“வணக்கம் சுட்டீஸ்… எல்லாரும் எப்படி இருக்கீங்க!!!… உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் இதெல்லாம் உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் இல்லையா..
கடைகள்ல வாங்கற இந்த பண்டங்கள்ல நிறைய இரசாயன கலவைகள் சேர்ப்பாங்க, நிறமிகள் போடுவாங்க.. முடிஞ்ச வரைக்கும் அதை தவிர்த்து வீட்ல செஞ்சு சாப்டுங்க சரியா…
“இன்னிக்கு வீட்லயே ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் எப்படி செய்யலாம் அப்படிங்கறத பார்க்கலாம்”.
“நான்கு பெரிய உருளைக்கிழங்க வேக வச்சு எடுத்துக்கலாம். சூடு ஆறுனதும் தோல் எடுத்துட்டு கட்டி இல்லாம நல்லா பிசைஞ்சுக்கோங்க. அதுகூட ரெண்டு ஸ்பூன் சோளமாவு (corn flour) சேத்துக்கனும்.
நல்லா சப்பாத்தி மாவு மாதிரி ரெடி செஞ்சுக்கனும்.. சப்பாத்தி எப்படி விரிப்போமோ அதே மாதிரி லேசா எண்ணெய் தொட்டு சப்பாத்தி மாதிரி விரிக்கனும்..
கொஞ்சம் திக்கா இருக்கனும். இப்போ அந்த உருளைக்கிழங்க உங்களுக்கு பிடிச்ச ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் வடிவத்துல கட் பண்ணிட்டு அத எண்ணெயில பொரிச்சு எடுத்துடனும்.
உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம் தேவையான அளவு சேர்த்து தனியா கலந்து வச்சிக்கோங்க..
பொரிச்சு எடுத்த உருளைக்கிழங்கு கூட இந்த உப்பு கார கலவைய தேவைக்கேற்ப சேர்த்து பிரட்டி விட்டுக்கோங்க..
இதோ உங்களுக்கு பிடிச்ச ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் வீட்லயே தயாராயிடுச்சு.. நீங்களும் செஞ்சு பாத்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க சுட்டீஸ்..
பிரதிலிபி தளத்தில் சிறுகதைகள் , குறுநாவல் எழுதிக்கொண்டு இருக்கிறேன். தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன்.