இதழ் – 4 (Page 2)

Maayavanam Feature

அன்று மிகவும் சோர்வாக இருந்தாள் சிவானி. பள்ளியில் இன்று அவளது தேர்வு முடிவுகள் சொல்லப்பட்டன. சில பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் சிலவற்றில் மிகக் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தாள். ஓரிரு பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை. சிவானி மிக நல்ல குழந்தை தான். நன்றாக வரைவாள். அழகாகப் பாடுவாள். ஆனால், பாடங்கள் மட்டும் கொஞ்சம் கடினமாகவே இருக்கும் அவளுக்கு. ஆனால், எப்போதும் அவள் தேர்ச்சியடையாமல் இருந்ததில்லை. இன்றோ பாடத்தில் தோல்வியைத் தழுவியதும்மேலும் படிக்க…

bulbul

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம். இம்மாதம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பறவையின் பெயர் கொண்டைக்குருவி – (RED VENTED BUL BUL) இதற்குச் சின்னான் என்ற பெயரும் உண்டு. தலை கறுப்பாகவும், வாலுக்கடியில் சிவப்பாகவும் இருக்கும்.  கொண்டை சற்று உயர்ந்து காணப்படும். வாலுக்கடியில் இருக்கும் சிவப்பு தான், இதன் முக்கிய அடையாளம். உடலின் நிறம் கரும்பழுப்பாகவும், செதில் செதிலாகவும் தோன்றும். இதன் கொண்டையையும், வாலுக்கடியில் உள்ள சிவப்பையும் கொண்டு,மேலும் படிக்க…

tirunelveli3

எலேய் மக்கா!  யல்லாரும் சவுக்கியமா இருக்கீகளா..! என்ன அப்படி பாக்குதீக..? ஊருக்கு  பேரு வந்த கத மட்டும் தெரிஞ்சிக்கிட்டா போதுமா.. ஊரு பாஷ பேசணும்ல.. அதேன்.. என்ன இன்னுமா எந்த ஊருன்னு தவிக்கீக? அட..! கிடந்து சலம்பாதீக புள்ளைகளா!! இன்னிக்கு நாம கத கதயாம் காரணமாம்’ல கத கேக்கப் போற ஊரு.. ஊரு.. ஆ.. அவ்வளவு லேசுல ஊருப்பேரை சொல்லிடுவேனா..! இந்தா ஒரு விடுகத போடுதேன்.. விடெ கண்டுப்பிடிக்கீகளான்னு பாப்போம்!மேலும் படிக்க…

Chithirakadhai

அப்பா ஏதோ புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். அவரை நெருங்கிய  விஸ்வா அவர் படிப்பதை எட்டிப்பார்த்தான். “என்ன கண்ணா?” என்றார் அப்பா. “எனக்கும் ஏதாவது புத்தகம் தாங்க. படிக்கறேன்” என்றான் விஸ்வா. அவன் அப்படி சொன்னதும் அப்பாவுக்கு முகமெல்லாம் மகிழ்வான சிரிப்பு படர்ந்தது. எழுந்தவர் அவரது அலமாரியில் தேடி ஒரு புத்தகம் எடுத்துத்தந்தார். அதில் கட்டம் கட்டமாக போட்டு படங்கள் வரையப்பட்டிருந்தன. “இதென்னப்பா… படமா இருக்கு. நீங்க படிக்கறது எழுத்தா இருக்கு” “அதுவந்துமேலும் படிக்க…

iaf

சுட்டீஸ்! இந்த அக்டோபர் மாதத்தில் நம் நாட்டில் மிகச் சிறப்பான தினம் ஒன்றைக் கொண்டாடுகிறோம். அது என்னவென்று பார்க்கலாமா? October 8 இந்திய விமானப்படை தினம். Indian Airforce Day இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (IAF, Bhartiya Vayu Sena) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.மேலும் படிக்க…

naaikutty

Image Source: unsplash.com ஞா. கலையரசிபெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன். unjal.blogspot.comமேலும் படிக்க…

ink

“ஹலோ சுட்டீஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? மாதா மாதம் நான் செஞ்சு காமிக்கிற செய்முறையை எல்லாம் செஞ்சு பாக்குறீங்களா? இந்த மாசம் ரொம்ப ஈசியான, அதே சமயம் இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம் செய்யப்போறோம்” என பிண்டு சொல்ல, “என்ன எக்ஸ்ப்ரிமெண்ட் பிண்டு? வழக்கம், போல நீ என்னல்லாம் பொருட்கள் வேணும்னு சொல்லு, நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் அனு. பிண்டு, “ஓகே! இன்னிக்கு நம்ம செய்ய போறமேலும் படிக்க…

Erumbin Gnanam

ஒரு காட்டுக்குள் எறும்புக்கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதில் ஒரு குட்டி எறும்பு ஒரு மரத்தடியில் மிகவும் சோகமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியில் ஒரு முனிவர் எறும்பு வந்தது. அது அந்தக் குட்டி எறும்பை பார்த்து, அது மிகவும் சோகமாக இருப்பதை அறிந்து கொண்டது. “ஏன் குட்டி, மிகவும் சோகமாக இருக்கிறாய்?” என்று கேட்டது முனிவர் எறும்பு. அதற்கு அந்த குட்டிமேலும் படிக்க…

pallanguzhi 1

பல்லாங்குழி 3 கிரௌண்டில் பாதிப் பேர் குலை குலையா முந்திரிக்காவும், பாதிப் பேர் பச்சைக் குதிரையும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மெல்ல நடந்து அபிநயா அபிநவுடன் கிரௌண்டிற்க்கு வந்த ஸ்ருதி, அனைவரையும் பார்த்து, “எங்க அக்காவுக்கு காலில் புண் இருக்கு,  அவங்களால ஓடி விளையாட முடியாது,  அதனால உட்காந்து தான் விளையாடப் போறோம்” என்றாள். “எப்படிப் புண்ணாச்சு அபி” என்றாள் ஆதிரா. “கதவுல இடிச்சுக்கிட்டேன்” என்று அபிநயா சொல்லவும், பார்த்து போகக்மேலும் படிக்க…

kandupidi

தேவி பிரபாவாசிப்பை நேசிக்கும் வாசகி. அவ்வப்பொழுது எழுதுவேன். பயணங்களும், பாடல்களும் – பிடித்தமானவைமேலும் படிக்க…