குழந்தைப் பாடல்கள் (Page 4)

புகைவண்டி தூரத்தில் வரக்கண்டேன் நிலையத்தில் நின்றதும் ஏறிக்கொண்டேன் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன் சந்தோஷம் நெஞ்சில் நிறையக் கண்டேன். அசையும் பச்சைக்கொடி பார்த்தேன் அனைத்தும் மெல்ல நகரக் கண்டேன். முன்னால் ரயிலும் விரையக் கண்டேன் பின்னால் மரங்கள் மறையக் கண்டேன். வழியில் பச்சை வயல் பார்த்தேன் வெள்ளைக் கொக்குகள் பல பார்த்தேன் சோளக்கொல்லை பொம்மைகளும் ஜோராய் நிற்கும் அழகு பார்த்தேன் கோணல் பனைமர வரிசை கண்டேன் குரங்குகள் தாவும் சோலை கண்டேன்மேலும் படிக்க…