Dr. S. அகிலாண்ட பாரதி (Page 4)

குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். 'கதை சொல்லு கதை கேளு' என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.

sudan

சூடான் நாட்டின் ஒரு கிராமத்தில் ஹஸன் என்ற ஒருவன் தன் தாயுடன் வசித்து வந்தான். மிகவும் பலசாலியான அவனைத் தோற்கடிக்க அந்த ஊரில் யாரும் இல்லை.மேலும் படிக்க…

windinthewillows

தேரை, மூஞ்சுறுவையும் எலியையும் தன் வீட்டுக்கு ஒரு நாள் விருந்துண்ண வருமாறு அழைத்தது. “நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் தங்கப் போறோம். நான் இவனுக்குப் படகு ஓட்டவும் நீச்சலடிக்கவும் கத்துத் தரப் போறேன்மேலும் படிக்க…

windinthewillows

The wind in the willows இந்தக் கதை 1908ல் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டது. கென்னத் க்ரஹாம் என்ற ஓய்வுபெற்றவங்கி அதிகாரி இதை எழுதியுள்ளார். தன் மகன் சிறுவனாக இருக்கும் பொழுது அவனுக்குக் கூறிய சிறுகதைகளைச் சற்றுப் பெரிதாக்கி நாவல் வடிவத்தில் கிரஹாம் உருவாக்கியுள்ளார். பலமுறை  பதிப்பிக்கப்பட்ட இந்த நூல், திரைப்படமாகவும் வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளிவந்துள்ளது. இதன் பல பகுதிகள் சிறுகதைகளாகவும் நாடகங்களாகவும் இயற்றப்பட்டுள்ளன. நான்கு நண்பர்களின் உன்னதமான நட்பைமேலும் படிக்க…

nail cutter

“அப்பா அப்பா! இங்க பாருங்கப்பா.. பீமா நகத்தாலே என் கையில கீச்சி விட்டுட்டான் பா” என்றாள் பீமாவின் தங்கை மித்ரா. “ரெண்டு பேரும் ஒண்ணா தானே டிவி பார்த்துகிட்டு இருந்தீங்க? அப்புறம் என்ன சண்டை?” என்றபடியே அப்பா அருகில் வந்து அமர்ந்தார். “வேணும்னே செய்யலப்பா.. தெரியாம அவ கிட்ட இருந்து ரிமோட்டை வாங்கும் போது என் நகம் அவ கையில பட்டிடுச்சு” “ரொம்ப நீளமா நகம் வச்சிருக்கான் பா பீமா”மேலும் படிக்க…

Secret Garden

புதிய மனிதன்! தோட்டத்துக்குள் நுழைந்த காலின் முற்றிலும் ஒரு புதிய மனிதனாக மாறி விட்டான். அவனுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. அதன் பின் தினமும் மேரியுடனும் டிக்கனுடனும் அங்கு செல்ல ஆரம்பித்தான். டிக்கனின் செல்லப் பிராணிகள் இப்போது காலினுடனும் நட்பாகப் பழக ஆரம்பித்தன.  நாட்கள் செல்லச் செல்ல அதிசயத்திலும் அதிசயமாகக் காலினின் உடல் நலம் தேறியது. இறந்து போவதைப் பற்றியோ நோயைப் பற்றியோ இப்போது அவன் பேசுவதே இல்லை.மேலும் படிக்க…

Secret Garden

புதிய நட்பு! திரு.க்ரேவன் வந்து சென்ற அன்று இரவு மேரிக்கு மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை. மாமாவே தோட்டத்தைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துவிட்டார், இனிமேல் அதில் பல வேலைகள் செய்யலாம் என்று கற்பனை செய்தபடியே படுத்துக் கொண்டிருந்தவளை அன்று கேட்ட அதே அழுகுரல் மீண்டும் எழுப்பியது.  யாருடைய அழுகுரல் அது என்று இன்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவுடன் மெதுவாக நடந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். அன்றொருநாள் திருமதிமேலும் படிக்க…

Secret Garden

ரோஜாத் தோட்டம் தெரிந்தது! பூட்டப்பட்ட அந்தப் பழைய கதவைப் பார்த்த உடனேயே இது தான் அந்த ரகசியத் தோட்டத்தின் வாசல் என்று மேரிக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். நல்ல வேளையாக யாரும் அருகில் இல்லை, அதனால் அவள் உள்ளே நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை. ரொம்ப நாளாக யாருமே அங்கு நுழையாததால் அந்தத் தோட்டமே புதர்கள் வளர்ந்து, நிறைய இலைகளும், குப்பையுமாகக் காட்சியளித்தது. பல இடங்களில்மேலும் படிக்க…

Secret Garden

இரவில் கேட்ட அழுகுரல் தோட்டத்திற்குச் சென்ற மேரி, அங்கு பெரிய புல்வெளி, நிறைய மரங்கள், பூந்தொட்டிகள் இருந்ததைப் பார்த்தாள். தோட்டத்தின் நடுவில் ஒரு செயற்கை நீரூற்று கூட இருந்தது. ஆனால் அதில் தண்ணீர் இல்லை. காய்கறிகள், கீரை,  பழங்கள் வளரக்கூடிய சிறிய சமையலறைத் தோட்டம் ஒன்றும் தனியாக அமைக்கப்பட்டிருந்தது. தனக்குத் தெரிந்த செடிகளின் பெயரை நினைவுபடுத்த முயன்றாள் மேரி‌.  அப்போது மண்வெட்டியுடன் வயதான மனிதர் ஒருவர் அங்கு வந்தார். ‘நீமேலும் படிக்க…

adipatuduche

குட்டி பீமாவும் அவனது தங்கை மித்ராவும் வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். ‘கல்லா மண்ணா’ விளையாடிக் கொண்டிருக்கையில் வேகமாக ஒரு வாகனம் தெருவில் வந்தது. அதைப் பார்த்தவுடன் ஒதுங்குவதற்காக வேகமாக ஓடினாள் பீமா, மித்ராவின் தோழி ஸ்ருதி. அப்போது கால் தடுக்கி விட அவளது நெற்றியில் ஒரு கல் குத்தி ஆழமாகக் காயம் ஏற்பட்டுவிட்டது. ரத்தம் நிற்காமல் வந்தது. “அச்சச்சோ நிறைய ரத்தம்!” என்று அனைவரும் பதற,மேலும் படிக்க…

Secret Garden

ரகசியப் பூந்தோட்டம் என்ற ஆங்கில நாவல் 1921 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் ஒரு முக்கியமான குழந்தை இலக்கிய நூலாக இது பார்க்கப்படுகிறது. பலமுறை மொழிபெயர்க்கப்பட்டும் இரண்டு முறை திரைப்படங்களாக எடுக்கப்பட்டும் இந்த நாவல் வெளிவந்துள்ளது. இதைப் பூஞ்சிட்டு இதழுக்காக எளிய வகையில் தமிழாக்கம் செய்து தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சிறிய தொடர்கதையாக இது வெளிவரும்.  The Secret Garden – பிரான்சிஸ் ஹாட்க்ஸன் பர்னட்மேலும் படிக்க…