பல்  பல் பல்

குட்டிப் பாப்பா பல்

இருப்பது பால் பற்கள்

இருபது வெள்ளை பற்கள்

ஆறாம் மாதத்தில் முதலாம் பல்

மூன்று வயதில் கடைசி பல்

இடைப்பட்ட  காலத்தில் மற்றவையும்

ஒவ்வொன்றாய் முளைத்திடுமே

பற்கள் முளைக்கும் போதினிலே

காய்ச்சலும் வலியும் ஏற்படுமே

ஈறு வீக்கம் எல்லாமே

பல்லு வந்தபின் போய்விடுமே

தினமும் இருமுறை பல்துலக்கி

பால் காய்கனி சாப்பிடனும்

இனிப்பு மிட்டாயை குறைத்திடனும்

சாப்பிட்ட பின்னே கொப்பளிக்கனும்.

ஆறாம் வயதினில் முதலாம் பல்

பதின்மூன்று வயதிற்குள் கடைசி பல்

இடைப்பட்ட காலத்தில் மற்றவையும்

ஒவ்வொன்றாய் விழுந்திடுமே

பால் பற்கள் விழுந்திடும் தானே

என்னும் அலட்சியம் வேண்டாமே

ஆண்டுக்கு இருமுறை பரிசோதிக்க

பல் மருத்துவரை அணுகிடனும்!

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments