வென்ட்ரிலோக்விசம்

போன இதழ்ல, குழந்தைகளுக்கு பாட்டியும் தாத்தாவும் கதை சொன்னாங்கல்ல! அதுல ஒரு விசேஷம் இருந்ததே! ஞாபகம் இருக்கா? அது என்னன்னு இந்த இதழ்ல பாக்கலாமா? 

தங்கள் கைகளில் கரடி பொம்மையும் குரங்கு பொம்மையும் மாட்டிக் கொண்டு பட்டு தாத்தாவும் பார்வதி பாட்டியும் குழந்தைகளுக்கு கதை சொல்லி முடித்தார்கள். 

“கதை எப்டி இருந்துச்சு?” தாத்தா கேட்க,

டெடியும் மங்கியும்,

“நல்லாவேல்ல!” என்று ஒரே குரலில் கூற,

“ரொம்ப நல்லா இருந்துச்சு..” என்று குழந்தைகள் எல்லாம் கோரசாகச் சொன்னார்கள். 

“பட்டு! இது எப்டி? டெடி பேசும் போது உங்க குரல் கேக்குது! மங்கி பேசும்போது பாட்டி குரல் கேக்குது! ஆனா உங்க ரெண்டு பேர் வாயும் அசையவேயில்லையே?” என்று மித்து கேட்டான். 

Ventriloquism  –  வென்ட்ரிலோக்விசம்பிறிது இட குரல் பாங்கு இல்லன்னா, பிறிது இட குரல் கலை அப்டீன்னு சொல்வாங்க.” என்றார் பட்டு தாத்தா. 

“அப்டீன்னா?” என்று மித்து வியப்பாகக் கேட்க, 

“எதாவது புரியற மாதிரி பேசறீங்களா?” என்று டெடியும் மங்கியும் ஒரே குரலில் தாத்தாவை வம்புக்கு இழுத்தன. 

இதைக் கேட்ட பாட்டியும் குழந்தைகளும் கொல்லென்று சிரித்தனர். 

“ஹா.. ஹா..” என்று வாய்விட்டுச் சிரித்துவிட்டு,

“அதாவது, ஒருத்தரோட குரலை வேற இடத்தில இருந்து வர வைக்கும் கலை!” என்றார் தாத்தா.

“இப்ப தாத்தாதான் டெடிக்கு குரல் குடுக்கறார்ன்னு உங்களுக்கு தெரியுது. ஆனா தாத்தாவோட உதடுகள் அசையாது. அதே மாதிரி மங்கிக்கு நாந்தான் குரல் குடுக்கறேன்னு உங்களுக்கு தெரியும்னாலும் என் உதடுகளும் அசையாது. இது ஒரு மேடை வித்தைன்னு சொல்வாங்க. அதாவது ஸ்டேஜ் ஷோ! இதுக்கு ஸ்பெஷலா பயிற்சி செய்யணும்.” என்றாள் பாட்டி. 

“ஆமா! கையில ஒரு பப்பெட் அதாவது பொம்மை வெச்சிகிட்டு அதை அசைத்து அசைத்து குரல் மாத்தி அந்த பப்பெட் / பொம்மை பேசற மாதிரி பேசிக் காட்டி பார்வையாளர்களை மகிழ்விக்கற கலை. இந்த மேஜிக் ஷோ, சர்க்கஸ் எல்லாம் இருக்குல்ல.. அது மாதிரி..” என்றார் தாத்தா. 

“சூப்பர் பட்டு!” என்று குதூகலித்தான் மித்து. 

“நானும் இது மாதிரி பேசணும்! எனக்கும் கத்து குடுப்பீங்களா?” என்று கேட்டான் ஒரு சிறுவன். 

“ஓ.. கத்து குடுக்கறேனே..” என்றார் தாத்தா. 

“ஐய.. இவரே ஒரு அரைகுறை.. இவர்கிட்ட போய் நீ இதக் கத்துக்கப் போறியா? சுத்தம்!” என்று நக்கலடித்தது டெடி! 

“ஏன்? இவர்கிட்டேந்து நா கத்துகிட்டேனே.. நல்லாதானே பேசறேன்?” என்று பாட்டி தாத்தாவுக்காக வக்காலத்துக்கு வந்தாள். 

“என்ன நல்லா பேசற? நா பேசறத நீ பேசறேன்னு பசங்க கண்டுபிடிச்சிட்டாங்க! இது போய் நல்லா இருக்கா?” என்று மங்கி குற்றம் சுமத்தியது. 

தாத்தாவும் பாட்டியும் அசடு வழிய சிரித்தனர். 

“ஏய் டெடி! ஏய் மங்கி! ரெண்டு பேரும் சும்மா இருக்க மாட்டீங்க? எங்க பட்டு தாத்தாவும் பார்வதி பாட்டியும் சூப்பரா பேசறாங்க! தாத்தா! அதுங்க கிடக்குது! நீங்க எங்களுக்கு கத்து குடுங்க தாத்தா!” என்று குழந்தைகள் தாத்தாவுக்காகவும் பாட்டிக்காகவும் பரிந்து வந்தனர். 

“ஹா.. ஹா.. சரி பசங்களா.. நானே கத்து தரேன்.. ஆனா இப்ப இல்ல.. உங்க பள்ளிக் கூட தேர்வுகள் எல்லாம் முடிஞ்சதும் நா கத்து தரேன்..” என்றார் தாத்தா! 

“எக்சாம்ஸா? அட போங்க தாத்தா! எப்ப ஸ்கூல் தெறப்பாங்கன்னே தெரியல.. அது வரைக்கும் உருப்படியா இதையாவது கத்துக்கறோம்..” என்றான் மித்து. 

“அதுவும் சரிதான்.. சரி.. நாளைலேர்ந்து நா உங்களுக்கு இந்த வென்ட்ரிலோக்விசம் கத்து தரேன்.” என்று தாத்தா சொல்ல, குழந்தைகள் உற்சாகத்துடன் கூச்சலிட்டனர். 

“உங்களுக்கு தேவைப்படற பப்பெட்டை நா தைச்சி தரேன்! யார் யாருக்கு என்ன பொம்மை வேணும்ன்னு சொல்லுங்க?” என்று கேட்டாள் பாட்டி. 

“எனக்கு ஜாக்கி ச்சான்!”

“எனக்கு டோரா!” 

“எனக்கு ச்சோட்டா பீம்!” 

“எனக்கு சின் சேன்!” என்று குழந்தைகள் எல்லாம் தங்களுக்கு விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரங்களின் பெயர்களை தேர்வு செய்து கூற, பாட்டி எல்லாவற்றையும் அழகாய் குறித்துக் கொண்டாள். 

“சரி! நா ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பொம்மையா தைச்சி தரேன்! ஓகேயா?” என்று பாட்டி கூற,

“பாத்தீ! என்க்கு அந்த பொம்ம எப்தி செய்ணும் சொல்லி தாங்க! என் பொம்ம நானே செய்ணும்!” என்று மழலை மாறாமல் ஒரு குட்டிக் குழந்தை கூறியது. 

பாட்டி வாஞ்சையுடன் குழந்தையின் கன்னம் வழித்து முத்தமிட்டாள். 

“கண்டிப்பா கத்து தரேண்டீ செல்லக்குட்டி!” என்று கொஞ்சினாள் பாட்டி. 


என்ன சுட்டீஸ்! இந்த சுட்டி மித்துவும் பட்டு தாத்தாவும் கதை சீரிஸ் உங்களுக்கு பிடிச்சிருந்ததா? இந்த சீரீஸ்ல வந்த எந்த கதை உங்களுக்கு பிடிச்சிருந்துதுன்னு கண்டிப்பா கமெண்ட் பண்ணுங்க.

இந்த இதழோட சுட்டி மித்து, பட்டு தாத்தா மற்றும் பார்வதிப் பாட்டி உங்க கிட்டேர்ந்து விடை பெற்றுக்கறாங்க! அவங்களுக்கு டாட்டா பை பை சொல்லிடுங்க! 

அடுத்த இதழ்லேர்ந்து வேற ஒரு சூப்பரான த்ரில்லிங்கான சீரிஸோட வரேன்.

அது வரைக்கும் சமத்தா இருங்க!

பை! பை! டாட்டா!

👋👋👋👋👋👋👋👋

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments