அன்று சிட்டு முன்னதாகவே பூங்காவுக்கு வந்து காத்திருந்தது. பிறகு குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்.  எல்லோரும் முகத்தில் முக்ககவசம் போட்டிருந்தனர்.

“கொரோனா இரண்டாவது அலை கொழந்தைகளைக் கூடப் பாதிக்குதாம்..  அதனால நீங்க எல்லாருமே முகக்கவசம் போட்டுக்கிட்டுப் பத்திரமாக இருங்க” என்றது சிட்டு.

“ஆமாமாம். அதனால எங்களை வெளியிலேயே விட மாட்டேங்குறாங்க.  இன்னிக்குக் கூட ரொம்பக் கெஞ்சிக் கேட்டுத் தான் வந்தோம்” என்றாள் கயல்.

“நல்லது தான். இப்பவும் நல்லாத் தள்ளித் தள்ளி ஒட்காருங்க” என்றது சிட்டு.

“சே! வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கெடக்குறது, ரொம்பக் கொடுமையா இருக்கு. எப்ப தான் இந்தக் கொரோனா ஒழியுமோ, தெரியலை” என்று அலுத்துக் கொண்டான் பாபு.

“எல்லாருக்கும் தடுப்பூசி போட்டுட்டா, இந்தக் கொரோனாவை ஒழிச்சிடலாம்.  சீக்கிரமே இது ஒழிஞ்சிடும்னு நம்புவோம்” என்றது சிட்டு.

எல்லாரும் போதுமான இடைவெளி விட்டு அமர்ந்தவுடன், சிட்டு சொல்ல ஆரம்பித்தது.

அப்பட்டோசரஸுக்கு அடுத்தபடியா இன்னொரு தாவரவுண்ணி(Herbivorous)  அங்கிலோசரஸ் (Ankylosaurus).  இதுவும் ரொம்ப பெரிய டைனோசர் தான். நாம ஏற்கெனவே பார்த்த ஸ்டிகோசரஸ் (Stegosaurus) மாதிரி, இதுவும் முதுகிலேயும், பக்கவாட்டுலேயும் கவச உடை அணிஞ்சது.. முதுகுல இருக்கிற எலும்பால ஆன கூரான கத்தி மூலமாத் தாக்க வர்ற மத்த டைனோசர்க்கிட்டேயிருந்து தன்னைக் காப்பாத்திக்கும். 

Ankylosaurus
Ankylosaurus_Wikimedia

கிரிட்டேஷியஸ் காலத்தோட பிற்பகுதியில வட அமெரிக்காவுல வாழ்ந்திருக்கு.  தலை சதுரமாவும், தட்டையாவும் இருக்கும்.  அதோட கால்கள் நல்ல வலுவாவும், தடிமனாவும் இருந்திருக்கு.

“யானைக் கால் மாதிரி, இருந்திருக்குமோ?” என்றாள் மலர்.

“இருந்திருக்கும்.. அவ்ளோ பெரிய ஒடம்போட எடையைத் தாங்கணுமே.  அதுக்கு ஏத்த மாதிரி தான் இருந்திருக்கும்.  இதுக்கு இன்னொரு ஸ்பெஷல் இருக்கு”.

“அதென்ன?” என்றான் வினோத்.

“நெறைய எலும்பு சேர்ந்து, வாலு மொத்தமான  உருண்டையா இருந்திருக்கு. அதால தன்னைத் தாக்க வர்ற டைனொசர் மூஞ்சியில தூக்கி வீசித் தன்னைக் காத்துக்குமாம்”.

“மொத்தமான வாலால சுழட்டி அடிச்சவுடனேயே எதிரி பயந்து போய் ஓடியிருக்கும்” என்றான் கதிர்.

“ஆமாம். அது முதல் தற்காப்பு. அப்படியும் முதுகில பாய்ஞ்சுதுன்னா,  இருக்கவே இருக்கு, கூர் கூரான கவசம்.  அது எதிரியைக் குத்திக் கிழிச்சிடும்” என்றது சிட்டு.    

“அடுத்தது டிரைசெராடாப்ஸ் (Triceratops) னு, ஒரு தாவரவுண்ணி வகை இருந்திருக்கு. இதுக்குத் தலையில மூணு கொம்பு.  இதுவும் பெரிய டைனோசர் வகை தான்”

Triceraptous 1
Triceratops

“ஆச்சரியமாயிருக்கே!  எல்லாத்துக்கும் ரெண்டு கொம்பு தான் இருக்கும். இதை மூணு கொம்பு டைனோசர்னு, சொல்லலாமா?”  என்றாள் மலர்.

“லத்தீன் மொழியில மூணு கொம்பு முகம்னு தான், இதுக்கு அர்த்தமாம்.  இதுவும் வட அமெரிக்காவில தான், வாழ்ந்திருக்கு” என்றது சிட்டு.

“இதோட தலை ரொம்பப் பெருசு.. சிலதுக்கு மண்டைஓடு, மூணு மீட்டர் நீளம் வரைக்கும் கூட இருந்திருக்குதாம்”

“ஏ அப்பா! மண்டையோடு மட்டுமே மூணு மீட்டரா?” என்று வாய் பிளந்தான் முத்து.

“மூணு கொம்பு மட்டும் இல்லாம, மண்டையோடு முடியுற இடத்துல கூரான முள்ளு நெறைஞ்சு வளைவான பகுதி நீட்டிக்கிட்டு இருந்திருக்கு”.

“இதுவும் பயங்கரமான டைனோசர் தான் போலருக்கு” என்றாள் மலர்.

இதுங்க யாரையும் தாக்குறதில்லே.  தன்னைத் தாக்க வர்ற டைனோசர்க்கிட்டேயிருந்து, காப்பாத்திக்கத் தான் இவ்ளோ பாதுகாப்பு. சரி! இன்னிக்கு இது போதும்.  எல்லாரும் பத்திரமா வீட்டுக்குப் போங்க.  நானும் கெளம்புறேன். மத்ததை அடுத்த மாசம் பார்க்கலாம்” என்றது சிட்டு.

எல்லாரும் சிட்டுவுக்கு டாட்டா சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினர்.

என்ன குழந்தைகளே! சிட்டு சொன்ன டைனோசர் கதை ஒங்களுக்குப் பிடிச்சிருக்கா? டைனோசர் பத்தி ஒங்களுக்கு ஏதாவது சந்தேகம்னா சிட்டுக்கிட்ட கேளுங்க.  அடுத்த மாசம் சிட்டு ஒங்க கேள்விக்குப் பதில் சொல்லும்.

கேள்வியை அனுப்ப வேண்டிய முகவரி:-

feedback@poonchittu.com

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments