கதையும் படமும் : தனிஷ்கா (4ம் வகுப்பு)

            ஒரு காட்டில் ஒரு யானையும் பையனும் இருந்தாங்க. அவங்க நல்ல நண்பர்கள். அவங்க சந்தோஷமா சுத்திட்டு இருந்தாங்க.

yaanai 1

ஒரு நாள் அந்த யானை அந்த பையனை கூப்பிட்டது.

yaanai 2

ஆனால் அவன் வீட்டில் இருந்துகொண்டே வரலை. அவன் வேலையா இருந்தான். பயிர் செஞ்ச பழம் காய் எல்லாம் பறிச்சுட்டு இருந்தான். அதனால வரலை. யானை கோபமாயிடுச்சு.

yaanai 3

நெறைய பழம் காய் எல்லாம் பறிச்சு வைத்தான் பையன். அதெல்லாம் அவனால தூக்க முடியலை. என்ன பண்ணலாம் என்று யோசித்தான். அப்ப அவனுக்கு யானையை கூப்பிடலாம் என்று யோசனை வந்தது. கூப்பிட்டான். அதுக்கு அந்த யானை “நான் கூப்பிட்டபோது நீ வரலை இல்ல… அதனால நானும் வரலை “ அப்படீன்னு சொல்லிடுச்சு. அவன் சோர்ந்து போயிட்டான்.

yaanai 4

அப்புறம் அவனாகவே ஒண்ணு ஒண்ணா வச்சு தூக்கிட்டு வந்தான். நடுவில் பாலம் இருந்தது. அதை தாண்டி தாண்டி நடந்து வந்து வைத்தான். அதன் பிறகு வீட்டிற்கு வந்தான். வந்தவுடன் யானையை பார்த்து மன்னிப்பு கேட்டான்.

yaanai 5

அப்புறம் சமாதானமா இருந்தாங்க.

பிறகு ஒரு நாள் கேட்டான் “அன்னிக்கு ஏன் கூப்பிட்ட? “ என்று.

yaanai 6

யானை சொன்னது “ நம்மகூட ஒரு குட்டி யானை வருது. அதான் சொன்னேன்” என்றது. அதுக்கு அவனுக்கு கஷ்டமா ஆகிடுச்சு. ‘யானை இனிமேல் அது குட்டிகூட விளையாடும், தன்கூட விளையாடாது என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது. கொஞ்ச நாளில் குட்டியானை பிறந்தது.

yaanai 7

பையன் பயந்தமாதிரி யானை குட்டியுடன் மட்டும் விளையாடலை. அவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சந்தோஷமாக விளையாடி மகிழ்ந்தார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments