பரங்கிக்காய் அல்வா
“பாட்டி எங்க இருக்கீங்க? நான் ஸ்கூல்லேர்ந்து வந்துட்டேன்” “வா வினிதா கண்ணு, மத்யானம் சாப்டீங்களா? நல்லா பாடம்லா கவனிச்சீங்களா?” “ஆங் பாட்டி! சரி எனக்குபீ பசிக்குது எதாவது சாப்ட பண்ணி தரீங்களா”. “ம்ம், அதுக்கென்ன என் தங்கத்துக்கு இல்லாததா? எங்க ராமுவ காணும்? “அவன் தாத்தா கூட போர் போட வயலுக்கு போயிட்டான். எனக்கு செஞ்சு குடுங்க பாட்டி” “அப்படியா சரி சரி, நீங்க போயிமேலும் படிக்க –>
மைனா
குட்டிச் செல்லங்களே! பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! இம்மாதம் உங்களுக்கு அறிமுகம் செய்யப்படும், பறவையின் பெயர் மைனா. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் இது எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த பறவை. மைனா என்பது ஹிந்தி சொல். தமிழ் இலக்கியங்களில் ‘நாகணவாய்ப்புள்,’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உடல் அடர்ந்த காப்பிக்கொட்டை நிறம், தலையும் கழுத்தும் கறுப்பு, வாளுக்கடியில் வெள்ளை, கண்ணைச் சுற்றி மஞ்சளாக இருக்கும். புறா, காக்கா, சிட்டுக்குருவி போல, மனிதர்கள் வசிக்குமிடங்களில்மேலும் படிக்க –>
சிட்டுவிடம் கேளுங்கள் – 3
1. சிட்டு! வானம் ஏன் நீலமாகத் தெரிகின்றது? சதீஷ், திருச்சி. நம்முடைய பூமியைச் சுற்றிக் காற்று மண்டலம் (atmosphere) இருக்கின்றது. இதையே நாம் வானம் என்று குறிப்பிடுகின்றோம். சூரியனிலிருந்து பூமிக்கு வரும் ஒளிக்கதிரில், சிவப்பு, ஊதா, நீலம் போன்ற பலநிறக் கதிர்கள் உள்ளன. அந்த ஒளிக்கதிர், காற்று மண்டலம் வழியாக, பூமியை நோக்கி வரும் போது, சிதறுகின்றது. குறுகிய அலைநீளம் கொண்ட நீலம் மற்றும் ஊதா நிறக்கதிர்கள், அதிக சிதறலுக்குமேலும் படிக்க –>
சுட்டி மித்துவும் பட்டாபி தாத்தாவும் – 3
குழந்தைகளின் குதூகலம் ‘பட்டு பட்டு!’ என்று அந்த குடியிருப்பின் குட்டிக் குழந்தைகள் எல்லாம் பட்டாபித் தாத்தாவை சுற்றிச் சுற்றி வந்தனர். பார்வதி பாட்டிக்கு அதிசயமாக இருந்தது. ‘என்ன இந்தக் குழந்தைகள் எல்லாம் இன்று இவரை இப்படி மொய்த்துக் கொள்கிறார்கள்? அதிசயமாக இருக்கிறதே!’ என்று நினைத்து சிரித்துக் கொண்டாள். எல்லாம் அந்த தீப்பெட்டி ஃபோனில் பேசும் விளையாட்டு பிடித்துப் போனதால் என்று பாட்டிக்குப் புரியவில்லை. “பட்டு.. எப்ப பேர்ட் வாச் போறோம்..” மேலும் படிக்க –>
அட்டப்பூச்சிகள்
அட்டப்பூச்சிகள் வேத காலத்தை சார்ந்தவை. இந்த பூச்சிகளை ஆங்கிலத்தில் lace winged insects என்று சொல்வார்கள். இந்த பூச்சிகளின் முன்புறம் மற்றும் பின்புறம், எண் எட்டு (நம்பர் 8) வடிவில் இறக்கைகள் இருக்கும். எட்டு எண் போன்ற இறக்கைகளை கொண்ட பூச்சிகள் என்பதால் இந்த பூச்சியை அட்ட பூச்சி என்று சொல்ல ஆரம்பித்தார்கள். (அஷ்டம் என்றால் எட்டு) இந்தப் பூச்சிகளுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. முட்டைகளை இடும்போது, வரிசையாக இட்டுக்கொண்டுமேலும் படிக்க –>
வடிவங்கள் அறிவோம்
கணிதம் சொல்லும் பாடமொன்று இனிதாய் கற்றிடலாம் இன்று கண்மணிக் குழந்தைகள் வாருங்கள் கவனித்துக் கேட்டு அறிந்திடுங்கள். வட்டம் சதுரம் முக்கோணம் கோளம் கூம்பு கனசதுரம் வடிவம் பலவும் இருந்தாலும் வடிவாய்க் கற்றுப் பயனடைவோம். வட்டத்துக்கு உதாரணம் சொல்வது மிகவும் எளிதாகும் வளையல் வளையம் குறுந்தகடும் கலயத்தின் வாயும் கருவிழியும் தோசையும் ஆப்பமும் நாணயமும் சக்கரமும் வட்ட வடிவமாகும். சதுரத்துக்கு உதாரணம் சொல்வது மிகவும் எளிதாகும் சதுரங்கப் பலகை, தாயக்கட்டம் கேரம்மேலும் படிக்க –>
நா காக்க
வணக்கம் பூஞ்சிட்டுகளே! போன மாசம் முழுக்க ரிவிஷன் எக்ஸ்சாம்ன்னு ஆன்லைன் கிளாஸ உத்து உத்து பார்த்து நம்ம கண்ணும்… முதுகு உடைய உக்காந்து நம்ம முதுகு , வலிக்க வலிக்க எழுதி நம்ம கையும் படாத பாடு பட்டிருக்குமே! ஆனா இந்தா நாக்கு மட்டும் ஜாலியா இருக்குல்ல..?! அத உருட்டி மிரட்டி பிரட்டி கொஞ்சம் கலாட்டா பண்ணுவோமா.. குட்டீஸ்..?! நீங்க செய்ய வேண்டியதெல்லாம்.. கீழ நாங்க கொடுத்திருக்க சொற்களை வேகமா மேலும் படிக்க –>
மாயவனம் – 3
சிவானி ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். கிச்சனிலிருந்து அவளது அப்பா குரல் கொடுத்தார். “சிவானி சாப்பிட வாடா” என அன்பாக அழைத்தார் ஷிவானியின் அப்பா ரகு. “வேணாம் பா, எனக்கு பசிக்கல” என்றாள் சிவானி. “தங்கம், நீ காலையிலயும் அரை தோசை தான் சாப்பிட்ட. இப்பவும் பசிக்கல ன்னு சொல்ற. அப்பா உனக்காக தான் காய்கறி சாதம் செஞ்சு வெச்சிருக்கேன். வா வந்து அப்பாவோட சேர்ந்து சாப்பிடு” எனமேலும் படிக்க –>
ரகசியப் பூந்தோட்டம் – 2
இரவில் கேட்ட அழுகுரல் தோட்டத்திற்குச் சென்ற மேரி, அங்கு பெரிய புல்வெளி, நிறைய மரங்கள், பூந்தொட்டிகள் இருந்ததைப் பார்த்தாள். தோட்டத்தின் நடுவில் ஒரு செயற்கை நீரூற்று கூட இருந்தது. ஆனால் அதில் தண்ணீர் இல்லை. காய்கறிகள், கீரை, பழங்கள் வளரக்கூடிய சிறிய சமையலறைத் தோட்டம் ஒன்றும் தனியாக அமைக்கப்பட்டிருந்தது. தனக்குத் தெரிந்த செடிகளின் பெயரை நினைவுபடுத்த முயன்றாள் மேரி. அப்போது மண்வெட்டியுடன் வயதான மனிதர் ஒருவர் அங்கு வந்தார். ‘நீமேலும் படிக்க –>
