அரவிந்த் படுக்கையில் புரண்டு படுத்தான். காலை ஆறு மணி. அலாரம் அடித்தது. அணைத்து விட்டுத் திரும்பவும் தூங்க ஆரம்பித்தான். “அரவிந்த், எழுந்திரு சீக்கிரம். இன்னைக்குத் தோட்டத்துக்குப் போகப் போறோம்னு நேத்தே சொன்னேன் இல்லையா? எழுந்து ரெடியாகிக்கோ. அரை மணி நேரத்தில கெளம்பணும்” என்று அம்மா சொல்லப் போர்வையில் இருந்து தலையை நீட்டிய அரவிந்த், “நான் வரலைம்மா. நீங்கள்ளாம் போய்க்கங்க. எனக்குத் தூக்கம் தூக்கமா வருது. என்னால இப்ப எந்திரிச்சுக் கெளம்பமேலும் படிக்க –>

அடுத்த நாள் காலையில் காட்டில் இருந்து கிளம்பிய துருவன் தலைநகரத்தை அடைந்தான். தலைநகரைச் சுற்றி பிரம்மாண்டமான கோட்டையும், அதைச் சுற்றியிருந்த அகழியும் அவனை வரவேற்றன. அகழி என்றால் கோட்டையைச் சுற்றித் தண்ணீரைத் தேக்கி அதில் முதலைகளை விட்டிருப்பார்கள். அந்தக் காலத்தில் கோட்டைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப் படுவது. எதிரி நாட்டினர் படையெடுத்து வரும்போது நீரில் குதித்து நீந்தி வர முயற்சி செய்தால், முதலைகளுக்கு இரையாக வேண்டியது தான். அகழியைக் கடக்கப் பாலம்மேலும் படிக்க –>

ஆதித்யா தாத்தா பாட்டியைப் பார்த்து உற்சாகத்தில் குதித்தான். குழந்தைகளுக்கே தாத்தா பாட்டி வந்தால் சந்தோஷம் தான். அவர்கள் ஆதித்யாவின் தந்தை அருணனின் பெற்றோர். சென்னை வாழ்க்கை பிடிக்காமல் கிராமத்தில் வசிக்கிறார்கள். இப்போது ஊரடங்கு கொஞ்சம் தளர்த்திய சமயம் அவர்கள் சென்னைக்குக் கிளம்பி வந்தார்கள். ஆதித்யா அவர்களுக்குச் செல்லப் பேரன்.  ஆதித்யா சென்னையின் பிரபல தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கிறான். “செல்லக் குட்டி, உனக்கு என்னடா வேணும்?” என்று தாத்தாமேலும் படிக்க –>

அரசர் வீரமகேந்திரர் பட்டத்தரசி எழினியிடம் மலைக்கோட்டை மாயாவியின் நிபந்தனையை எடுத்துச் சொன்னதுமே பட்டத்தரசி எழினி துடித்துப் போய் விட்டாள். “என்ன இது அநியாயம்? இரண்டு கண்களில் எந்தக் கண் வேண்டும் என்றால் என்ன சொல்ல முடியும்?”  தங்களுடைய கண்ணின் மணியான இளவரசியை மாயாவியிடம் தூக்கிக் கொடுக்கவும் தாய் மனதிற்கு விருப்பமில்லை. ஆனால் நாட்டு மக்களும் அவர்களுக்குக் குழந்தைகள் தானே! அவர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை இழந்து துயரத்தில் துடிப்பதையும் பார்த்துக்மேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் இரத்தினபுரி என்ற குட்டி தேசம் இருந்தது. அந்த தேசத்தைச் சுற்றித் தான் நமது கதை நகரப் போகிறது. இரத்தினபுரியின் அரசன் வீரமகேந்திரன். பட்டத்தரசி எழினி. மக்கள் நலனில் அதிக அக்கறை காட்டி நாட்டைப் பரிபாலிக்கும் அரசர். அவர் மனதுக்கேற்ற அரசி எழினி. . நாட்டு மக்களைத் தங்களுடைய குழந்தைகளாகவே பாவிக்கும் கருணை உள்ளம் கொண்ட தாயாகவே பட்டத்தரசி இருந்தாள். மக்கள் உள்ளங்களில் தனது அன்பால் ஆட்சி செலுத்தினாள்.மேலும் படிக்க –>