இரவு‌விளக்கின் மிதமான ஒளியில் மின்விசிறி முடிந்தவரை அமைதியைக் கிழித்தபடி சுற்றிக் கொண்டிருக்க, அப்பா கேட்டார், “ஓகே.. அப்பா கதை சொல்ல ஆரம்பிக்கவா?” அம்மா, அம்மா அருகில் படுத்திருந்த வினு, அப்பா அருகில் படுத்திருந்த அனு மூவரும் ஒரு சேர, “ம்.. ஆரம்பிங்க!” என்று சொன்னார்கள். “ஒரு‌ ஊருல ராமு, சோமுன்னு ரெண்டு பசங்க இருந்தாங்க. அவங்க வீட்ல ஒரு நாய்க்குட்டி, ஒரு பூனைக்குட்டி பெட் அனிமல்சா இருந்தது.” “ம்….” “ஒருமேலும் படிக்க –>

அதோ பார் அதோ பார் அழகான கோட்டை பார் அரிசி போன்ற பூச்சி கட்டும் அசுரக் கோட்டை அங்கே பார் குன்று போல காட்சிதரும் கரையானின் புற்றினைப் பார் மழையும் புயலும் வந்தாலும் கரையாமல் நிற்பதைப் பார் கோடிக்கணக்கில் கூடிவாழும் பூச்சிகளின் ஒற்றுமை பார் கூடிக் கூடி ஒன்றிணைந்து கோட்டை கட்டும் அழகைப் பார். தேடித் தேடி உணவுதனை சேகரிக்கும் திறமை பார் கோபம் வந்தால் கொடுக்கினாலே கடித்து விரட்டும்மேலும் படிக்க –>

டாலும் ழீயும் சிறுவர் நாவல் ஆசிரியர் விழியன் வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18  செல் (+91)8778073949 விலை ரூ 40/-. கடலில் டால் என்கிற டால்பினும், ழீ என்கிற தங்க மீனும், நெருங்கிய நண்பர்கள்.  இரண்டும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வதும், திரும்புவதும் வழக்கம்.  ஒருநாள் இரண்டும் கடல் பற்றிய ஒரு வரலாற்று நூலை வாசிக்கின்றன. அந்நூலில் இருந்து கடல்வாழ் உயிரினங்கள் பற்றியும், அவற்றின் உணவு முறைகள், மீனவர்களின் வேட்டை ஆகியவைமேலும் படிக்க –>

பூமிக்கடியில் ஒரு மர்மம்  இளையோர் நாவல் ஆசிரியர்:- யெஸ்.பாலபாரதி வானம் பதிப்பகம்,சென்னை-89 செல் 9176549991 விலை ₹ 140/- 8 ஆம் வகுப்பு மாணவர்களான ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள்.  வெளியூரிலிருந்து ஜெயசீலன் வீட்டுக்கு, ஜெசி, ஜெமி, கண்ணன் ஆகியோர் வந்து தங்கியிருக்கிறார்கள் கண்ணன் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்டவன்.   ஒருநாள் இவர்கள் ஊர் சுற்றிய போது, கோவிலில் ஒரு சுரங்கம் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். மறுநாள்மேலும் படிக்க –>

குழந்தைகளே, இன்றைக்கு அழகிய முயல் செய்யலாமா? பஞ்சு போல இருக்கும் வெண்முயலை யாருக்கு தான் பிடிக்காது? நாமும் இன்றைக்கு வெள்ளை முயல் ஒன்றை செய்யலாமா? தேவையான பொருட்கள்: செய்முறை: முயலின் உருவத்தை, பெரியவர்களை வரைந்து கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது, இணையத்தில் கிடைக்கும் முயலின் கோட்டோவிய உருவப்படம் ஒன்றினை அச்செடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் படத்தில், முயலிற்கு இருக்கும், புசுபுசுவென்ற வெண் முடிகளுக்கு, பஞ்சினை ஒட்டுங்கள். முயலுக்கு, கண் கருப்புமேலும் படிக்க –>

அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம். வீட்டில் அம்மா அப்பா தாத்தா பாட்டி என அனைவரும் இருக்க, ராமுவை விளையாடுவதற்காக அண்டை வீட்டுக் குழந்தைகள் (neighbour children) அழைத்தார்கள். தெருவில் விளையாடுவதற்கு வாய்ப்பும் அனுமதியும் கிராமத்தில் பாட்டி தாத்தா வீட்டில் தங்கி இருக்கும் பொழுது மட்டுமே கிடைக்கும். எனவே ராமு தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட மனமில்லாமல் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். சுகந்தி: ராமு, ஓடிப் பிடித்து விளையாடும்போது கைமேலும் படிக்க –>

இதுவரை: புயல் காற்றினால் வேறு ஒரு உலகத்தில் சென்று இறங்கிய டாரத்தியும் அவளது நாய் டோட்டோவும் அங்கு மூன்று நண்பர்களை சந்திக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உதவி தேவைப்பட, அவர்கள் அதற்காக ஆஸ் நகரத்தின் பெரிய மந்திரவாதியை சந்திக்க பயணம் மேற்கொண்டனர். அந்தப் பயணத்தின் நடுவே போதைச் செடிகள் நிரம்பிய ஒரு தோட்டத்தைக் கடக்கும் பொழுது டாரத்தியும் சிங்கமும் மயக்கம் அடைந்து விட்டனர். இனி.. அத்தியாயம் 3 “ஐயோ இன்னும்மேலும் படிக்க –>

கவிஞரின் குரல் சின்னச் சின்னக் கண்ணா வா! சிங்காரச் சிரிப்புடன் வா! அம்மாவென நீயழைத்தால் அமுதும் தேனும் பாயுதடா! சின்னச் சின்ன அடிகள் வைத்து சிரித்துக் குலுங்கி நீ நடந்தால் சிந்தையுமே சிலிர்க்குதடா! எந்தன் உளம் களிக்குதடா! வானகத்து நிலவும் இங்கே வையகத்தில் வந்தது போல் நீயும் வந்தாய் என்னருகில! நிலவு தென்றல் சுகம் தந்தாய்! வண்ண வண்ணக் கனவுகள வாழ்வினிலே தந்தவனே! அன்னை மடி தவழுகின்ற அழகு தமிழ்க்மேலும் படிக்க –>

பஞ்சதந்திரக் கதைகள் அமுதா தன்னுடைய ஐந்து வயது மகள் யாழினிக்கு மொட்டை மாடியில் வைத்து சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். இரவு நேரம். வானத்தில் பௌர்ணமி நிலவு அவர்களைப் பார்த்து அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தது. ” நிலா நிலா ஓடிவா     நில்லாமல் ஓடிவா மலை மேல ஏறிவா     மல்லிகைப்பூ கொண்டு வா! “ என்று பாடிக்கொண்டே நிலாவைக் காட்டியபடி யாழினியைச் சாப்பிட வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். யாழினியோமேலும் படிக்க –>

பஞ்சதந்திரக் கதைகள் யானைகளின் கூட்டம் ஒன்று காட்டில் வசித்து வந்தது. யானைகளின் அரசன் தனது கூட்டத்துடன் அருகிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தி விளையாடி சந்தோஷமாக அங்கு வாழ்ந்து வந்தது. அந்த நீர்நிலையில் நீர் வற்றிப் போக யானைகள் நீர் அருந்த முடியாமல் கஷ்டப் பட்டன. உடனே யானைகளின் அரசன் தனது கூட்டத்திலிருந்த ஒரு யானையை அனுப்பிக் காட்டில் வேறு நீர்நிலை அருகில் இருக்கிறதா என்று தேடிப் பார்த்து அறிந்து வரச்மேலும் படிக்க –>