அன்று மிகவும் சோர்வாக இருந்தாள் சிவானி. பள்ளியில் இன்று அவளது தேர்வு முடிவுகள் சொல்லப்பட்டன. சில பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் சிலவற்றில் மிகக் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தாள். ஓரிரு பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை. சிவானி மிக நல்ல குழந்தை தான். நன்றாக வரைவாள். அழகாகப் பாடுவாள். ஆனால், பாடங்கள் மட்டும் கொஞ்சம் கடினமாகவே இருக்கும் அவளுக்கு. ஆனால், எப்போதும் அவள் தேர்ச்சியடையாமல் இருந்ததில்லை. இன்றோ பாடத்தில் தோல்வியைத் தழுவியதும்மேலும் படிக்க –>

அடுத்த நாள் காலையில் காட்டில் இருந்து கிளம்பிய துருவன் தலைநகரத்தை அடைந்தான். தலைநகரைச் சுற்றி பிரம்மாண்டமான கோட்டையும், அதைச் சுற்றியிருந்த அகழியும் அவனை வரவேற்றன. அகழி என்றால் கோட்டையைச் சுற்றித் தண்ணீரைத் தேக்கி அதில் முதலைகளை விட்டிருப்பார்கள். அந்தக் காலத்தில் கோட்டைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப் படுவது. எதிரி நாட்டினர் படையெடுத்து வரும்போது நீரில் குதித்து நீந்தி வர முயற்சி செய்தால், முதலைகளுக்கு இரையாக வேண்டியது தான். அகழியைக் கடக்கப் பாலம்மேலும் படிக்க –>

குழந்தைகளின் குதூகலம் ‘பட்டு பட்டு!’ என்று அந்த குடியிருப்பின் குட்டிக் குழந்தைகள் எல்லாம் பட்டாபித் தாத்தாவை சுற்றிச் சுற்றி வந்தனர்.  பார்வதி பாட்டிக்கு அதிசயமாக இருந்தது.  ‘என்ன இந்தக் குழந்தைகள் எல்லாம் இன்று இவரை இப்படி மொய்த்துக் கொள்கிறார்கள்? அதிசயமாக இருக்கிறதே!’ என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.  எல்லாம் அந்த தீப்பெட்டி ஃபோனில் பேசும் விளையாட்டு பிடித்துப் போனதால் என்று பாட்டிக்குப் புரியவில்லை.  “பட்டு.. எப்ப பேர்ட் வாச் போறோம்..” மேலும் படிக்க –>

சிவானி ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். கிச்சனிலிருந்து அவளது அப்பா குரல் கொடுத்தார். “சிவானி சாப்பிட வாடா” என அன்பாக அழைத்தார் ஷிவானியின் அப்பா ரகு. “வேணாம் பா, எனக்கு பசிக்கல” என்றாள் சிவானி. “தங்கம், நீ காலையிலயும் அரை தோசை தான் சாப்பிட்ட. இப்பவும் பசிக்கல ன்னு சொல்ற. அப்பா உனக்காக தான் காய்கறி சாதம் செஞ்சு வெச்சிருக்கேன். வா வந்து அப்பாவோட சேர்ந்து சாப்பிடு” எனமேலும் படிக்க –>

தீப்பெட்டியும் நூலும்.. மித்து தன் குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தான். முகக்கவசம் (mask) அணிந்திருந்தாலும் அவன் முகத்தின் வாட்டம் தெளிவாகத் தெரிந்தது. பட்டாபி தாத்தா தன் மாலை நடைப்பயிற்சியை பாதியில் கைவிட்டுவிட்டு மித்து அமர்ந்திருந்த சிமென்ட் பெஞ்சில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்தார். “என்ன மித்து.. இங்க உக்காந்திருக்க.. வெளையாடப் போகலயா?” என்று கேட்டார். “போ பட்டு.. எல்லாம் உங்களாலதான்..” என்று அவன் கோபம் கலந்த வருத்தத்துடன்மேலும் படிக்க –>

அரசர் வீரமகேந்திரர் பட்டத்தரசி எழினியிடம் மலைக்கோட்டை மாயாவியின் நிபந்தனையை எடுத்துச் சொன்னதுமே பட்டத்தரசி எழினி துடித்துப் போய் விட்டாள். “என்ன இது அநியாயம்? இரண்டு கண்களில் எந்தக் கண் வேண்டும் என்றால் என்ன சொல்ல முடியும்?”  தங்களுடைய கண்ணின் மணியான இளவரசியை மாயாவியிடம் தூக்கிக் கொடுக்கவும் தாய் மனதிற்கு விருப்பமில்லை. ஆனால் நாட்டு மக்களும் அவர்களுக்குக் குழந்தைகள் தானே! அவர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை இழந்து துயரத்தில் துடிப்பதையும் பார்த்துக்மேலும் படிக்க –>

அவ்வழகிய தேசம் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டு இருந்தது. ஆம், அத்தேசத்தின் வளமையைப் பெருக்க சகி நதி அழகிய தேசத்தை சுற்றி சூழ்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. அந்நாட்டின் பெயரும் சகி தான். ‘சகி’ என்றால் தோழி என்பது பொருள். சகி நாடும் நாட்டு மக்களும் மிகுந்த தோழமை உணர்வு உள்ளவர்கள்.  சகி நதியில் அழகழகான வஜ்ரா எனும் மீன்கள் காணப்பட்டன. அந்நாட்டிற்கு வறுமை என்பதே கிடையாது யாரும் எதையும் விளைவிக்கமேலும் படிக்க –>

மித்து என்கிற மித்தேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் கெட்டி.  மிகவும் சுட்டி. அவனுடைய அப்பா அரவிந்த் ஒரு வங்கி அதிகாரி. அவனுடைய அம்மா மீனாட்சி ஒரு பள்ளி ஆசிரியை.  சென்னை வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீடு, மூன்றாம் தளத்தில் உள்ளது.  அவனுடைய பக்கத்து வீட்டில் பார்வதிப் பாட்டியும் பட்டாபி தாத்தாவும் வசிக்கிறார்கள். மித்துவும் பட்டாபி தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவன் அவரைமேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் இரத்தினபுரி என்ற குட்டி தேசம் இருந்தது. அந்த தேசத்தைச் சுற்றித் தான் நமது கதை நகரப் போகிறது. இரத்தினபுரியின் அரசன் வீரமகேந்திரன். பட்டத்தரசி எழினி. மக்கள் நலனில் அதிக அக்கறை காட்டி நாட்டைப் பரிபாலிக்கும் அரசர். அவர் மனதுக்கேற்ற அரசி எழினி. . நாட்டு மக்களைத் தங்களுடைய குழந்தைகளாகவே பாவிக்கும் கருணை உள்ளம் கொண்ட தாயாகவே பட்டத்தரசி இருந்தாள். மக்கள் உள்ளங்களில் தனது அன்பால் ஆட்சி செலுத்தினாள்.மேலும் படிக்க –>