குழந்தைகளே, இன்னைக்கு உங்களிடம் இருக்கும் பழைய காலுறைகளை பயன்படுத்தி, பனி மனிதன் செய்யலாமா?
தேவையான பொருட்கள்:
வெள்ளை நிறக் காலுறை
இரண்டு ரப்பர் பேண்ட்
சாக்சில் நிறைக்க ஏதேனும் தானியம் (அரிசி)
வரைய வண்ணப் பேனாக்கள்.
வண்ண ரிப்பன்
முதலில், உங்கள் சாக்சினுள் அரிசியை நிரப்புங்கள். ஒரு ரப்பர் பேண்ட் அல்லது நூல் கொண்டு இறுக்கக் கட்டி விடுங்கள். இது, பனி மனிதனின் உடலின் கீழ்ப் பாகம்.
அடுத்து, மேற் பகுதியில், அரிசி கொண்டு நிரப்புங்கள். மேலே மீண்டும் ஒரு நூல் கொண்டு இறுக்க கட்டி விடுங்கள். இப்போது, பனி மனிதனின் தலைப் பகுதியும் தயார்.
மீதமிருக்கும் காலுறையை, தொப்பி போல மடித்து விடுங்கள். அடுத்து, கண், மூக்கு, வாய் போன்றவற்றை, வண்ணப் பேனா கொண்டு வரையுங்கள். கழுத்தில், கம்பளிக்கு, ஏதேனும் ரிப்பன் கொண்டு கட்டி விடுங்கள். உங்கள் பனி மனிதன் தயார்.
செய்து பார்த்துவிட்டு, உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் குழந்தைகளே!
பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். தற்சமயம் மணமாகி, கடந்த பத்து ஆண்டுகளாக வசிப்பது அமெரிக்கா. கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு”. பள்ளி நாட்களில் தொடங்கிய கவிதை வாசிக்கும் ஆர்வம், கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர்கள், நண்பர்களின் தூண்டுதலோடு வளர்ந்து வருகிறது. வாசிக்க பிடித்திருந்தபடியால், எழுதிப் பார்க்க ஒரு ஆவலுடன் துவங்கிய எழுத்துப் பயணம், இன்று கதை, கவிதை, கட்டுரை என்று தொடர்ந்து வருகிறது.