பொம்மை நல்ல பொம்மை

அம்மா தந்த பொம்மை

கண்ணைக் கவரும் பொம்மை

கண் சிமிட்டும் பொம்மை

கன்னம் சிவந்த பொம்மை

பின்னல் போட்ட பொம்மை

சட்டை போட்டாள் பொம்மி

பொட்டு வைத்தாள் முகத்தில்

முத்தம் ஈந்தாள் கன்னத்தில்

சிரித்து மகிழ்ந்தது பொம்மை

தூங்கச் சென்றாள் பொம்மி

பக்கத்தில் படுத்தது பொம்மை

அணைத்துக் கொண்டாள் பொம்மி

கண்ணை மூடியது பொம்மையும்.

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments