கதைத்தோரணம் (Page 9)

lightning

ஒரு அடர்ந்த காட்டில் நிறைய மரங்களுக்கு நடுவுல ஒரு சின்ன செடி முளைச்சு வந்ததாம். அந்த சின்ன செடிய பார்த்து எல்லா பெரிய மரங்களும் கிண்டல் செஞ்சு சிரிச்சதாம். “நீ ஒரு குட்டி செடி. உன்னால எங்கள போல வளர முடியாது. வர்ற சூரிய ஒளி எல்லாத்தயும் நாங்களே எடுத்துப்போம். உனக்கு முளைக்க வேற இடமே கிடைக்கலையா” அப்படின்னு கிண்டல் செஞ்சிச்சாம். அந்த சின்னச் செடி சூரிய ஒளி கிடைக்காமமேலும் படிக்க…

paperboat 1

காகிதத்தில் கை வண்ணம்! பட்டாபி தாத்தாவும் பார்வதிப் பாட்டியும் சேர்ந்து வீட்டிலிருந்த தினசரிகளை சேகரித்து கட்டி வைத்துக் கொண்டிருந்தனர்.  “பட்டு.. பட்டு..” பூனை போல மெல்லிய குரல் பக்கத்து வீட்டு பால்கனியிலிருந்து வந்தது.  பாட்டி மெதுவாய் எட்டிப் பார்த்துவிட்டு,  “உங்க செல்லப் பேரன் மித்துதான் உங்கள கூப்பிடறான்..” என்று சொல்லிச் சிரித்தாள்.  தாத்தா எட்டிப் பார்த்துவிட்டு,  “என்ன மித்து?” என்று அவனைப் போலவே மெல்லிய குரலில் கேட்டார்.  “ம்ச்.. ஒருமேலும் படிக்க…

squirrelwings

அடுத்து வந்த சில நாட்களில் துருவனின் பயிற்சி முழுமை பெற்றது. முழுமை என்றால் நன்றாக அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தான் என்று அர்த்தமில்லை. கௌதம முனிவருக்கு இந்தக் குறுகிய காலத்தில் அனைத்துப் பயிற்சிகளையும் கற்றுத் தருவது கடினம் என்பது நன்றாகத் தெரியும். எவ்வளவு நல்ல மாணவனாக இருந்தாலும் எல்லாக் கலைகளையும் முழுமையாகக் கற்றுத் தேர்ச்சி பெறப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். அதனால் மிகவும் அவசியமான பயிற்சியை மட்டுமே ஆசான் துருவனுக்குமேலும் படிக்க…

malaikottai

கருணை ததும்பும் அந்த முனிவர் பேசியதைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்ற துருவன் தன்னை ஒருவழியாகச் சமாளித்துக் கொண்டு அந்த முனிவரைப் பணிவுடன் வணங்கினான். அறிவும் ஞானமும் சேர்ந்து ஒளி வீசுகின்ற முனிவரின் முகத்தைக் கண்டதுமே துருவனின் மனதில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் சேர்ந்து எழுந்தன. “அரசர், நம்மை ஒரு சரியான குருவிடம் தான் அனுப்பியிருக்கிறார். இவருடைய சொற்களைக் கேட்டுக் குறுகிய காலத்தில் நம்மால் முடிந்த அளவு கலைகளைக் கற்றுக் கொண்டுமேலும் படிக்க…

Chithirakadhai

பொக்கிஷத்தைத் தேடி.. இன்னிக்கு என்ன விளையாட்டு சொல்லித் தரலாம் இந்த சுட்டிப் பசங்களுக்கு.. என்று யோசனை செய்தபடி அமர்ந்திருந்தார் பட்டாபி தாத்தா.  “பலமான யோசனையில இருக்கீங்க போல.. என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டே காபி எடுத்து வந்து தாத்தாவிடம் கொடுத்தாள் பார்வதி பாட்டி.  “ம்.. இந்த சுட்டிப் பசங்க கிட்ட புதுசா ஒரு விளையாட்டு விளையாடலாம்னு சொல்லிட்டேன்.. என்ன விளையாடலாம்னு யோசிக்கறேன்.. இந்த லாக்டவுன்ல பசங்களோட சேஃப்டி ரொம்பமேலும் படிக்க…

Maayavanam Feature

அன்று மிகவும் சோர்வாக இருந்தாள் சிவானி. பள்ளியில் இன்று அவளது தேர்வு முடிவுகள் சொல்லப்பட்டன. சில பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் சிலவற்றில் மிகக் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தாள். ஓரிரு பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை. சிவானி மிக நல்ல குழந்தை தான். நன்றாக வரைவாள். அழகாகப் பாடுவாள். ஆனால், பாடங்கள் மட்டும் கொஞ்சம் கடினமாகவே இருக்கும் அவளுக்கு. ஆனால், எப்போதும் அவள் தேர்ச்சியடையாமல் இருந்ததில்லை. இன்றோ பாடத்தில் தோல்வியைத் தழுவியதும்மேலும் படிக்க…

malaikottai

அடுத்த நாள் காலையில் காட்டில் இருந்து கிளம்பிய துருவன் தலைநகரத்தை அடைந்தான். தலைநகரைச் சுற்றி பிரம்மாண்டமான கோட்டையும், அதைச் சுற்றியிருந்த அகழியும் அவனை வரவேற்றன. அகழி என்றால் கோட்டையைச் சுற்றித் தண்ணீரைத் தேக்கி அதில் முதலைகளை விட்டிருப்பார்கள். அந்தக் காலத்தில் கோட்டைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப் படுவது. எதிரி நாட்டினர் படையெடுத்து வரும்போது நீரில் குதித்து நீந்தி வர முயற்சி செய்தால், முதலைகளுக்கு இரையாக வேண்டியது தான். அகழியைக் கடக்கப் பாலம்மேலும் படிக்க…

chutti

குழந்தைகளின் குதூகலம் ‘பட்டு பட்டு!’ என்று அந்த குடியிருப்பின் குட்டிக் குழந்தைகள் எல்லாம் பட்டாபித் தாத்தாவை சுற்றிச் சுற்றி வந்தனர்.  பார்வதி பாட்டிக்கு அதிசயமாக இருந்தது.  ‘என்ன இந்தக் குழந்தைகள் எல்லாம் இன்று இவரை இப்படி மொய்த்துக் கொள்கிறார்கள்? அதிசயமாக இருக்கிறதே!’ என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.  எல்லாம் அந்த தீப்பெட்டி ஃபோனில் பேசும் விளையாட்டு பிடித்துப் போனதால் என்று பாட்டிக்குப் புரியவில்லை.  “பட்டு.. எப்ப பேர்ட் வாச் போறோம்..” மேலும் படிக்க…

maayavanam3

சிவானி ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். கிச்சனிலிருந்து அவளது அப்பா குரல் கொடுத்தார். “சிவானி சாப்பிட வாடா” என அன்பாக அழைத்தார் ஷிவானியின் அப்பா ரகு. “வேணாம் பா, எனக்கு பசிக்கல” என்றாள் சிவானி. “தங்கம், நீ காலையிலயும் அரை தோசை தான் சாப்பிட்ட. இப்பவும் பசிக்கல ன்னு சொல்ற. அப்பா உனக்காக தான் காய்கறி சாதம் செஞ்சு வெச்சிருக்கேன். வா வந்து அப்பாவோட சேர்ந்து சாப்பிடு” எனமேலும் படிக்க…

chittu mithu

தீப்பெட்டியும் நூலும்.. மித்து தன் குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தான். முகக்கவசம் (mask) அணிந்திருந்தாலும் அவன் முகத்தின் வாட்டம் தெளிவாகத் தெரிந்தது. பட்டாபி தாத்தா தன் மாலை நடைப்பயிற்சியை பாதியில் கைவிட்டுவிட்டு மித்து அமர்ந்திருந்த சிமென்ட் பெஞ்சில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்தார். “என்ன மித்து.. இங்க உக்காந்திருக்க.. வெளையாடப் போகலயா?” என்று கேட்டார். “போ பட்டு.. எல்லாம் உங்களாலதான்..” என்று அவன் கோபம் கலந்த வருத்தத்துடன்மேலும் படிக்க…