ஒன்று இரண்டு மூன்று ஒன்றாய்க் கூடி விளையாடு நான்கு ஐந்து ஆறு நான்கு பக்கமும் பாரு ஏழு எட்டு ஒன்பது ஏழு கடலையும் தாண்டு பத்து எண்ணக் கற்றிடு பார்த்துப் பதமாய் நடந்திடு எண்ணம் உயர்வாய் இருக்கட்டும்! ஏற்றம் தானாய் வந்து விடும்!மேலும் படிக்க –>

ஒருமுறை, முயல்கள்  தங்கள் வாழ்வில் படும் கஷ்டங்களைப் பற்றிப் பேசுவதற்காக ஒரு கூட்டம் போட்டன. “எப்பவுமே நம்மளைச் சாவைக் காட்டிப் பயமுறுத்திக்கிட்டே இருக்காங்க.  மனுஷன்லேர்ந்து நாய், கழுகு, நரி வரைக்கும் நம்மளைப் பயத்திலேயே வைச்சிருக்காங்க.  நமக்கு மகிழ்ச்சிங்கிறதே சுத்தமா இல்ல.  அதுக்குப் பேசாம உடனடியா நாம செத்துப் போயிடுறது நல்லது” என்று அந்தக் கூட்டத்தில், முயல்களின் தலைவன் சொன்னது. “ஆமாம்.  எப்பப் பார்த்தாலும், ஏதாவது நம்மளைப்  பயமுறுத்திச் சோகமா ஆக்குது. மேலும் படிக்க –>

அன்று மாலை குழந்தைகள் அனைவரும் பூங்காவுக்கு வரவும், சிட்டு பறந்து வந்து கிளையில் அமரவும், சரியாக இருந்தது. எல்லோரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிவிட்டு, வட்டமாக அமர்ந்தனர்.  “ஹலோ! எல்லாருக்கும் வணக்கம்.  நல்லாயிருக்கீங்களா?” என்றது சிட்டு. “இருக்கோம் சிட்டு” என்றனர் குழந்தைகள், ஒரே குரலில். “ஓகே. டைனோசர் கதையை ஆரம்பிச்சிடலாம்.  போன மாசம் சொன்னதைக் கொஞ்சம் நினைவு படுத்திட்டு, மேலே சொல்றேன்” “நானே சொல்றேன் சிட்டு.  சரியான்னு நீ சொல்லு. டைனோசரோடமேலும் படிக்க –>

ஒரு ஊரில் ஒரு நரியும், சேவலும் வாழ்ந்து வந்தன.  இரண்டுமே தந்திரத்துக்குப் பெயர் போனவை.  அவை இரண்டும் ஒரு நாள் சந்தித்துப் பேசத் துவங்கின.   “ஒனக்கு எத்தனை தந்திரம் தெரியும்?” என்று நரி, சேவலிடம் கேட்டது. “முயன்றால், நான் மூன்று செய்வேன்.  உன்னால் எத்தனை முடியும்?” என்று சேவல் கேட்டது. “நான் 63 செய்வேன்,” என்றது நரி. “அதுல கொஞ்சம் சொல்லு, பார்ப்போம்,” என்றது சேவல். “நான் என்னோட இடதுமேலும் படிக்க –>

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்.  இம்மாதம் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பறவையின் பெயர், ‘கொண்டு கரிச்சான்’ சில இடங்களில், இதனைக் குண்டு கரிச்சான் என்கிறார்கள்.  இது மைனாவை விடச் சற்றுச் சிறியது;  மண்ணில் இருக்கும் பூச்சிகளைத் தின்னும். தலையும், உடலின் மேற்புறமும் கறுப்பாக இருக்கும். வயிறும் வாலின் பக்கவாட்டுப் பகுதியும், வெள்ளையாக இருக்கும். வால் நீண்டிருக்கும். தீனி தின்னும் போது, வாலைப் பெரும்பாலும் தூக்கியே வைத்திருக்கும். இதன்மேலும் படிக்க –>

அன்று மாலை பூங்காவிற்கு வந்த குழந்தைகள், சிட்டுவின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர்.  “எல்லோருக்கும் இனிய மாலை வணக்கம்!” என்று சொன்னபடி, சிட்டு மரக்கிளையில் வந்து அமர்ந்தது. சிட்டுவிற்குப் பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க சமூக இடைவெளி விட்டுக் குழந்தைகள் அமர்ந்தனர். “போனவாட்டி டைனோசர் அழிஞ்சதுக்கான காரணத்தைக் கயல் கேட்டா. அதுக்கு முன்னாடி, இன்னும் சில வகை கொம்புள்ள டைனோசர் பத்தி நாம தெரிஞ்சுக்கலாம்” என்றது சிட்டு.மேலும் படிக்க –>

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்! இந்த மாதம் உங்களுக்கு அறிமுகம் செய்யும் பறவையின் பெயர் தவிட்டுக்குருவி. தோட்டங்களில் அடிக்கடி நாம் காணக்கூடிய குருவி இது.  கல்லுக்குருவி, சிலம்பன் என்பவை இதன் வேறு பெயர்கள் ஆகும். பெரும்பாலும் நான்கைந்து குருவிகள் சேர்ந்து, கூட்டமாக இருக்கும். சத்தமாக ஒலியெழுப்பும். பூச்சிகளையும், தானியங்களையும் உண்ணும்.  தரையில் தத்தித் தாவி நடக்கும்.  உடலின் மேற்பகுதியும், தொண்டையும் சாம்பல் நிறத்திலும், அலகு வெளிர் மஞ்சள்மேலும் படிக்க –>

காலாண்டிதழாக வெளிவருகிறது இந்தச் சிறார் இதழ். இதன் எட்டாவது இதழில்  குழந்தைகளிடம் ஒரு பள்ளி எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்வி கேட்டு, அதற்கு அவர்கள் கொடுத்துள்ள பதில்களை அப்படியே பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு குழந்தை சொல்லியிருக்கும் பதில் இது:- “மேகத்தின் மீது பள்ளியிருந்தால், எனக்குப் பிடிக்கும். சலிப்பாக இருக்கும்போது, மேகங்களை வைத்து, நிறைய பொம்மைகள் செய்யலாம்” ஒன்பதாவது இதழ், குழந்தைகளுக்கு இயற்கையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் படிக்க –>

ஒரு முறை காற்றுக்கும் சூரியனுக்கும் இருவரில் யாருக்கு வலிமை அதிகம் என்று சண்டை வந்தது. “அதோ தெருவில நடந்து போய்க்கிட்டிருக்கிறவரைப் பார்த்தியா? நாம ரெண்டு பேரும்,  அவருக்கிட்ட நம்ம வலிமையைக் காட்டுவோம்;  சட்டைக்கு மேல அவர் போட்டிருக்கிற கோட்டை, யாரு கழற்ற வைக்கிறோமே அவங்க வெற்றி பெற்றதா அர்த்தம்” என்றது காற்று.  “சரி; ஒத்துக்கிறேன்,” என்றது  சூரியன் காற்று முதலில் தன் வேலையைத் துவங்கியது.  அது ஏற்படுத்திய பேய்க்காற்றில்  இலைகள்மேலும் படிக்க –>