” சுகந்தி! இன்னிக்கு மாலை சீக்கிரம் ஆபீஸ்ல இருந்து வந்து, உங்களை ஜவுளிக் கடைக்குக் கூட்டிட்டுப் போறேன்; போய் எல்லோருக்கும் பொங்கலுக்குத் துணிகள் வாங்கிட்டு வந்துடலாம்!” என்று சொல்லிக் கொண்டே குளிக்கப் போய் விட்டான் ஶ்ரீதர்.

“சரிங்க! நான் கவிதா கிட்டச் சொல்லி மாலை வந்ததும் வீட்டுப் பாடம் எல்லாம் முடிக்கச் சொல்லிடறேன்!” என்று சொன்ன வசந்தி,

“கவி! கவி! ” என்று கூப்பிட்டாள்.

“என்ன விஷயம் அம்மா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் எட்டாம் வகுப்பு படிக்கும் அவர்களின் ஒரே பெண் கவிதா.

“இன்னிக்குச் சாயங்காலம் அப்பா சீக்கிரம் வர்றேன்னு சொல்லி இருக்காரு; வந்து நம்மைப் பொங்கலுக்குப் புதுத்துணி எடுக்கக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னாரு; அதனால் நீ பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே உன்னோட பள்ளிப் பாடங்களை முடித்து விடு; அப்போ தான் ஜவுளிக் கடைக்குப் போய் உடைகள் எடுத்துட்டு வர வசதியா இருக்கும் என்றாள் சுகந்தி.

“ஐ! ஜாலி!! சரிம்மா! வந்த உடனே சீக்கிரம் முடிச்சுடறேன்!”

“சரி, நீயும் அப்பாவும் சாப்பிட வாங்க; அப்போ தான் சரியான நேரத்துக்கு உன்னைப் பள்ளியில இறக்கி விட்டு விட்டு அப்பா ஆபீஸ் போகச் சரியாக இருக்கும்!”

ஶ்ரீதரும் உணவு மேஜைக்கு வரவே இருவருக்கும் காலை உணவு பரிமாறினாள். அவர்கள் சாப்பிட்டுக் கிளம்பிச் சென்று விட்டார்கள். அவர்கள் கிளம்பிச் சென்றதும் சுகந்தியும் சாப்பிட்டு முடித்தாள். வேலைக்காரி அஞ்சலை வந்து பாத்திரங்கள் தேய்த்து, வீடு பெருக்கி, துடைத்து விட்டுச் சென்றாள்.

one dress
படம்: அப்புசிவா

     இவள் கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு, கொஞ்ச நேரம் தோழிகளுடன் போனில் அரட்டை அடித்தாள். பிறகு சாப்பிட்டு விட்டுக் கொஞ்ச நேரம் அப்படியே சோஃபாவில் படுத்துக் கண் அயர்ந்தாள். பிறகு நான்கு மணிக்கு எழுந்தவள் காபி போட்டுக் குடித்து விட்டு, வெங்காயப் பக்கோடா செய்ய எல்லாம் தயாராக

வைத்து விட்டுக் கணவன், மகள் வரவிற்காகக் காத்து இருந்தாள்.

    முதலில் வந்தவுடன் சூடாகப் பக்கோடா போட்டுக் கொடுத்தாள். சாப்பிட்டு விட்டுப் போய் பள்ளிப்

பாடங்களைப் படித்து முடித்தாள். ஶ்ரீதர் வந்ததும் அவனுக்கு காபி, பக்கோடா கொண்டு போய்க் கொடுத்தாள். பிறகு அவனும் தயாராகி வரவே மூவரும் ஜவுளிக்

கடைக்குக் கிளம்பினர்.

   அங்கு போய் கவிதாவுக்குப் பிடித்த உடையை எடுத்து முடித்தவுடன், சுகந்தி,

“இன்னொரு டிரஸ் எடு கவி!” என்றாள்.

“இல்லம்மா! எனக்கு ஒரு டிரஸ் போதும் அம்மா!”

“ஏன் வேண்டாம்னு சொல்ற?”

” இல்லம்மா! என் தோழி சவிதா  வீட்டுல அவ அப்பாவுக்குக் குறைஞ்ச சம்பளமாம்; அதுனால கலர் டிரஸ்ஸே அவளுக்கு வாங்கித் தர மாட்டாங்க அம்மா; இப்போ அடுத்த வாரம் அவளுக்குப் பிறந்த நாள் வருது அம்மா! அதுக்கு நாம அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்துடலாம் அம்மா!” என்றவுடன், ஶ்ரீதர் ” தாராளமா வாங்கிக் கொடு கவி!” என்றதும் உற்சாகமாக வாங்கினாள் கவிதா.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments