“சரி வாங்க எல்லாரும் மதிய சாப்பாடு சாப்பிடலாம்” என்று அபி, சுபியின் அம்மா கூப்பிட்டார்கள்.

எல்லாரும் சாப்பிட்டுவிட்டு அந்த விலங்குகளுக்கும் சாப்பாடு கொடுத்தார்கள்‌.

“இந்தப் புலி என்ன சாப்பிடும்? இதெல்லாம் அது சாப்பிடுமா?” என்று அப்பா கேட்டார்.

“ஆமாம்ல அது விலங்குகளையும், மனுஷங்களையும் தானே சாப்பிடும்” என்று தாத்தா சொன்னார்.

“நான் மத்த புலிகளைப் போல் மான், முயல் எல்லாம் சாப்பிடமாட்டேன் உங்க சாப்பாட்டையே சாப்பிடுவேன்” என்று புலி சொன்னது.

“அப்ப சரி” என்று சொன்ன தாத்தா எல்லா விலங்குகளுக்கும் சாப்பாடு கொடுத்தார். ஆனால் யானை மட்டும் எனக்கு இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. சாப்பாடு எல்லாம் காலியான பிறகு தான் எழுந்து சென்றது.

அனைவரும் மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அந்த விலங்குகளிடம் பேசிக் கொண்டு இருந்தார்கள். தாத்தா, பாட்டி ஒரு வாரம் அங்கேயே இருந்துவிட்டு அப்புறம் அவர்கள் ஊருக்கு கிளம்பினார்கள்.

naalu kaal friends
படம்: அப்புசிவா

அவர்கள் ஊருக்கு சென்றதும் அபியும் சுபியும் அவர்களின் அறைக்குப் போனார்கள்.

“வாங்க அபி, சுபி நாங்க உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தோம்” என்றது கங்காரு.

அபி, “ஏன் எங்களுக்காகக் காத்துக்கிட்டு இருந்தீங்க?”

“நாங்க உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும், நாங்க எல்லாரும் எங்க வீட்டுக்குப் போறோம் அதுதான் அந்த விஷயம்” என்றது யானை.

“ஏன்? எங்க கூடவே இருங்களேன்” என்று சுபி சொன்னாள்.

“நீங்க போகக்கூடாது. நீங்க எங்க நண்பர்கள்” என்று அபி சொன்னாள்.

“இல்லை நாங்க போகணும் அபி, சுபி. எங்க அம்மா, அப்பா எங்களுக்காகக் காத்திருப்பாங்க” என்று இரண்டு குட்டி முயல்களும் சொன்னது.

“நீங்கள் போய்விட்டால் யார் எங்களுக்கு நண்பர்களா இருப்பார்கள்?” என்று அபி அழுதாள்.

“நீங்கள் நாளை காலை போகலாம் அல்லவா!” என்று சுபி கேட்டாள்.

“சரி நாங்க நாளை காலையில் போகிறோம்” என்று கங்காரு சொன்னது.

எல்லோரும் இரவு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டார்கள். அபியும், சுபியும் சோகமாகத் தூங்கினார்கள்.

காலை எழுந்து பார்த்தால் அபி, சுமியின் மேஜையின் மேல் ஒரு கடிதமும், அதன் மேல் ஒரு சின்ன மேளமும் இருந்தது.

—- தொடரும் —

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments