ஒரு சிறிய கிராமத்தில் ‌ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் இருந்த விளைநிலத்தில் விவசாயியால் தனது விவசாயத் தொழிலை சரிவரச் செய்ய முடியவில்லை. மழை பொய்த்து விட்டது. விதை நெல் வாங்குவதற்கும் கையில் பணவசதி இல்லை. ஊரில் இருந்த செல்வந்தர்களிடம் உதவி கேட்டும் யாரும் அவனுக்கு உதவி செய்யவில்லை. அவனும் அவனது குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள். வயதான பெற்றோர், கனிவும் அன்பும் கொண்ட மனைவி, சிறு குழந்தைகள் அனைவரும்மேலும் படிக்க –>

கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கும் இடத்தில் அதை ஒட்டி ஒரு காடு இருந்தது. அங்கு பல்வேறு மரங்கள் மிருகங்கள் பறவைகள் என அனைத்தும் வாழ்ந்து வந்தன.. அந்த அடர்ந்த காட்டில் ஒரு சிட்டுக்குருவியும் குட்டிக் குரங்கும் இருந்தன. அவை இரண்டும் படு சுட்டி. ஒரு இடத்தில் அவை இரண்டும் ஒன்றாக இருந்தால் அவ்விடமே மகிழ்ச்சியுடனும் குதூகலமாகவும் இருக்கும். சிட்டுக்குருவி கீச் கீச் என சப்தமிட, குரங்கு கையை அசைத்தும் காலால் குதித்தும்மேலும் படிக்க –>

நமது அழகான கற்பனை  உலகத்தில் ஓர் அழகான நாடு இருந்தது. அந்த நாட்டின்‌ ராஜாவிற்கு சினுங்கன் என்ற அழகான மகன் இருந்தான்.  நாட்டின் இளவரசன்; வருங்கால அரசன். ஏன், எதற்கு , எப்படி என்று எங்கும் கேட்டபடி சுற்றிக்கெண்டிருக்கும்  நம் சினுங்கனுக்கு உலகத்திலேயே பிடிக்காத இரண்டு விஷயங்கள் இருந்தன.  ஒன்று, வேலை செய்வது; எப்போது பார்த்தாலும் எல்லோரும் ஏதாவது வேலை செய்தபடி இருப்பதைப்  பார்த்தால் அவனுக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும்.மேலும் படிக்க –>

பல கோடி வருடங்களுக்கு முன்பு, நம் பூமியில் செடிகள், கொடிகள், மரங்கள் இவற்றின் தண்டுகள், இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் தவிர மற்ற   அனைத்தும் அதாவது நீந்தும், ஊர்ந்து செல்லும், பறக்கும், நடக்கும், துள்ளிச்செல்லும் விலங்குகள் அனைத்தும் கறுப்பு வெள்ளை நிறத்தில்தான் இருந்தன!!  நம் கண்களில் வெள்ளைப் பின்புலத்தில் கருவிழிகள் உள்ளதல்லவா,  அதுபோலத்தான் எல்லா உயிரினங்களும் இருக்கும்.  (என்னது!! ஏற்கனவே  கற்பனை உலகத்திற்கு வந்து விட்டீர்களா? சமத்துக் குட்டிஸ்!!!) நிறங்கள்மேலும் படிக்க –>

அப்பா ஏதோ புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். அவரை நெருங்கிய  விஸ்வா அவர் படிப்பதை எட்டிப்பார்த்தான். “என்ன கண்ணா?” என்றார் அப்பா. “எனக்கும் ஏதாவது புத்தகம் தாங்க. படிக்கறேன்” என்றான் விஸ்வா. அவன் அப்படி சொன்னதும் அப்பாவுக்கு முகமெல்லாம் மகிழ்வான சிரிப்பு படர்ந்தது. எழுந்தவர் அவரது அலமாரியில் தேடி ஒரு புத்தகம் எடுத்துத்தந்தார். அதில் கட்டம் கட்டமாக போட்டு படங்கள் வரையப்பட்டிருந்தன. “இதென்னப்பா… படமா இருக்கு. நீங்க படிக்கறது எழுத்தா இருக்கு” “அதுவந்துமேலும் படிக்க –>

ஒரு காட்டுக்குள் எறும்புக்கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதில் ஒரு குட்டி எறும்பு ஒரு மரத்தடியில் மிகவும் சோகமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியில் ஒரு முனிவர் எறும்பு வந்தது. அது அந்தக் குட்டி எறும்பை பார்த்து, அது மிகவும் சோகமாக இருப்பதை அறிந்து கொண்டது. “ஏன் குட்டி, மிகவும் சோகமாக இருக்கிறாய்?” என்று கேட்டது முனிவர் எறும்பு. அதற்கு அந்த குட்டிமேலும் படிக்க –>

அரவிந்த் படுக்கையில் புரண்டு படுத்தான். காலை ஆறு மணி. அலாரம் அடித்தது. அணைத்து விட்டுத் திரும்பவும் தூங்க ஆரம்பித்தான். “அரவிந்த், எழுந்திரு சீக்கிரம். இன்னைக்குத் தோட்டத்துக்குப் போகப் போறோம்னு நேத்தே சொன்னேன் இல்லையா? எழுந்து ரெடியாகிக்கோ. அரை மணி நேரத்தில கெளம்பணும்” என்று அம்மா சொல்லப் போர்வையில் இருந்து தலையை நீட்டிய அரவிந்த், “நான் வரலைம்மா. நீங்கள்ளாம் போய்க்கங்க. எனக்குத் தூக்கம் தூக்கமா வருது. என்னால இப்ப எந்திரிச்சுக் கெளம்பமேலும் படிக்க –>

இப்போது நாம் பல கோடி வருடங்களுக்கு முன்,அதாவது பூமியில் மனிதர்கள் எல்லாம் உருவாகியதற்கு முந்தைய காலத்தில் இருக்கிறோம். அப்போது நம் நிலா இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு பெரியதாகவும் இன்னும் பிரகாசமாகவும்‌ இருக்கும். (‘வாட்?’  என்றா கேட்கிறீங்க? அச்சோ!  நீங்க இன்னும் நம்ம கற்பனை உலகத்தில் குதிக்கலையா?)  நிலாவும் பூமியும் இப்போது போலவே அப்போதும்  இணைபிரியாத நண்பர்கள். நிலாவே அத்தனை அழகாக இருக்கும் போது பூமியைச் பற்றிச் சொல்லவாமேலும் படிக்க –>

ஒரு காட்டுக்குள் ஒரு மாயாஜால அரண்மனை இருந்தது. அந்த அரண்மனையில் இருந்த அனைத்துப் பொருட்களும் உயிருள்ள மனிதர்களைப் போல வாழும் சக்தியைக் கொண்டிருந்தன. அரண்மனையை விட்டு வெளியேறினால் அவற்றின் சக்தி மறைந்து சாதாரண பொருட்களாகிவிடும். அதே போல அரண்மனைக்குள் வேறு புது பொருட்கள் வந்தாலும் அவற்றிற்கும் உயிர் வந்துவிடும். அரண்மனைக்குள் இருந்து வரும் வினோத சத்தத்தின் காரணமாக, ஊர் மக்கள் அனைவரும் இதை பேய் அரண்மனை என்று நினைத்துக் கொண்டனர்.மேலும் படிக்க –>

“பூர்ணிமா காய்கறி வாங்க மார்கெட் வரைக்கும் போகனும். கூட வரமுடியுமா? நீயும் வாங்கனும்ன்னு சொன்னாயே…”, அடுத்த வீட்டுப்பெண் பூர்ணிமாவிடம் கேட்டாள். “அக்கா மதியம் போகலாமா? சாராவைத் தூங்க வச்சிட்டு வரேன்”. சாரா, ஐந்து வயது மகள். நிறைய துறுதுறுப்போடு.. மழலை மாறாமல் இருக்கும் பூஞ்சிட்டு… இவர்கள் வசிப்பது கோவை செல்வபுரம் பகுதியில்… சொந்த வீடு இரண்டு செண்ட்டில், சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பி இருக்க, எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதிமேலும் படிக்க –>