வணக்கம் பூஞ்சிட்டுகளே! இந்த மாதம் நம்ம ‘கதை கதையாம் காரணம்’ பகுதில தெரிஞ்சுக்கபோற ஊர் : நாகப்பட்டினம். நாகப்பட்டினம், ஒரு அழகான கடலோர நகரம். நாகபட்டினத்துக்கு திருவாரூர் வழியாவும் வேளாங்கண்ணி வழியாவும், காரைக்கால் வழியாவும் போகலாம். நாம முன்னடியே இந்த பகுதில தெரிஞ்சுக்கிட்ட மாதிரி “பட்டினம்” அப்படிங்கிறதுக்கு கடலோரம் அமைந்த நகரம்’ன்னு அர்த்தம். உதாரணமா சென்னைப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம்’ன்னு நிறைய ஊர்களை சொல்லலாம். இப்படி கடலோர நகரங்கள்’ல முக்கியமான ஒரு நகரம்மேலும் படிக்க –>

ஆதித்யா தாத்தா பாட்டியைப் பார்த்து உற்சாகத்தில் குதித்தான். குழந்தைகளுக்கே தாத்தா பாட்டி வந்தால் சந்தோஷம் தான். அவர்கள் ஆதித்யாவின் தந்தை அருணனின் பெற்றோர். சென்னை வாழ்க்கை பிடிக்காமல் கிராமத்தில் வசிக்கிறார்கள். இப்போது ஊரடங்கு கொஞ்சம் தளர்த்திய சமயம் அவர்கள் சென்னைக்குக் கிளம்பி வந்தார்கள். ஆதித்யா அவர்களுக்குச் செல்லப் பேரன்.  ஆதித்யா சென்னையின் பிரபல தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கிறான். “செல்லக் குட்டி, உனக்கு என்னடா வேணும்?” என்று தாத்தாமேலும் படிக்க –>

நூல்: வானத்துடன் டூ ஆசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன். ஆசிரியர் குறிப்பு: சிறார் எழுத்தாளர், கதை சொல்லி. வாசிப்பு அனுபவம்: மொத்தம் 12 குட்டிக்கதைகள். வானத்துடன் டூ- ஒரு சிறிய குழந்தைக்கும், இயற்கைக்கும் இடையில் ஒரு வேண்டுகோள். கடைசியில் குழந்தையை ஜெயிச்சது இயற்கை. குழந்தையிடம் விட்டுக் கொடுத்து விட்டது என்று அழகாகக் கூறியுள்ளார். அடுத்தது சிவப்புக் கிளியைக் காணோம் என்ற கதை, குழந்தைகளுக்கென்று ஒரு உலகம் இருக்கு‌.. அதில் உள்ள நியாயங்களும்மேலும் படிக்க –>

கீச் கீச் கீச்! எப்படியிருக்கீங்க குட்டிச் செல்லங்களே! செப்டம்பர் ஐந்தாம் தேதி, ஆசிரியர் தினம்! மாதா, பிதா, குரு தெய்வம்!  அம்மா, அப்பாவுக்கு அடுத்தபடியாக, நம்மை நெறிபடுத்தி, வாழ்வின் வழிகாட்டியாகத் திகழ்வது, நம்முடைய ஆசிரியர்கள் தாம்! எனவே உங்களுக்குப் பிடித்த ஆசிரியரை, நன்றியுடன் நினைவு கூறும் தினம் இது! ஆசிரியர் தினத்தில், நீங்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை இருக்கின்றார்!  அவர் தாம், சாவித்திரி பாய் புலே! மேலும் படிக்க –>

குட்டி பீமாவும் அவனது தங்கை மித்ராவும் வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். ‘கல்லா மண்ணா’ விளையாடிக் கொண்டிருக்கையில் வேகமாக ஒரு வாகனம் தெருவில் வந்தது. அதைப் பார்த்தவுடன் ஒதுங்குவதற்காக வேகமாக ஓடினாள் பீமா, மித்ராவின் தோழி ஸ்ருதி. அப்போது கால் தடுக்கி விட அவளது நெற்றியில் ஒரு கல் குத்தி ஆழமாகக் காயம் ஏற்பட்டுவிட்டது. ரத்தம் நிற்காமல் வந்தது. “அச்சச்சோ நிறைய ரத்தம்!” என்று அனைவரும் பதற,மேலும் படிக்க –>

குழந்தைகளே, ஐஸ்க்ரீம் குச்சிகளை வைத்து, அழகான பூனை செய்யலாமா? இதற்கு தேவையான பொருட்கள் ஐஸ்க்ரீம் குச்சிகள் – 3 பசை / கோந்து ஸ்கெட்ச் பேனாக்கள் – கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்கள் முதலில் உங்களுடைய மூன்று ஐஸ்க்ரீம் குச்சிகளையும் பாதியா வெட்டிக்கோங்க. இப்போ உங்களிடம் ஆறு துண்டுகள் இருக்கும். ஒரு துண்டில் மட்டும், வளைவுப் பகுதியையும் வெட்டிடுங்க இப்போ, குச்சிகளைப் படத்தில் இருப்பது போல் அடுக்கிக்கோங்க. அடுத்து, உடல்மேலும் படிக்க –>

பூஞ்சிட்டு மின்னதழ் நடத்திய 2020ம் ஆண்டின் ஆசிரியர் தின ஓவியப் போட்டிக்கு வந்த படைப்புகள் எங்கள் யூட்யூப் சேனல் https://www.youtube.com/channel/UCiZ5beRz5PJrN31tyEOSbqQ மற்றும் வலைதளத்தில் https://poonchittu.com/2020/08/highlights/announcements-2/ பதிவேற்றப்பட்டுள்ளது.  நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புடன் சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.   யூட்யூப் வீடியோவில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது.  மக்கள் அவர்களுக்குப் பிடித்த படைப்பின் எண்ணைக் கமெண்ட்டில் பதிவார்கள்.  அதிக கமெண்ட்கள் பெறும் படைப்புக்குச் சிறப்புப் பரிசுமேலும் படிக்க –>

செழியனும் குந்தவியும் அன்று வகுப்பில் ஆசிரியர் தொல்காப்பியன் அவர்கள் நடத்திய இராணி வேலு நாச்சியார் பற்றிய பாடத்தைப் பற்றி பேசிக் கொண்டே வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். “செழியன்! நம்ம தொல்காப்பியன் சார், வேலு நாச்சியார் பத்தி சொன்னது ரொம்ப ஆச்சர்யமா இருந்ததுல்ல..” “ஆமா குந்தவி! ரொம்பவே ஆச்சர்யமாதான் இருந்தது.. அவங்கதான் நம் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்ணாமே.. க்ரேட் இல்லடீ..” “ஆமா செழியன்.. சார்மேலும் படிக்க –>

புகைவண்டி தூரத்தில் வரக்கண்டேன் நிலையத்தில் நின்றதும் ஏறிக்கொண்டேன் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன் சந்தோஷம் நெஞ்சில் நிறையக் கண்டேன். அசையும் பச்சைக்கொடி பார்த்தேன் அனைத்தும் மெல்ல நகரக் கண்டேன். முன்னால் ரயிலும் விரையக் கண்டேன் பின்னால் மரங்கள் மறையக் கண்டேன். வழியில் பச்சை வயல் பார்த்தேன் வெள்ளைக் கொக்குகள் பல பார்த்தேன் சோளக்கொல்லை பொம்மைகளும் ஜோராய் நிற்கும் அழகு பார்த்தேன் கோணல் பனைமர வரிசை கண்டேன் குரங்குகள் தாவும் சோலை கண்டேன்மேலும் படிக்க –>

ரகசியப் பூந்தோட்டம் என்ற ஆங்கில நாவல் 1921 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் ஒரு முக்கியமான குழந்தை இலக்கிய நூலாக இது பார்க்கப்படுகிறது. பலமுறை மொழிபெயர்க்கப்பட்டும் இரண்டு முறை திரைப்படங்களாக எடுக்கப்பட்டும் இந்த நாவல் வெளிவந்துள்ளது. இதைப் பூஞ்சிட்டு இதழுக்காக எளிய வகையில் தமிழாக்கம் செய்து தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சிறிய தொடர்கதையாக இது வெளிவரும்.  The Secret Garden – பிரான்சிஸ் ஹாட்க்ஸன் பர்னட்மேலும் படிக்க –>