சமையலை முடித்து விட்டு வெளியில் வந்த பிரகதி, தன் தங்கை மகள் ஸ்ருதி மட்டும் வெளியில் சோர்ந்து போய் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள், அவள் அருகில் போய் அமர்ந்தாள். “என்னடா குட்டி இங்க வந்து உட்கார்ந்து விட்டாய், என் செல்லத்துக்கு என்ன ஆச்சு? அண்ணா அக்காகோட விளையாடலையா?”என்று கேட்டு விட்டுத் திரும்பி தன் குழந்தைகளை அழைத்தாள். “இதோ வரோம் மாம்” என்ற சத்தத்துடன் ஆளுக்கொரு போனில் அந்த அபார்ட்மென்ட்  பசங்களுடன், ஆன்லைன்மேலும் படிக்க –>

பள்ளி முடிந்து வெளியில் வந்து பார்த்த வேலன் தன் தங்கை ஜோதியைக் காணாமல் பள்ளி முழுவதும் சுற்றி வந்தான். எங்கேயும் காணாமல் போகவே அவனுக்குப் பயம் அதிகரித்தது. ஏற்கெனவே அழுது கொண்டிருந்தவனுக்கு, இப்பொழுது இன்னும் அழுகை அதிகமானது. எல்லா மாணவர்களும் சென்றிருக்க, ஒவ்வொரு ஆசிரியர்களாக வெளியில் வந்தார்கள். வேலன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த அவனுடைய வகுப்பு ஆசிரியை தேவி, “என்ன வேலன் இன்னும் வீட்டிற்குப் போகலையா?, ஏன் அழுகிறாய்?” என்றார். அவரைப்மேலும் படிக்க –>

“பாட்டி, தாத்தா எங்க இருக்கீங்க? நாங்க ஸ்கூல்லேர்ந்து வந்துட்டோம்!” “வாங்க, வாங்க வினிதா கண்ணு!” -பாட்டி “ராமு கண்ணு! ஓடிவாங்க இஸ்கூல் போய்டு வந்துட்டீங்களா?” -தாத்தா ராமு “ம்ம்.. வந்துட்டோம் தாத்தா! தாத்தா எனக்கு சாப்ட எதாவது காரமா வேணும்.” வினிதா “இல்ல இல்ல! எனக்கு இன்னிக்கு சாப்ட ஸ்வீட்டு தான் வேணும்…” தாத்தா “சரி சரி! ரெண்டு பேரும் சண்டைபோட கூடாது. நீங்க கேட்ட ரெண்டுமே செய்யலாம். போங்கமேலும் படிக்க –>

சிட்டுக் குருவி – இது ஒரு குழந்தைகளுக்கான ஒலித்தளம் (PODCAST) இந்த ஒலித்தளத்தினை தீபிகா அருண் என்பவர் இயக்கி வருகிறார். அவரும் அவரது செல்ல மகளும், மழலைத் தமிழில் சிறுவர்களுக்கான  பாடல்கள், புதிர்கள், சின்னச்சின்ன புதிர்கள், கதைகள் என குட்டிக்குட்டிப் பகுதிகளாகக், கேட்பதற்குச் சுவாரசியமாக உருவாக்கியுள்ளனர். இவ்வொலித்தளத்தினை ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இரண்டிலும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.மேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுக்களே! ஒவ்வொரு  மாதமும்  இந்தப்  பகுதில, நமக்குப் பிடிச்ச குழந்தைகள் நூல்களைப் பத்தியும்,    தொலைக்காட்சித்  தொடர்களைப் பத்தியும் புதுசா என்னென்ன படைப்புகள் வெளிவந்திருக்கு, எந்த வயது குழந்தைகளுக்கான படைப்புகள்ன்னு எல்லா விவரங்களைப் பத்தியும்  அலசப்போறோம். என்ன நிகழ்ச்சி:  பொம்மியும் திருக்குறளும் எங்க பார்க்கலாம்: சுட்டி டிவி மற்றும் யூட்யூப் தளத்தில். யார் யார் பார்க்கலாம்: மூன்று வயது குழந்தைகள்ல இருந்து  பெரிய குழந்தைகளும் பார்க்கலாம். பெரியவங்களும் கூட பார்க்கலாம்.மேலும் படிக்க –>

குழந்தைகளின் க்ரேயான் கலர் பென்சில் டப்பாவில், வெள்ளை நிறத்தில் ஒரு க்ரேயான் இருக்கும். அதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க மாட்டோம். அதை பயன்படுத்தி ஓர் அழகான ஓவியம் செய்யலாமா? மறைந்திருக்கும் மர்மம் என்ன? ஒரு வெள்ளை நிறக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில்  வெள்ளை  நிற க்ரேயான் கொண்டு ஏதேனும் எழுதுங்கள் அல்லது வரைந்து கொள்ளுங்கள். நீங்கள் வரைந்திருப்பது கண்களுக்குத் தெரியாது. அதை எப்படிக் கண்டறிவது? வாட்டர் கலர்  எடுத்துக்மேலும் படிக்க –>

குட்டிச் செல்லங்களே!   இயற்கையின் அதிசயங்கள் ஏராளம்;  பறவைகளைப் பற்றி,  விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ளும் போது, இத்தனூண்டு ஜீவனுக்கு, இவ்வளவு அறிவா என்று மூக்கின் மேல், விரல் வைப்பீர்கள்!  ஆனால் இது கொரோனா சமயமாதலால், கைகளைச் சுத்தமாகக் கழுவாமல், மூக்கிலோ, வாயிலோ வைக்கக் கூடாது; ஜாக்கிரதை! ஓ.கே?   ஒவ்வொரு பறவையும் கூடு கட்டுவதிலும், குஞ்சுகளைப் பராமரிப்பதிலும், உணவு உண்பதிலும், ஒன்றிலிருந்து இன்னொன்று, முற்றிலுமாக வேறுபடுகின்றது.  ஒன்று போல், இன்னொன்றுமேலும் படிக்க –>

கீச் கீச் கீச்! பூஞ்சிட்டு வந்திருக்கேன்!  ஓடி வாங்க செல்லங்களே! உங்களுக்கு ஒரு நல்ல சேதி, சொல்லப் போறேன்! சீக்கிரம் ஓடி வாங்க! மூனு மாசத்துக்கு மேல, கொரோனாவால வெளியில போகமுடியாம வீட்டுலேயே அடைபட்டுக் கிடக்கிறீங்க தானே?  டிவி, கார்ட்டூன் பார்த்துப் பார்த்துப் போரடிச்சிப் போயிடுச்சி தானே? உங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியான ஒரு சேதி! அது என்னன்னா, சின்னப் பசங்களுக்குக் கதை எழுதறவங்க எல்லாரும் சேர்ந்து, என் பேர்ல, ஒருமேலும் படிக்க –>

ஹாய் பூஞ்சிட்டுக்களே! நீங்கல்லாம் வீட்ல கண்ணாடியால் ஆன பாத்திரங்கள் வச்சிருக்கீங்களா? கண்ணாடியால் செய்யப்பட்ட பொம்மைகள், அழகுப் பொருட்கள் வச்சிருக்கீங்களா? அதெல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்குல்ல? அதையெல்லாம் எப்படிக் கையாளணும்? ரொம்ப கவனமா இருக்கணும் இல்லையா?  அதே மாதிரி தான் நம்ம உடம்பும். ஆரோக்கியமா இருக்கிற வரைக்கும் ரொம்ப நல்லா இருக்கும். சின்ன பிரச்சனை வந்தால் கூட உடைஞ்சு போக வாய்ப்பு இருக்கு. அதனால எப்பவுமே ஆரோக்கியத்தைக் காப்பாத்திக்கனும். அதுக்குமேலும் படிக்க –>