அனிதா செல்வம் (Page 2)

நான்‌அனிதா செல்வம்.‌ தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்‌முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்‌தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.

kokkarakko1

பல கோடி வருடங்களுக்கு முன்னால், நம்ம பூமியைச் சுற்றி பத்து சூரியன்கள் இருந்தனவாம். அதில் பெரியதுதான் நம் சன். பத்து சூரியன்கள் இருப்பதால் பூமியில் எப்போதும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.மேலும் படிக்க…

playdough

கடையில் வாங்குகிற கலர் மாவு சின்ன டப்பாவில் கொஞ்சமா இருக்கும். விலை கம்மியா இருந்தா நல்லா இழுக்க வராது. விலை அதிகமாக வாங்கினாலும் ஒரு வாரத்தில் எல்லா கலரும் கலந்திட அம்மாகிட்ட திட்டு வாங்கனும். வீட்டிலேயே ப்ளே டோ செஞ்சா எப்படி இருக்கும்?மேலும் படிக்க…

appadiya

பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் கற்பனை உலகத்தில் வானத்திற்கு நிறமே கிடையாது. காலையில் சூரியனும் இரவில் நிலவும் நட்சத்திரங்களும் நிறமற்ற வானத்தில் உலாவி வந்தன. அங்கே ஓர் உயரமான,  பல நூறு உயிர்களின் வாழ்விடமாக மலை ஒன்று இருந்தது. அந்த மலையின் பெயர் நீல மலை. அந்த பெயருக்குப் காரணம் அந்த மலை எங்கும் பூத்திருக்கும் நீலநிறப்பூ. அந்த மலையின் அடிவாரத்தில் பல அழகான கிராமங்கள் இருந்தன. அந்தமேலும் படிக்க…

minmini

நம் கற்பனை உலகத்தில் பல கோடி வருடங்களுக்கு முன்னால் இப்போதிருப்பது போலவே நீலநிற வானம், அந்த அழகு வானத்தைப் பேரழகு செய்ய காலையில் சூரியன் இரவில் நிலா, பல கோடி நட்சத்திரங்கள்    எல்லாம் இருந்தன.  அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியமான கடமையும் இருந்தது. சூரியனுக்கு உயிர்கள் வாழத் தேவையான வெப்பத்தையும், பளிச்சென்ற ஒளியையும் காலை முழுதும் கொடுக்க வேண்டும். நிலவிற்கு இரவில் உயிர்கள் ஓய்வெடுக்க குளிர்ச்சியான, மிதமான ஒளி தரமேலும் படிக்க…

Thottalsinungi

நமது அழகான கற்பனை  உலகத்தில் ஓர் அழகான நாடு இருந்தது. அந்த நாட்டின்‌ ராஜாவிற்கு சினுங்கன் என்ற அழகான மகன் இருந்தான்.  நாட்டின் இளவரசன்; வருங்கால அரசன். ஏன், எதற்கு , எப்படி என்று எங்கும் கேட்டபடி சுற்றிக்கெண்டிருக்கும்  நம் சினுங்கனுக்கு உலகத்திலேயே பிடிக்காத இரண்டு விஷயங்கள் இருந்தன.  ஒன்று, வேலை செய்வது; எப்போது பார்த்தாலும் எல்லோரும் ஏதாவது வேலை செய்தபடி இருப்பதைப்  பார்த்தால் அவனுக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும்.மேலும் படிக்க…

Theniyin Parisu

பல கோடி வருடங்களுக்கு முன்பு, நம் பூமியில் செடிகள், கொடிகள், மரங்கள் இவற்றின் தண்டுகள், இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் தவிர மற்ற   அனைத்தும் அதாவது நீந்தும், ஊர்ந்து செல்லும், பறக்கும், நடக்கும், துள்ளிச்செல்லும் விலங்குகள் அனைத்தும் கறுப்பு வெள்ளை நிறத்தில்தான் இருந்தன!!  நம் கண்களில் வெள்ளைப் பின்புலத்தில் கருவிழிகள் உள்ளதல்லவா,  அதுபோலத்தான் எல்லா உயிரினங்களும் இருக்கும்.  (என்னது!! ஏற்கனவே  கற்பனை உலகத்திற்கு வந்து விட்டீர்களா? சமத்துக் குட்டிஸ்!!!) நிறங்கள்மேலும் படிக்க…

kathaiarasan

தமிழ் கதைகள், தமிழர் வரலாறு சார்ந்த கதைகள் இங்கு உள்ளன. அனிதா செல்வம்நான்‌அனிதா செல்வம்.‌ தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்தமேலும் படிக்க…

Muthu Muthai

இப்போது நாம் பல கோடி வருடங்களுக்கு முன்,அதாவது பூமியில் மனிதர்கள் எல்லாம் உருவாகியதற்கு முந்தைய காலத்தில் இருக்கிறோம். அப்போது நம் நிலா இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு பெரியதாகவும் இன்னும் பிரகாசமாகவும்‌ இருக்கும். (‘வாட்?’  என்றா கேட்கிறீங்க? அச்சோ!  நீங்க இன்னும் நம்ம கற்பனை உலகத்தில் குதிக்கலையா?)  நிலாவும் பூமியும் இப்போது போலவே அப்போதும்  இணைபிரியாத நண்பர்கள். நிலாவே அத்தனை அழகாக இருக்கும் போது பூமியைச் பற்றிச் சொல்லவாமேலும் படிக்க…

Appadiya

பல வருடங்களுக்கு முன் ஒரு குளிர்சாதனப் பெட்டியில் அதாவது ஃப்ரிட்ஜ்ஜில்  தக்காளி, முட்டை, வெங்காயம், ஐஸ்கிரீம் நான்கு பேரும் நண்பர்களாக இருந்தாங்க. சூப்பர் மார்க்கெட்டின் மரப்பலகையில் இருந்ததிலிருந்தே நால்வரும் நண்பர்கள்தான். (பல வருடங்களுக்கு முன்னாடி ஃப்ரிட்ஜா? அதெப்படின்னு கேக்குறீங்களா.. நோ..நோ.. “அதெப்படி?” என்று கேட்காமல் “அப்படியா!”என்ற ஆச்சர்யத்தோடு நம் கற்பனை உலகத்தில் தொபுக்கடீர்னு குதிச்சிடுங்க. ஓகே?) அந்த நால்வரில் வெங்காயம்தான் கொஞ்சம் விவேகமானவன்.  அன்று இரவு நால்வரும் பேசிக்கொண்டிருந்த போது, மேலும் படிக்க…

WhatsApp Image 2020 07 14 at 4.11.20 PM

வணக்கம் செல்லங்களே.. உங்களிடம் முதல் முறையாகப் பேசும்போதே, மிகவும் முக்கியமான செய்தி ஒன்று சொல்லப்போகிறேன்.. முக்கியமான செய்தியா? அப்போ நீங்களும் கொரோனாவைப் பற்றி பேசப் போறீங்களா? அலுத்துக்கொள்ளாதீங்கப்பா! அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதாய், விடுமுறையே கசந்து விட்டது இல்லையா? என்ன செய்வது? மனித குலம் இந்தப பெரும் கொள்ளை நோயோடு போராடிக் கொண்டிருக்கிறதே! ஆனால் நான் அதன் பாதிப்பு விவரங்களின் கணக்கு சொல்லப்போவதில்லை. அந்தக் கொடிய அரக்கனை அழிப்பதற்காக,மேலும் படிக்க…