ஓடு! ஓடு! இடத்தைப் பிடி! பார்வதி பாட்டி சொல்லிக் கொடுத்த காகிதக் கப்பல் அவர்களின் குடியிருப்பில் பெரிய வரவேற்பை பெற்று விட்டது.  குடியிருப்புவாசிகளிடம் பாட்டி மிகவும் பிரபலமாகி விட்டாள். பிள்ளைகள் எல்லாம் இப்போது பட்டாபி தாத்தாவை விட்டுவிட்டு பாட்டியிடம் புதிய விளையாட்டு கேட்டுக் கொண்டு வந்தனர்.  “என்ன பார்வதி.. ஓவர் நைட்ல ஒபாமா ஆயிட்ட..” என்று பட்டு தாத்தா தன் மனைவியை கலாய்த்தார்.  பாட்டி சிரிப்புடன் வீட்டு வேலையைச் செய்துமேலும் படிக்க –>

நூல் : மரப்பாச்சி சொன்ன ரகசியம் ஆசிரியர் : யெஸ். பாலபாரதி பதிப்பகம் : வானம் பதிப்பகம் விலை : ₹60 வாசிப்பு அனுபவம் : பாட்டி வீட்டுக்குப் போன போது மரப்பாச்சி பொம்மையை ஷாலினிக்குக் கொடுக்கிறார் பாட்டி. ஒரு நாள் அது பேசவும், ஆடவும் செய்கிறது. ஷாலினியின் தோழி பூஜாவுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அவளுக்கு ஷாலினியின் மரப்பாச்சி உதவுகிறது. நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி மரப்பாச்சிமேலும் படிக்க –>

புதிய மனிதன்! தோட்டத்துக்குள் நுழைந்த காலின் முற்றிலும் ஒரு புதிய மனிதனாக மாறி விட்டான். அவனுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. அதன் பின் தினமும் மேரியுடனும் டிக்கனுடனும் அங்கு செல்ல ஆரம்பித்தான். டிக்கனின் செல்லப் பிராணிகள் இப்போது காலினுடனும் நட்பாகப் பழக ஆரம்பித்தன.  நாட்கள் செல்லச் செல்ல அதிசயத்திலும் அதிசயமாகக் காலினின் உடல் நலம் தேறியது. இறந்து போவதைப் பற்றியோ நோயைப் பற்றியோ இப்போது அவன் பேசுவதே இல்லை.மேலும் படிக்க –>

ஒரு அடர்ந்த காட்டில் நிறைய மரங்களுக்கு நடுவுல ஒரு சின்ன செடி முளைச்சு வந்ததாம். அந்த சின்ன செடிய பார்த்து எல்லா பெரிய மரங்களும் கிண்டல் செஞ்சு சிரிச்சதாம். “நீ ஒரு குட்டி செடி. உன்னால எங்கள போல வளர முடியாது. வர்ற சூரிய ஒளி எல்லாத்தயும் நாங்களே எடுத்துப்போம். உனக்கு முளைக்க வேற இடமே கிடைக்கலையா” அப்படின்னு கிண்டல் செஞ்சிச்சாம். அந்த சின்னச் செடி சூரிய ஒளி கிடைக்காமமேலும் படிக்க –>

தீபாவளி 2020 சிறப்பு ஓவியப் போட்டி முடிவுகள்       பூஞ்சிட்டு மின்னதழ் நடத்திய 2020ம் ஆண்டின் தீபாவளி சிறப்பு ஓவியப் போட்டிக்கு வந்த உங்கள் படைப்புகள் எங்கள் யூட்யூப் சேனலில் https://www.youtube.com/channel/UCiZ5beRz5PJrN31tyEOSbqQ பதிவேற்றப்பட்டுள்ளது.  நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புடன் சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு படைப்புக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.   யூட்யூப் வீடியோவில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது.  மக்கள் அவர்களுக்குப் பிடித்த படைப்பின் எண்ணைக் கமெண்ட்டில் பதிவார்கள். மேலும் படிக்க –>

அன்று மாலை பூங்காவிற்கு வந்த குழந்தைகள், சிட்டுவின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர்.  “எல்லோருக்கும் இனிய மாலை வணக்கம்!” என்று சொன்னபடி, சிட்டு மரக்கிளையில் வந்து அமர்ந்தது. சிட்டுவிற்குப் பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க சமூக இடைவெளி விட்டுக் குழந்தைகள் அமர்ந்தனர். “போனவாட்டி டைனோசர் அழிஞ்சதுக்கான காரணத்தைக் கயல் கேட்டா. அதுக்கு முன்னாடி, இன்னும் சில வகை கொம்புள்ள டைனோசர் பத்தி நாம தெரிஞ்சுக்கலாம்” என்றது சிட்டு.மேலும் படிக்க –>

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்! இந்த மாதம் உங்களுக்கு அறிமுகம் செய்யும் பறவையின் பெயர் தவிட்டுக்குருவி. தோட்டங்களில் அடிக்கடி நாம் காணக்கூடிய குருவி இது.  கல்லுக்குருவி, சிலம்பன் என்பவை இதன் வேறு பெயர்கள் ஆகும். பெரும்பாலும் நான்கைந்து குருவிகள் சேர்ந்து, கூட்டமாக இருக்கும். சத்தமாக ஒலியெழுப்பும். பூச்சிகளையும், தானியங்களையும் உண்ணும்.  தரையில் தத்தித் தாவி நடக்கும்.  உடலின் மேற்பகுதியும், தொண்டையும் சாம்பல் நிறத்திலும், அலகு வெளிர் மஞ்சள்மேலும் படிக்க –>

காலாண்டிதழாக வெளிவருகிறது இந்தச் சிறார் இதழ். இதன் எட்டாவது இதழில்  குழந்தைகளிடம் ஒரு பள்ளி எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்வி கேட்டு, அதற்கு அவர்கள் கொடுத்துள்ள பதில்களை அப்படியே பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு குழந்தை சொல்லியிருக்கும் பதில் இது:- “மேகத்தின் மீது பள்ளியிருந்தால், எனக்குப் பிடிக்கும். சலிப்பாக இருக்கும்போது, மேகங்களை வைத்து, நிறைய பொம்மைகள் செய்யலாம்” ஒன்பதாவது இதழ், குழந்தைகளுக்கு இயற்கையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் படிக்க –>