முகில், ராம் மற்றும் கண்மணி மூவரும் நெருங்கிய நண்பர்கள். செங்கல்பட்டில் ரூபி அபார்ட்மெண்ட்டில் இருக்கின்றார்கள், பாரதி வித்யாலயா பள்ளியில் படிக்கின்றார்கள். அழகாய் நீல நிறச் சீருடை அணிந்திருப்பார்கள். அவர்கள் ஐந்தாம் வகுப்பில் படிக்கின்றார்கள்.

அன்று பள்ளி முடிந்தவுடன் புத்தகம், பேனா, பென்சில் எல்லாத்தையும் வேகவேகமாக பையில் போட்டு விட்டு ஒன்றாகக் கிளம்பினர், பேசிக் கொண்டே பள்ளியை விட்டு வெளியே வந்தனர்.

“இன்னைக்கு நம்ப இன்னொரு வழியில் போகலாம்”, என்று முகில் சொன்னாள்.

“ஆமாம் ஒரே வழியில போனா போரு அடிக்குது”, என்றான் ராம்.

அந்த வழியில் இவர்கள் ஏற்கனவே ஒரு முறை வந்திருக்கின்றார்கள். அந்த வழியில் வந்தால் ஒரு தோட்டத்தைக் கடக்க வேண்டும், அது ஒரு மந்திரத் தோட்டம்‌. ஆனால் அது யாருக்கும் தெரியாது. ஏன்னா அந்த பூக்கள் மனிதர்கள் வரும் போது அமைதியாக இருப்பார்கள்.

மூன்று நண்பர்களும் பேசிக் கொண்டே நடந்தனர். அவர்கள் தோட்டத்தை அடைந்தார்கள். அங்கு சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பலாம் என்று யோசித்தார்.

அப்போது ‘ஹச்’சென்று ஒரு சத்தம் கேட்டது. மூவரும் சுற்றி முற்றிப் பார்த்தனர். ஆனால் யாரையும் காணவில்லை‌. மீண்டும் ஹச்சென்று ஒரு சத்தம் கேட்டது. அப்போது தான் அவர்களுக்கு அது ஒரு பூ என்று தெரிந்தது.

mandhira pookkal
படம்: அப்புசிவா

“நீ தான் தும்முனியா?”, என்று ராம் கேட்டான். ஆமாம் என்று தலையாட்டியது ஒரு பூ. அது ஒரு சிறிய பூ, அதோட இதழ்கள் கருப்பு நிறத்திலும், அதன் மகரந்தம் வெள்ளை நிறத்திலும் இருந்தது.

“உங்களால பேச முடியுமா?”, என்று கண்மணி கேட்டாள்.

“ஆமாம் எங்களால் முடியும், எங்களுக்கு ஒரு விஞ்ஞானி தான் உயிர் கொடுத்தார். அவர் ஒரு நாள் இந்த பக்கம் வரும் போது எங்களைப் பார்த்தார். நாங்கள் வாடிப் போகுற நிலைமையில் இருந்தோம். அதனால் தான் எங்களுக்கு உயிர் கொடுத்தார்”, என்று சொன்னது ஒரு ஊதா நிறப் பூ.

“ஆமாம் நீ ஏன் தும்மிக்கிட்டு இருக்க!”, என்று கருப்பு நிறப் பூவைப் பார்த்துக் கேட்டாள் முகில்.

“நேத்து நான் எனக்கு தண்ணீர் ஊத்தும் போது நிறைய ஊற்றிக் கொண்டேன் என்று நினைக்கிறேன். அதனால் என் வேர் கொஞ்சம் அழுகி இருக்கும்”, என்று சொல்லி ஹச்சென்று தும்மியது.

“நீங்கள் எங்கிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றுவீர்கள்?”, என்று கேட்டாள் கண்மணி.

“இங்கு அருகே ஒரு குளம் இருக்கிறது, நாங்கள் அங்கிருந்து தான் தண்ணீர் ஊற்றிக் கொள்வோம்”, என்று ஒரு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் பூ சொன்னது.

“உங்களுக்கு அளவா தண்ணீ ஊத்தவே தெரியவில்லை, நாங்களே உங்களுக்கு பள்ளி முடிந்து வரும் போது தண்ணீர் ஊற்றி விட்டுச் செல்கிறோம்”, என்று வாக்குறுதி கொடுத்தார் ராம்.

அவன் சொன்னது போலவே செய்தான். மூன்று பேரும் தினமும் தங்களுடைய தண்ணீர்க் குடுவையில் இருந்து தண்ணீர் ஊற்றினார்கள். 100 நாட்கள் தொடர்ந்து செய்து, 101வது நாள் தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அந்தப் பூக்கள் மீண்டும் பழையபடி சாதாரண நிலைமைக்கு வந்திருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments