சரசரவென ஏறுது தாவுது
ஓடுது குதிக்குது சின்ன அணில்
பரபரவென நுழையுது விரையுது
கவ்வுது செல்லப்பூனை
திடுதிடுவென ஓடுது தாவுது
குரைக்குது தெருநாய்கள்
விறுவிறுவென ஊருது சேருது
இழுக்குது சிற்றெறும்பு
நீயும் கிடுகிடுவெனக் கிளம்பிடு
செல்லப் பாப்பா
திடுதிடுவென ஓடு
மடமடவென ஏறு
சுறுசுறுப்பே சிறப்பு
துறுதுறுப்பே வளர்ப்பு
ஆடலாம் பாடலாம்
அறிவைத் தேடலாம்
நாடலாம் அன்பை
அள்ளலாம் அளிக்கலாம்
இன்பம் நிறைக்கலாம்
வாழ்வில் சிறக்கலாம்
வா பாப்பா!’’
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
+1
+1