இதழ் – 2 (Page 2)

smurfs

ஒரு அழகான காடு. அதில் ஒரு கிராமம். பசுமையான புல்தரை. அதில் நம் முழங்கால் அளவிலான வீடுகள். பெரிய கட்டுமானமெல்லாம் இல்லாமல் மரங்களால் ஆனவை. அதன் கூரைகள் காளான் போன்ற அமைப்பில் அழகாக இருக்கும். அதுபோல பல வீடுகள். அந்த கிராமத்தைச்சுற்றி சிறிய ஓடை அதும் நம் கையளவே. அது தவிர நம் விரல் நடந்துபோகும் அளவுக்கு ஒரு பாலம். தவிர ஒரு அணையும் உண்டு. அதும் சிறியது. பொம்மைமேலும் படிக்க…

aamaiyum vaathum

ஒரு குளத்தில், ஓர் ஆமையும், இரண்டு வாத்துகளும் நண்பர்களாகப் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தன..  ஒரு சமயம், மழையே பெய்யாமல், குளம் வறண்டு, முற்றிலுமாகக் காய்ந்து விட்டது. “நாம சீக்கிரமா வேறு இடம் தேடிப் போகணும்; தண்ணி இல்லாம  நம்மால வாழமுடியாது.  ஆமைக்கு டாட்டா சொல்லிட்டு, ஒடனே இங்கேர்ந்து கெளம்பணும்,” என்று ஒரு வாத்து, இன்னொரு வாத்திடம் சொன்னது. வாத்து சொன்னதைக் கேட்ட ஆமை, “என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க; என்னையும்மேலும் படிக்க…

WhatsApp Image 2020 08 08 at 7.34.17 PM

அன்று பூங்காவிற்கு வந்த கதிர், கயல், முத்து, மலர், வினோத் ஆகிய ஐவரும், சிறிது நேரம் விளையாடிவிட்டுப் பூஞ்சிட்டு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். “சிட்டு ஏன் இன்னும் வரல? கதையைப் போன மாசம், பாதியில நிறுத்திட்டுப் போயிடுச்சி; கேட்க ரொம்ப ஆசையா இருக்கு; இன்னும் வரலியே?” என்றான் வினோத் நாலாப் பக்கமும் வானத்தைப் பார்த்தபடி..    “என்ன பசங்களா? எப்படியிருக்கீங்க?” என்று கேட்டபடியே மரக்கிளையில் வந்து அமர்ந்தது சிட்டு.மேலும் படிக்க…

Jokes

ராமு : ஒரு குத்து சண்டை வீரர் மற்றொரு குத்து சண்டை வீரருக்கு எப்படி கடிதம் எழுதுவார்?சோமு : பலம், பலமறிய ஆவல் ராமு : அவர் ஏன் டிக்ஸ்னரியை பார்த்து பார்த்து சிரிக்கிறார்?சோமு : அர்த்ததோடு சிரிக்கிறார் ராமு : பஸ் ஸ்டாண்டில் ஏன் பஸ் நிற்குது?சோமு : அதனால உட்கார முடியாது..  ராமு : நகை கடைக்காரருக்கு பிடித்த சோப் எது??சோமு : பொன் வண்டு ராமுமேலும் படிக்க…

Appadiya

பல வருடங்களுக்கு முன் ஒரு குளிர்சாதனப் பெட்டியில் அதாவது ஃப்ரிட்ஜ்ஜில்  தக்காளி, முட்டை, வெங்காயம், ஐஸ்கிரீம் நான்கு பேரும் நண்பர்களாக இருந்தாங்க. சூப்பர் மார்க்கெட்டின் மரப்பலகையில் இருந்ததிலிருந்தே நால்வரும் நண்பர்கள்தான். (பல வருடங்களுக்கு முன்னாடி ஃப்ரிட்ஜா? அதெப்படின்னு கேக்குறீங்களா.. நோ..நோ.. “அதெப்படி?” என்று கேட்காமல் “அப்படியா!”என்ற ஆச்சர்யத்தோடு நம் கற்பனை உலகத்தில் தொபுக்கடீர்னு குதிச்சிடுங்க. ஓகே?) அந்த நால்வரில் வெங்காயம்தான் கொஞ்சம் விவேகமானவன்.  அன்று இரவு நால்வரும் பேசிக்கொண்டிருந்த போது, மேலும் படிக்க…

Drongos 1

குட்டிச் செல்லங்களே! சென்ற மாதம் அறிமுகப்படுத்திய தையல் சிட்டுவை, யாராவது கவனித்துப் பார்த்தீர்களா?  இந்த மாதம், உங்களுக்கு அறிமுகம் செய்யப்படும், குருவியின் பெயர் கரிச்சான். மைனாவை விட அளவில் சிறியது; அடர்ந்த கருப்பு நிறம். இதன் பெயர் தெரியாவிட்டாலும், அடிக்கடிப் பார்த்திருப்பீர்கள்.  மின்சாரக் கம்பிகளில் அமர்ந்து, ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கும்; வயல்வெளிகளில்  மேயும் ஆடு, மாடுகளின் மேல் அமர்ந்து, ஒய்யாரமாகச் சவாரி செய்யும். அவற்றின் மேல் உள்ள உண்ணிகளையும், ஈக்களையும்மேலும் படிக்க…

maayakattam 2

இந்தக் கட்டத்திற்குள் பல தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ, இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ ஒளிந்து இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து கீழே உள்ள கமெண்ட்ஸில் பதிவிடவும். S. நித்யலக்ஷ்மிகும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computer Science முடித்து விட்ட இல்லத்தரசி நான். எனக்கு கோலம், ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும் கைவினைப் பொருட்களும் செய்து வருகிறேன்.. 2012 முதல் பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறேன்.மேலும் படிக்க…

chittu mithu

தீப்பெட்டியும் நூலும்.. மித்து தன் குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தான். முகக்கவசம் (mask) அணிந்திருந்தாலும் அவன் முகத்தின் வாட்டம் தெளிவாகத் தெரிந்தது. பட்டாபி தாத்தா தன் மாலை நடைப்பயிற்சியை பாதியில் கைவிட்டுவிட்டு மித்து அமர்ந்திருந்த சிமென்ட் பெஞ்சில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்தார். “என்ன மித்து.. இங்க உக்காந்திருக்க.. வெளையாடப் போகலயா?” என்று கேட்டார். “போ பட்டு.. எல்லாம் உங்களாலதான்..” என்று அவன் கோபம் கலந்த வருத்தத்துடன்மேலும் படிக்க…

anjalai

குழந்தைகளே!  நம் நாட்டின் விடுதலைக்காகப் பலர், தங்கள் உயிரையும், வாழ்க்கை யையும், தியாகம் செய்திருக்கிறார்கள்.  அவர்களுடைய உழைப்பின் பயனைத் தாம், நாம் இப்போது, அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  சுதந்திர தினத்தின் போது, அவர்களுடைய சேவைகளை நினைவு கூர்வது, அவர்களுக்கு நாம் செலுத்தும், நன்றிக்கடன் ஆகும். இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட தியாகிகளுள், அஞ்சலை அம்மாள் என்பவரும் ஒருவர். கடலூரில் பணவசதி இல்லாத, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமேமேலும் படிக்க…

Iyarkai

அதிகாலைச் சூரியன் சாளரத்தின் வழியே தூங்கும் பூக்குவியலின் மேல் பட்டது. வெளிச்சத்தின் தாக்கத்தால் தூக்கம் கலையவும் சிணுங்கியபடியே அழைத்தாள் தன் தாயை.  “ம்மா.. ம்மா.. வெயில் போகச் சொல்லு…”, என தூக்கத்தில் உளறினாள்.  “என் தங்கக்கட்டிக்கு இன்னும் தூக்கம் தெளியலியா?”, எனக் கூறியபடியே தாயவள் சாளரத்தை நன்றாகத் திறந்து விட்டாள். காலைக் காற்றும், ஒளியும் அறை முழுக்க பரப்ப திரைச்சீலைகளை விலக்கிக் கட்டினாள்.  “ம்மா….. வெயில் போ சொல்லு…. தூக்கம்மேலும் படிக்க…