பிறகு மீண்டும் ஒரு முறை மடித்து கூம்பு வடிவம் போல் மடித்துக் கொள்ளுங்கள்.

5. மடிக்கப்பட்ட காகிதத்தின் வெளியே உள்ள ஓரத்தை நெளி நெளியாக வெட்டிக் கொள்ளுங்கள்.

6. இப்போது அந்த காகிதத்தை அப்படியே தண்ணீர் உள்ள கோப்பையில் வைத்து விடுங்கள். இது மிகவும் முக்கியமான பகுதி, தண்ணீர் காகிதத்தின் நுனியை மட்டுமே தொடும் அளவு இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

flower2

7. அதன் பிறகு பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் காத்திருங்கள். காகிதத்தின் நடுவே நான் வரைந்த வட்டத்தில் உள்ள வெவ்வேறு நிறங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரிந்து அழகான பூவைப் போல் வெளிப்படும்.

flower3

8. இந்த காகிதப் பூவை பைப் க்ளீனர் வைத்துச் சுற்றி காம்பு போல் வடிவமைத்து தொட்டியில் வைத்து அழகு பார்க்கலாம்.

flower4
Image Source: Instructables.com

பிண்டு சொல்லித் தந்ததன்படி அனுவும் செய்தாள்

வாவ் பிண்டு! அப்படியே உண்மையான பூ மாதிரி இருக்கு, இந்த எக்ஸ்ப்ரிமெண்ட் பெயர் என்ன?

இதன் பெயர் காகித வண்ணப்படிவுப் பிரிகை அதாவது பேப்பர் க்ரோமெட்டோக்ராஃபி. காகிதமும், தண்ணீரும் சேர்ந்து கலர் பேனாவில் உள்ள நிறங்களை அதன் தன்மைக்கு ஏற்ப பிரிக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு நிறமும் தனித்தனியாக பிரிந்து அழகாகத் தெரிகிறது.

அறிவியல் உண்மைகள்:

காகித வண்ணப்படிவப் பிரிகை ஒரு கலவையில் உள்ள வெவ்வேறு நிறமிகளை ( பிக்மெண்ட்ஸ்) தனித்தனியே பிரித்தெடுக்க உதவுகிறது. பொதுவாக எந்த நிறமி தண்ணீரில் வேகமாகக் கரைகிறதோ அந்த நிறமியே முதலில் காகிதத்தின் நுனியை எட்டும்.

அதன் படி பார்த்தால் ஆரஞ்சு நிறம்  முதலிலும், அதனைத் தொடர்ந்து மஞ்சள் நிறமும் எட்டும்.

காகித வண்ணப்படிவுப் பிரிகையின் பயன்கள்.

1. இரு வேறு நிற மையினை ஒப்பிட்டு பார்க்க உதவும்.

2. உணவுப் பொருட்களுக்கு செயற்கை நிறமூட்டும் போது பல வித வண்ணங்களை ஒப்பீடு செய்ய உதவும்.

3. மருத்துவ சோதனைகளுக்கு உபயோகப்படும்.

4. தாவரங்களின் வேர் மற்றும் இலையில் உள்ள நிறமிகளைப் பிரித்தெடுக்க உதவும்.

என்ன குட்டீஸ்! இந்த சோதனை ரொம்பவே எளிமையானது ப்ளஸ் அழகானதும் கூட. சீக்கிரம் செய்து பார்த்து மகிழுங்கள். அடுத்த மாதம் வேறொரு அட்டகாசமான சோதனையோடு வருகிறேன் பாய் டாடா!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments