இரவுப் பறவைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆந்தை. பெரும்பாலான ஆந்தை இனங்கள் பகலில் ஒய்வெஎடுத்து இரவில் வேட்டையாடும் பழக்கம் கொண்டவைமேலும் படிக்க –>

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்! இம்மாதம் உங்களுக்கு அறிமுகமாகும் பறவையின் பெயர் மரங்கொத்தி. மரத்தினைக் கொத்துவதால் இது காரணப்பெயர்.மேலும் படிக்க –>

இன்னிக்கு நான் சொல்லப் போறது, பிராக்கியோசரஸ் (BRACHIOSAURUS). இதுவும் பெரிய ஒட்டக சிவிங்கி மாதிரி தான், இருக்கும். கழுத்து ரொம்ப நீளமாவும், வால் குட்டையாவும் இருக்கும். மத்த டைனோசர் மாதிரி இல்லாம, இதுக்கு முன்னங்கால், பின்னங்காலை விட நீளமாயிருக்கும்…மேலும் படிக்க –>

செல்லச் சிட்டுகளே!  இம்மாதம், உங்களுக்கு அறிமுகப்படுத்தும் குருவியின் பெயர், தேன்சிட்டு (Sunbird). உலகத்திலேயே மிகவும் சிறிய பறவை, ஹம்மிங் பறவை (Humming bird) என்று உங்களுக்குத் தெரியுமா? அது அமெரிக்காவைச் சேர்ந்தது.  நம்மூர் தேன் சிட்டு, அந்தப் பறவையினத்தைச் சேர்ந்தது.  சிட்டுக்குருவியை விட உருவத்தில் சிறியது.  இவற்றில்,.  ஊதா தேன்சிட்டு (Purple Sunbird), ஊர் தேன்சிட்டு (Purple-rumped Sunbird) .என இரண்டு வகை இருக்கின்றன.  பூக்களில் உள்ள தேன் தான்மேலும் படிக்க –>

அன்று மாலை குழந்தைகள் அனைவரும் பூங்காவுக்கு வரவும், சிட்டு பறந்து வந்து கிளையில் அமரவும், சரியாக இருந்தது. எல்லோரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிவிட்டு, வட்டமாக அமர்ந்தனர்.  “ஹலோ! எல்லாருக்கும் வணக்கம்.  நல்லாயிருக்கீங்களா?” என்றது சிட்டு. “இருக்கோம் சிட்டு” என்றனர் குழந்தைகள், ஒரே குரலில். “ஓகே. டைனோசர் கதையை ஆரம்பிச்சிடலாம்.  போன மாசம் சொன்னதைக் கொஞ்சம் நினைவு படுத்திட்டு, மேலே சொல்றேன்” “நானே சொல்றேன் சிட்டு.  சரியான்னு நீ சொல்லு. டைனோசரோடமேலும் படிக்க –>

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்.  இம்மாதம் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பறவையின் பெயர், ‘கொண்டு கரிச்சான்’ சில இடங்களில், இதனைக் குண்டு கரிச்சான் என்கிறார்கள்.  இது மைனாவை விடச் சற்றுச் சிறியது;  மண்ணில் இருக்கும் பூச்சிகளைத் தின்னும். தலையும், உடலின் மேற்புறமும் கறுப்பாக இருக்கும். வயிறும் வாலின் பக்கவாட்டுப் பகுதியும், வெள்ளையாக இருக்கும். வால் நீண்டிருக்கும். தீனி தின்னும் போது, வாலைப் பெரும்பாலும் தூக்கியே வைத்திருக்கும். இதன்மேலும் படிக்க –>

அன்று மாலை பூங்காவிற்கு வந்த குழந்தைகள், சிட்டுவின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர்.  “எல்லோருக்கும் இனிய மாலை வணக்கம்!” என்று சொன்னபடி, சிட்டு மரக்கிளையில் வந்து அமர்ந்தது. சிட்டுவிற்குப் பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க சமூக இடைவெளி விட்டுக் குழந்தைகள் அமர்ந்தனர். “போனவாட்டி டைனோசர் அழிஞ்சதுக்கான காரணத்தைக் கயல் கேட்டா. அதுக்கு முன்னாடி, இன்னும் சில வகை கொம்புள்ள டைனோசர் பத்தி நாம தெரிஞ்சுக்கலாம்” என்றது சிட்டு.மேலும் படிக்க –>

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்! இந்த மாதம் உங்களுக்கு அறிமுகம் செய்யும் பறவையின் பெயர் தவிட்டுக்குருவி. தோட்டங்களில் அடிக்கடி நாம் காணக்கூடிய குருவி இது.  கல்லுக்குருவி, சிலம்பன் என்பவை இதன் வேறு பெயர்கள் ஆகும். பெரும்பாலும் நான்கைந்து குருவிகள் சேர்ந்து, கூட்டமாக இருக்கும். சத்தமாக ஒலியெழுப்பும். பூச்சிகளையும், தானியங்களையும் உண்ணும்.  தரையில் தத்தித் தாவி நடக்கும்.  உடலின் மேற்பகுதியும், தொண்டையும் சாம்பல் நிறத்திலும், அலகு வெளிர் மஞ்சள்மேலும் படிக்க –>

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம். இம்மாதம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பறவையின் பெயர் கொண்டைக்குருவி – (RED VENTED BUL BUL) இதற்குச் சின்னான் என்ற பெயரும் உண்டு. தலை கறுப்பாகவும், வாலுக்கடியில் சிவப்பாகவும் இருக்கும்.  கொண்டை சற்று உயர்ந்து காணப்படும். வாலுக்கடியில் இருக்கும் சிவப்பு தான், இதன் முக்கிய அடையாளம். உடலின் நிறம் கரும்பழுப்பாகவும், செதில் செதிலாகவும் தோன்றும். இதன் கொண்டையையும், வாலுக்கடியில் உள்ள சிவப்பையும் கொண்டு,மேலும் படிக்க –>