“ஹாய் பூஞ்சிட்டூஸ் எப்படி இருக்கீங்க… எல்லாருக்கும் வினிதா, ராமு, தாத்தா, பாட்டி மற்றும் நம் பூஞ்சிட்டு குழுவின் சார்பாக இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.   “பாட்டி பாட்டி! எங்க இருக்கீங்க?” என அழைத்தபடி பட்டாடை சலசலக்க ஓடி வந்தாள் வினிதா.  “ஹே வினிதா எங்க இவ்வளவு வேகமா ஓடுற?” என குட்டி வேஷ்டி தரையில் புரள அவளைப் பின் தொடர்ந்து வந்தான் ராமு.    வேகமாக ஓடிவந்த இருவரையும்மேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே! ஒரு வழியா 2020ஐ வழியனுப்பி வெச்சாச்சு.. 2021 புத்தம்  புதுசா பிறந்தாச்சு.. இந்த புத்தாண்டை வீட்டில் எல்லாரோடையும் சந்தோஷமா வரவேத்திருப்பீங்கன்னு நம்பறோம். சுட்டிகள் எல்லோருக்கும் பூஞ்சிட்டு  சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இப்போ வழக்கமான நம்ம கதைக்கு  வருவோமா? இன்னைக்கு நாம  கதை  கதையாம் காரணமாம் பகுதில குடி’ன்னு முடியுற ஊரோட பெயர்க்காரணத்தைக் குடிக்க போறோம். மன்னிச்சு.. மன்னிச்சு.. படிக்கப்போறோம்! குடி அப்படின்னா உறவினர்கள் கூட்டத்தோடு மக்கள்மேலும் படிக்க –>

கருணா அவர்கள் வீட்டின் இளவரசி. அவளோட அம்மா, அப்பாவிற்கு ஒரே மகள். ரொம்பச் செல்லம். ஆனாலும் கருணா  ரொம்ப நல்ல பொண்ணு தான். பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்குவா‌. சொன்ன பேச்சைக் கேப்பா. அப்புறம் எல்லோருக்கும் தானாவே உதவி செய்வா. அதுனாலயே அவளை எல்லோருக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கருணாவோட பாட்டி அவங்க வீட்டிலயே அவங்க கூடத்தான் இருந்தாங்க. அதுனால கருணா பாட்டிக்கும் செல்லம் தான். அவளுக்கும் பாட்டியை ரொம்பமேலும் படிக்க –>

ராமு : டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ? சோமு : தை. 2. ராமு : பேங்க் மேனேஜர் பின்னால ஒருத்தர் அலைஞ்சா எப்படி அலைவாரு? சோமு : லோன் லோன்-னுதான் 3. ராமு : எதுக்கு நீங்க சாப்பாட்டுல கோந்தைக் கலந்துக்கறீங்க?? சோமு : அப்பதான் சார், சாப்பாடு உடம்புல ஒட்டுது. 4. ராமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?   சோமு : பொண்டாட்டிமேலும் படிக்க –>

பூஞ்சிட்டுக்களே, இன்றைக்கு பல்வேறு வடிவங்கள் கொண்டு அழகிய பூனை செய்யலாமா? தேவையான பொருட்கள் பல வண்ண காகிதங்கள் கத்தரிக்கோல் செய்முறை வண்ணக் காகிதங்களில் கீழ்க்கண்ட வடிவங்களை வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு பெரிய வட்டம் – முகத்திற்கு, இரண்டு குட்டி வட்டங்கள் – கண்களுக்கு ஒரு செவ்வகம் – உடல் பகுதி நான்கு சிறிய சதுரங்கள் – கால்களுக்கு ஒரு சிறிய முக்கோணம் – மூக்கு, ஒரு நீள் முக்கோணம் –மேலும் படிக்க –>

பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் கற்பனை உலகத்தில் வானத்திற்கு நிறமே கிடையாது. காலையில் சூரியனும் இரவில் நிலவும் நட்சத்திரங்களும் நிறமற்ற வானத்தில் உலாவி வந்தன. அங்கே ஓர் உயரமான,  பல நூறு உயிர்களின் வாழ்விடமாக மலை ஒன்று இருந்தது. அந்த மலையின் பெயர் நீல மலை. அந்த பெயருக்குப் காரணம் அந்த மலை எங்கும் பூத்திருக்கும் நீலநிறப்பூ. அந்த மலையின் அடிவாரத்தில் பல அழகான கிராமங்கள் இருந்தன. அந்தமேலும் படிக்க –>

ஒருமுறை, முயல்கள்  தங்கள் வாழ்வில் படும் கஷ்டங்களைப் பற்றிப் பேசுவதற்காக ஒரு கூட்டம் போட்டன. “எப்பவுமே நம்மளைச் சாவைக் காட்டிப் பயமுறுத்திக்கிட்டே இருக்காங்க.  மனுஷன்லேர்ந்து நாய், கழுகு, நரி வரைக்கும் நம்மளைப் பயத்திலேயே வைச்சிருக்காங்க.  நமக்கு மகிழ்ச்சிங்கிறதே சுத்தமா இல்ல.  அதுக்குப் பேசாம உடனடியா நாம செத்துப் போயிடுறது நல்லது” என்று அந்தக் கூட்டத்தில், முயல்களின் தலைவன் சொன்னது. “ஆமாம்.  எப்பப் பார்த்தாலும், ஏதாவது நம்மளைப்  பயமுறுத்திச் சோகமா ஆக்குது. மேலும் படிக்க –>

டூடுல் ஆர்ட் கொரானா காரணமாக அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் பெருமளவு தளர்த்தப்பட்டதால், குடியிருப்புவாசிகள் பலர் கிறிஸ்துஸ், புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களுக்காகத் தங்கள் சொந்த ஊர் கிளம்பிச் சென்றுவிட, குடியிருப்பில் மிகக் குறைவானவர்களே இருந்தார்கள்.  அதிலும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்க, சுட்டி மித்து தன் நண்பர்களை ரொம்பவே மிஸ் செய்தான்.  “பட்டு! என் ஃப்ரண்ட்ஸ் யாரும் இங்க இல்ல! உங்க வீட்டுக்கும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க! செம்மையாமேலும் படிக்க –>

ஷிவானி தன்னோட அப்பா அம்மா பாட்டி தாத்தாவோட பொங்கல் பண்டிகை கொண்டாட தன் தாத்தாவோட கிராமத்துக்கு போயிருக்கா.. ஆனா அவங்க அங்க போனதில் இருந்து பொசும்பலா(தூறல்) விழுந்துக்கிட்டு இருந்தது. கிராமத்துல வந்து, தாத்தா வளர்க்குற ஆடு,மாடு,கோழி எல்லாத்தோடவும் விளையாடனும் அப்டின்னு ஆசையா வந்த ஷிவானிக்கு ஏமாற்றமா இருந்தது. அதனால, அவ அவங்க தாத்தாவோட செல்பேசிய வாங்கி அதுல விளையாட ஆரம்பிச்சிட்டா.. வானத்துல முகாமிட்டு இருந்த மேகக்கூட்டம் மெல்லமா விலகி, சூரியக்மேலும் படிக்க –>

அணிலைக் கண்டு சிரித்ததற்காக உண்மையில் மனம் வருந்தினான் துருவன். “அணில் தம்பி. என்னை மன்னித்து விடப்பா. ‘உருவம் கண்டு எள்ளாமை‌ வேண்டும்’ என்ற சொற்களின் முழு உண்மையையும் இன்று நான் புரிந்து கொண்டேன். உன்னுடைய சிறப்பான தகுதியின் முன்னால் நான் தான் இன்று சிறியவனாக உணர்கிறேன். உங்கள் மூவரின் உதவியுடன் நிச்சயமாக நான் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெறுவேன். நாம் விரைந்து கிளம்பலாம். எண்ணிய கருமத்தை உடனடியாக நிறைவேற்றுவதேமேலும் படிக்க –>