parrot

பச்சைக் கிளியே பறந்து வா
பாடம் படிக்க விரைந்து வா
சிவந்த அலகால் எழுத வா
சிறகை விரித்து சீக்கிரம் வா

பாட்டும் கதையும் படிக்க வா
பண்ணிசையும் நீ பயில வா
ஏட்டில் எழுதிப் பழக வா
எண்ணும் எழுத்தும் கற்க வா

அழகுத் தமிழைக் கற்க வா
அலகால் கொஞ்சிப் பேச வா
பின்னும் பல மொழி கற்க வா
பைங்கிளியே நீ பறந்து வா

கணக்குப் பாடம் கற்க வா
கிள்ளையே நீ கிளம்பி வா
உனக்குப் புரியும் வகையிலே
சொல்லித்தருவேன் உடனே வா

ஒன்று இரண்டு எண்ண வா
எண்ணி எண்ணி எழுத வா
கூட்டல் கழித்தல் பயில வா
கூட்டக் கணக்கை அறிய வா

பச்சைக் கிளியே பறந்து வா
பாடம் படிக்க விரைந்து வா
படித்து முடித்தப் பின்னாலே
பழங்கள் தருவேன் வா வா வா

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments