மார்ச் 22

சுட்டீஸ்! நம்ம இன்னிக்கு ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசப் போறோம். 

world water day

தண்ணீர்! 

* தண்ணீரை நம்ம எதுக்கெல்லாம் பயன்படுத்துவோம்? 

* நமக்கு தண்ணீர் என்ன வேலைக்கெல்லாம் தேவையா இருக்கு?

* உங்க வீட்டுக்குத் தண்ணீர் எப்டி வருது? இல்ல கிடைக்கிது? 

இந்த கேள்விக்கெல்லாம் விடையை நீங்களே சொல்லிப் பாருங்களேன். 

முதல் கேள்விக்கு, குடிக்க, சமைக்க, குளிக்க, செடிகளுக்கு விட, இப்டி நிறைய சொல்லியிருப்பீங்க! சரியா?

இரண்டாவது கேள்விக்கு, கழிப்பறையில் பயன் படுத்த, வீடு வண்டில்லாம் துடைக்க, சுத்தம் செய்ய, இப்டி பதில் சொன்னீங்களா? 

மூன்றாவது கேள்விக்கு, கார்ப்பரேஷன் குழாய் வழியா வீட்டுக்கு தண்ணி வருது! கோடை காலத்தில லாரில தண்ணி வரும்! இப்டி பதில் சொன்னீங்களா? 

நான் ஏன் இதெல்லாம் கேக்கறேன்னு யோசிக்கிறீங்கதானே? 

சுட்டீஸ்! சில மனிதர்களின் சுயநலத்தினால ஒவ்வொரு வீட்லயும் கிணறு மூலமா கிடைக்க வேண்டிய தண்ணி இப்ப குழாய் மூலமாகவும் லாரி மூலமாகவும் விநியோகிக்கும் நிலைக்கு நாம தள்ளப்பட்டிருக்கோம். அது மட்டுமில்லாம குடிக்கறதுக்கும் சமைக்கறதுக்கும் பயன்படுத்தும் தண்ணீரை நாம கேன் வாட்டர்ன்னு சொல்லப்படற பாட்டில்ல அடைச்சி விற்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு ஆளாகிட்டோம்.  

இதே நிலை நீடிச்சுதுன்னா இன்னும் கொஞ்ச வருடங்களில் நம்ம வாழற இந்த பூமில தண்ணி சுத்தமா காலியாகற நிலை வந்துடும். 

தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மாகாணம்தான் முதல் முதல்ல ஸீரோ டே அப்டீன்னு சொல்லப்படற முழுமையாகத் தண்ணீரே இல்லாத நாள், நகரமாக அறிவிக்கப்பட்டது. 

அந்தப் பட்டியல்ல, நம்ம சென்னை அடுத்ததா இருக்கு. 

எந்த நிமிஷமும் நம்ம அரசாங்கம் சென்னையை தண்ணியே இல்லாத, வாழ வழியற்ற நகரம்னு அறிவிக்கலாம். அந்த நிலையிலதான் நாம இருக்கோம்.

ஆனா நம்ம ஊர்ல நல்லா மழை பெய்யுதே! வருஷா வருஷம் வெள்ளம்லாம் கூட வருதே? அப்றம் ஏன் நம்ம சென்னைல தண்ணி இல்லாம போச்சு? அப்டீன்னு உங்களுக்கு தோணுதுதானே? 

ஆமாம் சுட்டீஸ்! நம்ம சென்னைக்கு தேவையான மழை பெய்யுது. ஆனா அதை நாம சரியானபடி சேமிச்சி வைக்காததினால எல்லா தண்ணியும் கடல்ல போய் கலந்து வீணாகிடுது. 

அது போறாதுன்னு நம்மளும் பொறுப்பேயில்லாம நமக்கு கிடைக்கற தண்ணிய வீண் பண்ணிட்டிருக்கோம். 

நம்ம சென்னையும் கூடவே மற்ற இந்திய நகரங்களும் தண்ணீர் பற்றாக்குறையில்லாத இடமா மாறணும்னா நாமளும் கொஞ்சம் பொறுப்பா மாறணும்ல.. 

அதுக்கு என்ன செய்யலாம்னு பாக்கலாமா? 

மழைநீர் சேகரிப்பது, ஊர்ல இருக்கற ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளை தூர் வாரி சுத்தம் செய்யறது எல்லாம் அரசாங்கத்தோடது. அதைப் பெரியவங்க செய்யணும். 

அதே நேரத்தில சின்னவங்களான குழந்தைகள் நீங்கல்லாம் சேர்ந்து, என்ன உதவில்லாம் செய்யணும் தெரியுமா?

கிடைக்கிற தண்ணிய அளவோடு தேவைக்கேற்ப சிக்கணமா பயன்படுத்த கத்துக்கணும். 

குழாய திறந்துவிட்டுகிட்டே பல் தேய்கிறது, முகம் கழுவறது எல்லாம் செய்யாம,  மக்ல (mug 🍺) தண்ணி எடுத்து வெச்சி பல் தேய்க்கவும் முகம் கழுவவும் கத்துக்கணும். 

அப்றம் ரொம்ப முக்கியமா குளிக்கறதுக்கு ஷவர் பயன்படத்தாம பக்கெட்ல தண்ணி பிடிச்சி வெச்சிகிட்டு குளிக்கணும். 

நல்ல தண்ணியை பெரிய ஹோஸ் குழாய் மூலமா தோட்டத்து செடிகளுக்கு விடாம, காய்கறி, கீரை இதெல்லாம் கழுவற தண்ணிய செடிகளுக்கு விடலாம். 

RO ன்னு சொல்லப்படற குடிதண்ணீர் சுத்திகரிப்புக் கருவில இருந்து வெளியாகற கழிவு நீரை நம்ம வீட்டு கழிப்பறையில இருக்கற ஃப்ளஷ்ல ஊற்ற பயன்படுத்தலாம். 

இந்த மாதிரி கவனத்தோட பொறுப்பா நீங்க உங்க பேரண்ட்ஸ்க்கு உதவி செய்தா, நம்ம ஊர் ஸீரோ டேன்னு ஆகற நிலையில இருந்து தப்பிக்க முடியும். 

இந்த மாதம் (மார்ச்) 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப் படுது. அதையும் நினைவில வெச்சிக்கோங்க. தண்ணிய சிக்கனமா பயன்படுத்துங்க! 

என்ன சுட்டீஸ், நீங்கல்லாம் சமத்தா இருந்து தண்ணிய சிக்கணமா பயன்படுத்துவீங்கதானே? 

அடுத்த இதழ்ல வேற ஒரு நல்ல விஷயத்தோட வரேன். அது வரைக்கும் சமத்தா இருங்க! சரியா! 

பை பை! டாட்டா! 

👋👋👋👋👋👋👋👋👋👋👋

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments