தொலைவில் தெரிந்த தட்டான்
தொலைத்தேன் எனது மனதை
துரத்தினேன் இங்கும் அங்கும்
அமர்ந்தது அசைவற்று ஒரு கிளையில்;
அந்த கிளை என்னை அன்பாய் அழைக்க
உடல் அசைவைக் குறைத்தும் நிறுத்தியும்
மூச்சை நன்றாக அடக்கியும்
கண்களில் தெளிவைத் தேக்கியும்
நெருங்கினேன் வாலின் அருகில்
வலது கட்டை விரலைச் சுருக்கி
பின் நெட்டை விரலை நீட்டி
அமைப்பாய்ப் பிடித்ததாய் நினைக்கவும்
ஆசை காட்டி மோசம் செய்து
அங்கிருந்து கிளம்பி எங்கோ போனது
அந்த அறிவில் தெளிந்த தட்டான்…
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1