குட்டிச் செல்லங்களே! சென்ற மாதம் அறிமுகப்படுத்திய தையல் சிட்டுவை, யாராவது கவனித்துப் பார்த்தீர்களா?  இந்த மாதம், உங்களுக்கு அறிமுகம் செய்யப்படும், குருவியின் பெயர் கரிச்சான். மைனாவை விட அளவில் சிறியது; அடர்ந்த கருப்பு நிறம். இதன் பெயர் தெரியாவிட்டாலும், அடிக்கடிப் பார்த்திருப்பீர்கள்.  மின்சாரக் கம்பிகளில் அமர்ந்து, ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கும்; வயல்வெளிகளில்  மேயும் ஆடு, மாடுகளின் மேல் அமர்ந்து, ஒய்யாரமாகச் சவாரி செய்யும். அவற்றின் மேல் உள்ள உண்ணிகளையும், ஈக்களையும்மேலும் படிக்க –>

குழந்தைகளே!  நம் நாட்டின் விடுதலைக்காகப் பலர், தங்கள் உயிரையும், வாழ்க்கை யையும், தியாகம் செய்திருக்கிறார்கள்.  அவர்களுடைய உழைப்பின் பயனைத் தாம், நாம் இப்போது, அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  சுதந்திர தினத்தின் போது, அவர்களுடைய சேவைகளை நினைவு கூர்வது, அவர்களுக்கு நாம் செலுத்தும், நன்றிக்கடன் ஆகும். இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட தியாகிகளுள், அஞ்சலை அம்மாள் என்பவரும் ஒருவர். கடலூரில் பணவசதி இல்லாத, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமேமேலும் படிக்க –>

கதிர், கயல், முத்து, மலர், வினோத், ஆகிய அனைவரும் ஒரே தெருவில் குடியிருக்கும் குழந்தைகள்.  கதிரும், மலரும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள்; மற்ற மூவரும் ஐந்தாம் வகுப்பு.. ஒவ்வொரு ஞாயிறும், அடுத்தத் தெருவிலிருந்த பூங்காவில் எல்லோரும் சேர்ந்து சறுக்குமரம் விளையாடுவார்கள்; ஊஞ்சலில்  ஆடுவார்கள்; தொலைக்காட்சியில் தாங்கள் பார்த்த கார்ட்டூன் குறித்துப் பேசுவார்கள்.  அந்தப் பூங்காவிற்குத் தினமும், தேன் உண்ண வந்தக் குருவிக்கூட்டத்தில், பூஞ்சிட்டு ஒன்றும் இருந்தது.  சில நாட்களில், அந்தப்மேலும் படிக்க –>

குட்டிச் செல்லங்களே!   இயற்கையின் அதிசயங்கள் ஏராளம்;  பறவைகளைப் பற்றி,  விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ளும் போது, இத்தனூண்டு ஜீவனுக்கு, இவ்வளவு அறிவா என்று மூக்கின் மேல், விரல் வைப்பீர்கள்!  ஆனால் இது கொரோனா சமயமாதலால், கைகளைச் சுத்தமாகக் கழுவாமல், மூக்கிலோ, வாயிலோ வைக்கக் கூடாது; ஜாக்கிரதை! ஓ.கே?   ஒவ்வொரு பறவையும் கூடு கட்டுவதிலும், குஞ்சுகளைப் பராமரிப்பதிலும், உணவு உண்பதிலும், ஒன்றிலிருந்து இன்னொன்று, முற்றிலுமாக வேறுபடுகின்றது.  ஒன்று போல், இன்னொன்றுமேலும் படிக்க –>