ஒரு ஊரில் ஒரு நரியும், சேவலும் வாழ்ந்து வந்தன.  இரண்டுமே தந்திரத்துக்குப் பெயர் போனவை.  அவை இரண்டும் ஒரு நாள் சந்தித்துப் பேசத் துவங்கின.   “ஒனக்கு எத்தனை தந்திரம் தெரியும்?” என்று நரி, சேவலிடம் கேட்டது. “முயன்றால், நான் மூன்று செய்வேன்.  உன்னால் எத்தனை முடியும்?” என்று சேவல் கேட்டது. “நான் 63 செய்வேன்,” என்றது நரி. “அதுல கொஞ்சம் சொல்லு, பார்ப்போம்,” என்றது சேவல். “நான் என்னோட இடதுமேலும் படிக்க –>

புதிய மனிதன்! தோட்டத்துக்குள் நுழைந்த காலின் முற்றிலும் ஒரு புதிய மனிதனாக மாறி விட்டான். அவனுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. அதன் பின் தினமும் மேரியுடனும் டிக்கனுடனும் அங்கு செல்ல ஆரம்பித்தான். டிக்கனின் செல்லப் பிராணிகள் இப்போது காலினுடனும் நட்பாகப் பழக ஆரம்பித்தன.  நாட்கள் செல்லச் செல்ல அதிசயத்திலும் அதிசயமாகக் காலினின் உடல் நலம் தேறியது. இறந்து போவதைப் பற்றியோ நோயைப் பற்றியோ இப்போது அவன் பேசுவதே இல்லை.மேலும் படிக்க –>

புதிய நட்பு! திரு.க்ரேவன் வந்து சென்ற அன்று இரவு மேரிக்கு மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை. மாமாவே தோட்டத்தைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துவிட்டார், இனிமேல் அதில் பல வேலைகள் செய்யலாம் என்று கற்பனை செய்தபடியே படுத்துக் கொண்டிருந்தவளை அன்று கேட்ட அதே அழுகுரல் மீண்டும் எழுப்பியது.  யாருடைய அழுகுரல் அது என்று இன்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவுடன் மெதுவாக நடந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். அன்றொருநாள் திருமதிமேலும் படிக்க –>

ஒரு முறை காற்றுக்கும் சூரியனுக்கும் இருவரில் யாருக்கு வலிமை அதிகம் என்று சண்டை வந்தது. “அதோ தெருவில நடந்து போய்க்கிட்டிருக்கிறவரைப் பார்த்தியா? நாம ரெண்டு பேரும்,  அவருக்கிட்ட நம்ம வலிமையைக் காட்டுவோம்;  சட்டைக்கு மேல அவர் போட்டிருக்கிற கோட்டை, யாரு கழற்ற வைக்கிறோமே அவங்க வெற்றி பெற்றதா அர்த்தம்” என்றது காற்று.  “சரி; ஒத்துக்கிறேன்,” என்றது  சூரியன் காற்று முதலில் தன் வேலையைத் துவங்கியது.  அது ஏற்படுத்திய பேய்க்காற்றில்  இலைகள்மேலும் படிக்க –>

ரோஜாத் தோட்டம் தெரிந்தது! பூட்டப்பட்ட அந்தப் பழைய கதவைப் பார்த்த உடனேயே இது தான் அந்த ரகசியத் தோட்டத்தின் வாசல் என்று மேரிக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். நல்ல வேளையாக யாரும் அருகில் இல்லை, அதனால் அவள் உள்ளே நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை. ரொம்ப நாளாக யாருமே அங்கு நுழையாததால் அந்தத் தோட்டமே புதர்கள் வளர்ந்து, நிறைய இலைகளும், குப்பையுமாகக் காட்சியளித்தது. பல இடங்களில்மேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில், விடிகாலையில் மேகங்கள் எல்லாம் ஆரஞ்சு  நிறமாகும்படியாக, சூரியன் மலை மேல் அப்போது தான் ஏறத்துவங்கி இருந்தான். ஒரு குட்டிக் குழந்தை அழகான வெள்ளைப் படுக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. ‘கண் விழித்து, எழுந்திரு, எழுந்திரு,’ என்று கடிகாரம் டிக் டிக் என்று குரல் எழுப்பியது.  ஆனால் குழந்தைக்குத் தூக்கத்தில் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. சன்னலுக்குப் பக்கத்தில் இருந்த மரத்தில் வாழ்ந்த ஒரு குருவி,  “நான் அவனைமேலும் படிக்க –>

இரவில் கேட்ட அழுகுரல் தோட்டத்திற்குச் சென்ற மேரி, அங்கு பெரிய புல்வெளி, நிறைய மரங்கள், பூந்தொட்டிகள் இருந்ததைப் பார்த்தாள். தோட்டத்தின் நடுவில் ஒரு செயற்கை நீரூற்று கூட இருந்தது. ஆனால் அதில் தண்ணீர் இல்லை. காய்கறிகள், கீரை,  பழங்கள் வளரக்கூடிய சிறிய சமையலறைத் தோட்டம் ஒன்றும் தனியாக அமைக்கப்பட்டிருந்தது. தனக்குத் தெரிந்த செடிகளின் பெயரை நினைவுபடுத்த முயன்றாள் மேரி‌.  அப்போது மண்வெட்டியுடன் வயதான மனிதர் ஒருவர் அங்கு வந்தார். ‘நீமேலும் படிக்க –>

ரகசியப் பூந்தோட்டம் என்ற ஆங்கில நாவல் 1921 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் ஒரு முக்கியமான குழந்தை இலக்கிய நூலாக இது பார்க்கப்படுகிறது. பலமுறை மொழிபெயர்க்கப்பட்டும் இரண்டு முறை திரைப்படங்களாக எடுக்கப்பட்டும் இந்த நாவல் வெளிவந்துள்ளது. இதைப் பூஞ்சிட்டு இதழுக்காக எளிய வகையில் தமிழாக்கம் செய்து தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சிறிய தொடர்கதையாக இது வெளிவரும்.  The Secret Garden – பிரான்சிஸ் ஹாட்க்ஸன் பர்னட்மேலும் படிக்க –>