அவ்வழகிய தேசம் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டு இருந்தது. ஆம், அத்தேசத்தின் வளமையைப் பெருக்க சகி நதி அழகிய தேசத்தை சுற்றி சூழ்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. அந்நாட்டின் பெயரும் சகி தான். ‘சகி’ என்றால் தோழி என்பது பொருள். சகி நாடும் நாட்டு மக்களும் மிகுந்த தோழமை உணர்வு உள்ளவர்கள்.  சகி நதியில் அழகழகான வஜ்ரா எனும் மீன்கள் காணப்பட்டன. அந்நாட்டிற்கு வறுமை என்பதே கிடையாது யாரும் எதையும் விளைவிக்கமேலும் படிக்க –>

புளூட்டோ கிரகமா இல்லையா? நித்யா, விழுப்புரம் பல காலமாகச் சூரியனைச் சுற்றும் கிரகங்களின் எண்ணிக்கை 9 என்றும் ஒன்பதாவது கிரகம் புளூட்டோ என்றும் சொல்லப்பட்டது.2006 ஆம் ஆண்டு வானியல் அறிஞர்கள் புளூட்டோ கிரகமல்ல; அது ஒரு குள்ளக் கிரகம் (Dwarf planet) என்று அறிவித்தனர்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன தெரியுமா? கிரகம் சூரியனை மையமாக வைத்த வட்டப்பாதையில், சூரியனைச் சுற்ற வேண்டும். கோள வடிவில் ஈர்ப்பு விசையுடன் இருக்கமேலும் படிக்க –>

கீச் கீச் கீச்!  பூஞ்சிட்டு வந்திருக்கேன்! ஓடி வாங்க செல்லங்களே! கணிணியிலும்,தொலைக்காட்சியிலும் பாடம் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்க எல்லோருக்கும் சிட்டுவின் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! இந்த இனிய நாளில், நம் நாட்டு விடுதலைக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த தியாகிகளைப் போற்றி வணங்க வேண்டும்; போன மாதம் மாயக்கட்டம் சரியாகச் செய்து, விடையெழுதிய எல்லோருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.  கதைகளைப் படித்தீர்களா? பிடித்திருந்ததா?  கடி ஜோக்கைப் படித்துவிட்டுச் சிரித்தீர்கள் தானே? யாரெல்லாம்மேலும் படிக்க –>

திரு. இரவிசங்கர் அய்யாக்கண்ணு அவர்கள் பூஞ்சிட்டு என்ற பெயரில் குழந்தைகளுக்கான மின்னிதழ் மலர இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். கடந்த பிப்ரவரி 2020 முதல், திராவிட வாசகர் வட்டம் சார்பில் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி என்னும் போட்டியை நடத்தினோம். இப்போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் இடையே ஒரு இயல்பான நட்பு முகிழ்த்து, அவர்கள் இணைந்து சிறுவர்களுக்கான மின்னிதழை வெளியிட முனைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே போட்டியை ஒருங்கிணைத்த எங்களுக்கான பரிசாகக்மேலும் படிக்க –>

மித்து என்கிற மித்தேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் கெட்டி.  மிகவும் சுட்டி. அவனுடைய அப்பா அரவிந்த் ஒரு வங்கி அதிகாரி. அவனுடைய அம்மா மீனாட்சி ஒரு பள்ளி ஆசிரியை.  சென்னை வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீடு, மூன்றாம் தளத்தில் உள்ளது.  அவனுடைய பக்கத்து வீட்டில் பார்வதிப் பாட்டியும் பட்டாபி தாத்தாவும் வசிக்கிறார்கள். மித்துவும் பட்டாபி தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவன் அவரைமேலும் படிக்க –>

கதிர், கயல், முத்து, மலர், வினோத், ஆகிய அனைவரும் ஒரே தெருவில் குடியிருக்கும் குழந்தைகள்.  கதிரும், மலரும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள்; மற்ற மூவரும் ஐந்தாம் வகுப்பு.. ஒவ்வொரு ஞாயிறும், அடுத்தத் தெருவிலிருந்த பூங்காவில் எல்லோரும் சேர்ந்து சறுக்குமரம் விளையாடுவார்கள்; ஊஞ்சலில்  ஆடுவார்கள்; தொலைக்காட்சியில் தாங்கள் பார்த்த கார்ட்டூன் குறித்துப் பேசுவார்கள்.  அந்தப் பூங்காவிற்குத் தினமும், தேன் உண்ண வந்தக் குருவிக்கூட்டத்தில், பூஞ்சிட்டு ஒன்றும் இருந்தது.  சில நாட்களில், அந்தப்மேலும் படிக்க –>

வணக்கம் செல்லங்களே.. உங்களிடம் முதல் முறையாகப் பேசும்போதே, மிகவும் முக்கியமான செய்தி ஒன்று சொல்லப்போகிறேன்.. முக்கியமான செய்தியா? அப்போ நீங்களும் கொரோனாவைப் பற்றி பேசப் போறீங்களா? அலுத்துக்கொள்ளாதீங்கப்பா! அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதாய், விடுமுறையே கசந்து விட்டது இல்லையா? என்ன செய்வது? மனித குலம் இந்தப பெரும் கொள்ளை நோயோடு போராடிக் கொண்டிருக்கிறதே! ஆனால் நான் அதன் பாதிப்பு விவரங்களின் கணக்கு சொல்லப்போவதில்லை. அந்தக் கொடிய அரக்கனை அழிப்பதற்காக,மேலும் படிக்க –>

ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் தன் வகுப்பு நண்பன் யஸ்வந்தோடு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்காம் வகுப்பு படிக்கும் ப்ரியா அழுதுகொண்டே, தன் அம்மாவிடம் வந்து முறையிட்டாள். “அம்மா..  யஸ்வந்த் என்னை ஹிந்திலயே திட்றான் மா! திட்டிட்டு என்னப் பாத்துப் பாத்து சிரிக்கிறான் வேற மா!”, என்று விசும்பினாள் ப்ரியா. மடிக்கணினியில் ஏதோ வேலையாயிருந்த ப்ரியாவின் அம்மா திவ்யா, “நீ முதல்ல  அழாதே. எதுக்கு உன்ன திட்டினான்? யஸ்வந்தும் நீயும் நல்லமேலும் படிக்க –>