அன்று மாலை பூங்காவிற்கு வந்த குழந்தைகள், சிட்டுவின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர்.  “எல்லோருக்கும் இனிய மாலை வணக்கம்!” என்று சொன்னபடி, சிட்டு மரக்கிளையில் வந்து அமர்ந்தது. சிட்டுவிற்குப் பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க சமூக இடைவெளி விட்டுக் குழந்தைகள் அமர்ந்தனர். “போனவாட்டி டைனோசர் அழிஞ்சதுக்கான காரணத்தைக் கயல் கேட்டா. அதுக்கு முன்னாடி, இன்னும் சில வகை கொம்புள்ள டைனோசர் பத்தி நாம தெரிஞ்சுக்கலாம்” என்றது சிட்டு.மேலும் படிக்க –>

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்! இந்த மாதம் உங்களுக்கு அறிமுகம் செய்யும் பறவையின் பெயர் தவிட்டுக்குருவி. தோட்டங்களில் அடிக்கடி நாம் காணக்கூடிய குருவி இது.  கல்லுக்குருவி, சிலம்பன் என்பவை இதன் வேறு பெயர்கள் ஆகும். பெரும்பாலும் நான்கைந்து குருவிகள் சேர்ந்து, கூட்டமாக இருக்கும். சத்தமாக ஒலியெழுப்பும். பூச்சிகளையும், தானியங்களையும் உண்ணும்.  தரையில் தத்தித் தாவி நடக்கும்.  உடலின் மேற்பகுதியும், தொண்டையும் சாம்பல் நிறத்திலும், அலகு வெளிர் மஞ்சள்மேலும் படிக்க –>

காலாண்டிதழாக வெளிவருகிறது இந்தச் சிறார் இதழ். இதன் எட்டாவது இதழில்  குழந்தைகளிடம் ஒரு பள்ளி எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்வி கேட்டு, அதற்கு அவர்கள் கொடுத்துள்ள பதில்களை அப்படியே பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு குழந்தை சொல்லியிருக்கும் பதில் இது:- “மேகத்தின் மீது பள்ளியிருந்தால், எனக்குப் பிடிக்கும். சலிப்பாக இருக்கும்போது, மேகங்களை வைத்து, நிறைய பொம்மைகள் செய்யலாம்” ஒன்பதாவது இதழ், குழந்தைகளுக்கு இயற்கையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் படிக்க –>

கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கும் இடத்தில் அதை ஒட்டி ஒரு காடு இருந்தது. அங்கு பல்வேறு மரங்கள் மிருகங்கள் பறவைகள் என அனைத்தும் வாழ்ந்து வந்தன.. அந்த அடர்ந்த காட்டில் ஒரு சிட்டுக்குருவியும் குட்டிக் குரங்கும் இருந்தன. அவை இரண்டும் படு சுட்டி. ஒரு இடத்தில் அவை இரண்டும் ஒன்றாக இருந்தால் அவ்விடமே மகிழ்ச்சியுடனும் குதூகலமாகவும் இருக்கும். சிட்டுக்குருவி கீச் கீச் என சப்தமிட, குரங்கு கையை அசைத்தும் காலால் குதித்தும்மேலும் படிக்க –>

புதிய நட்பு! திரு.க்ரேவன் வந்து சென்ற அன்று இரவு மேரிக்கு மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை. மாமாவே தோட்டத்தைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துவிட்டார், இனிமேல் அதில் பல வேலைகள் செய்யலாம் என்று கற்பனை செய்தபடியே படுத்துக் கொண்டிருந்தவளை அன்று கேட்ட அதே அழுகுரல் மீண்டும் எழுப்பியது.  யாருடைய அழுகுரல் அது என்று இன்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவுடன் மெதுவாக நடந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். அன்றொருநாள் திருமதிமேலும் படிக்க –>

சிறுவர் சிறுமியர் அனைவரும் அபிநயா வீட்டுக்குப் படையெடுத்தார்கள். “ஏன் அபி இன்னும் உனக்கு கால் புண் சரியாகலயா?” என்றாள் லக்க்ஷனா. “இன்னும் லேசா வலி இருக்கு லக்க்ஷனா” என்றாள் அபிநயா. “லேசாத்தானே வலி இருக்குன்னு சொல்றே, ஏன் விளையாட வரல, நாங்க எல்லாரும் இவ்வளவு நேரமாக உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டிருந்தோம். இன்று சனிக்கிழமை வேற, ரொம்ப போரடிக்குது. ஸ்ருதியிடம் விளையாட்டுக் கத்துக்கிடதுல இருந்து புதுசு புதுசா விளையாட ஆசையா இருக்குடி.மேலும் படிக்க –>

காகிதத்தில் கை வண்ணம்! பட்டாபி தாத்தாவும் பார்வதிப் பாட்டியும் சேர்ந்து வீட்டிலிருந்த தினசரிகளை சேகரித்து கட்டி வைத்துக் கொண்டிருந்தனர்.  “பட்டு.. பட்டு..” பூனை போல மெல்லிய குரல் பக்கத்து வீட்டு பால்கனியிலிருந்து வந்தது.  பாட்டி மெதுவாய் எட்டிப் பார்த்துவிட்டு,  “உங்க செல்லப் பேரன் மித்துதான் உங்கள கூப்பிடறான்..” என்று சொல்லிச் சிரித்தாள்.  தாத்தா எட்டிப் பார்த்துவிட்டு,  “என்ன மித்து?” என்று அவனைப் போலவே மெல்லிய குரலில் கேட்டார்.  “ம்ச்.. ஒருமேலும் படிக்க –>

அனு, “ஹாய் பூஞ்சிட்டுக்களே! உங்க பிண்டு மற்றும் அனு வந்தாச்சு! இதுவரை நாங்க சொல்லித் தந்த சின்னச்சின்ன சோதனைகளைச் செய்து பாத்தீங்களா? இந்த வாரம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு அட்டகாசமான விஷயம் சொல்லித் தரப் போறோம். அது என்னன்னு நீயே சொல்லிடேன் பிண்டு” ஹலோ பட்டூஸ்! இந்த வாரம் சூப்பரான காகிதப் பூக்களை செய்யப் போகிறோம். அதை வெச்சு நீங்க உங்க வீட்டை அலங்கரிக்கலாம். அனு பின்வரும்மேலும் படிக்க –>

நமது அழகான கற்பனை  உலகத்தில் ஓர் அழகான நாடு இருந்தது. அந்த நாட்டின்‌ ராஜாவிற்கு சினுங்கன் என்ற அழகான மகன் இருந்தான்.  நாட்டின் இளவரசன்; வருங்கால அரசன். ஏன், எதற்கு , எப்படி என்று எங்கும் கேட்டபடி சுற்றிக்கெண்டிருக்கும்  நம் சினுங்கனுக்கு உலகத்திலேயே பிடிக்காத இரண்டு விஷயங்கள் இருந்தன.  ஒன்று, வேலை செய்வது; எப்போது பார்த்தாலும் எல்லோரும் ஏதாவது வேலை செய்தபடி இருப்பதைப்  பார்த்தால் அவனுக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும்.மேலும் படிக்க –>

அமெரிக்காவில் உள்ள அலபாமா என்ற மாநிலத்தைச் சேர்ந்த டஸ்கம்பியா என்ற ஊரில் பிறந்தார் ஹெலன் கெல்லர். ஹெலன் கெல்லர் பிறந்து ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு உடல்நலம் பாதித்தது. மூளைக்காய்ச்சல் நோய் எனக் கண்டறியப்பட்டது. அந்நோய் ஹெலனின் பார்வையைப் பறித்ததோடு கேட்கும் சக்தியையும், பேசும் சக்தியையும் பறித்துக் கொண்டது. சிறுவயதிலேயே ஏற்பட்ட தன்னுடைய குறைபாடுகளினால் அவரது மனநிலையே மாறிப்போயிருந்தது. அவருக்குக் கோபமும், பிடிவாதமும் சேர்ந்தது. இரண்டு வயது நிரம்பும் முன்னே இரண்டுமேலும் படிக்க –>