ஒருவரை பார்க்கும்போது அவர் ஒரு தொப்பியோ கிரீடமோ தலையில் சூடியிருந்தால் அது நம்மை எளிதில் கவர்ந்து விடும் அல்லவா? இப்படி பறவைகளிலும் சிலவற்றிற்கு அழகான கவர்ச்சிகரமான கிரீடம் அல்லது சிகை அலங்காரம் (crest) உண்டு. அத்தகைய சிகையலங்காரம் கொண்ட ஒரு பறவைதான் கொண்டலாத்தி. நாம் எழுதில் பார்க்கக்கூடிய சேவலுக்கு கூட இத்தகைய அமைப்பு உண்டே என்று கேட்கலாம்… ஆனால் அது ஒரு வகையான ஜவ்வினால் ஆனது. கொண்டலாத்திக்கு இருப்பது இறகுகளின்மேலும் படிக்க –>

வணக்கம் குழந்தைகளே! எதற்கெல்லாம் பணம் தேவைப்படுது குழந்தைகளே? ஒரு நாள் அமுதனும் அவங்க அம்மாவும் கடைக்கு போனாங்க. அப்போ அமுதன் ஒரு விளையாட்டு பொருள் கேட்டான். அவங்க அம்மாவும் வாங்கி கொடுத்துட்டாங்க. ஆனால் அதுக்கப்புறம் அவனுக்கு இன்னொரு பொருள் ரொம்ப புடிச்சிட்டு, அதுவும் வேணும்னு கேட்டான். அப்போ அவங்க அம்மா இப்போ ஏதாவது ஒன்னு வாங்கதான் அம்மா கிட்ட காசு இருக்கு, நீ இது வாங்கினா அதை திருப்பி குடுத்துடுன்னுமேலும் படிக்க –>

காட்டில் குட்டி யானை ஒன்றும், குரங்கு ஒன்றும் நண்பர்களாக இருந்தது.   குட்டி யானையின் பெயர் ராமு குரங்கின் பெயர் பிங்கி..   ராமு தன் தாயார் என்ன சொன்னாலும் அப்படியே கேட்கும். தாயார் மட்டுமல்ல வயதில் முதிர்ந்தவர்கள் யார் என்ன கூறினாலும் சரியென அப்படியே கேட்டு நடக்கும்.   ஆனால் பிங்கி குரங்கு அப்படி கிடையாது .மிகவும் சேட்டைக்காரி தாய் என்ன சொன்னாலும் எப்போதுமே கேட்பது கிடையாது அதற்குமேலும் படிக்க –>

ஆசிரியர்- எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) தேசாந்திரி பதிப்பகம், சென்னை. 044-23644947. விலை ரூ 35/- ஒரு துறுதுறு சுட்டி எலிக்குஞ்சுவின் பெயர் டோம். எலிக்குஞ்சுகளைப் பாம்புகள் பிடித்து விழுங்கி விடுவதால், தங்கள் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள ‌பிற எலிகள் டோமை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றன.  புதிய தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டால், பாம்பிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது, எலிகளின் எண்ணம். டோமும் இங்கிலாந்து சென்று  படித்து, பாஸ்வேர்டு போட்டுத் திறக்கும்படியான டிஜிட்டல்மேலும் படிக்க –>

தெருவில் கோழிகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தாள் வான்மதி. வான்மதிக்கு 5 வயது. தினமும் பள்ளியில் இருந்து வந்ததும் கோழிகளுக்கு இரை எடுத்து போடுவாள் ஆங்காங்கே மண்ணைக் கிளறி பூச்சிகளைப் பிடித்து தின்று கொண்டிருக்கும் கோழிகளும் குஞ்சுகளும் சேவல்களும் வான்மதியை கண்டதும் ஒரே இடத்தில் குழுமி விடும் அவளது குட்டி கைகளில் அள்ளி தானியங்களை சிதற விடுவாள். “சிதறக்கூடாது பாப்பா ஒரு இடத்துல குமிச்சி வைக்கணும்” என்று கூறுவார் அவளது அம்மா.மேலும் படிக்க –>

வணக்கம் குழந்தைகளே! அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் . நம்மைப்போலவே நம் அடுத்தத்தலைமுறையும் அடிமைப்பட்டுப்போகக்கூடாது என்பதற்காக , இன்றைய தலைமுறையான  நமக்காக, முன்னூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் சிக்கிக்கொண்டிருந்த இந்தியாவை, அன்றைக்கு எல்லா தடைகளையும் தாண்டி வலிகளைத்தாண்டி கால நேரம்   பார்க்காமல்,அன்றைக்கு நிலவிய அசாதாரணமான அரசியல் சூழலையும், கடுமையான அரசியல் எதிர்வினைகளையும் கண்டு அசராமல்,  சுதந்திரக்கனவை நனவாக்க களத்தில் இருந்து போராடி, கணக்கில் அடங்காத எண்ணற்ற குடிமக்கள்,  வீரர்கள், தலை சிறந்தமேலும் படிக்க –>

சிங்கம் ஒன்று காட்டில் மிகுந்த பசியுடன் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. அன்று ஒரு விலங்கும் அதன் கண்களில் தட்டுப் படவில்லை. நீண்ட நேரம் அலைந்து களைப்புற்ற சிங்கம் கண்ணெதிரே ஒரு குகையைக் கண்டது. நிச்சயமாக இந்த குகையில் ஏதாவது விலங்கு வசித்துக் கொண்டிருக்கும். இப்போது பகல் நேரத்தில் அந்த விலங்கும் இரை தேடி வெளியே சென்றிருக்கும். நாம் சென்று இந்த குகையில் ஒளிந்து கொண்டால் அந்த விலங்கு திரும்பவும்மேலும் படிக்க –>

மார்ட்டின் என்ற ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி ரஷ்யாவின் பனி படர்ந்த ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தார்.மேலும் படிக்க –>

அதிகாலை நான்கு மணிக்கு சேவலின் கூவல் ராமுவின் தாத்தாவை எழுப்பிவிட்டது. படுக்கையிலிருந்து எழுந்த அவர் தனது தோட்டத்திற்கு செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். 5 மணிக்கு மீண்டுமொரு முறை சேவல் கூவியபோது ராமுவையும் தாத்தா எழுப்பி விட்டார். பாட்டியும் இவர்களுடன் வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். கௌரியும் கௌதமும் அவர்களது அலுவல் பணியின் காரணமாக வீட்டிலிருந்து லேப்டாப் மூலம் வேலை பார்க்க வேண்டுமென்று கூறி வர மறுத்து விட்டார்கள். இருள் மெல்ல அகன்றுமேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் ஒரு பெரிய நூலகம் இருந்தது. அதில் ஒரு தேவதை வாழ்ந்து வந்தது. குடியிருக்க அது ஒரு நல்ல இடம் இல்லை என்றாலும், அந்த அமைதி அதற்குப் பிடித்து இருந்தது. ஒரு நாள் திடீரென்று அந்த அறையில் அதிகச் சத்தம் கேட்டது. ஒரு கவிதை புத்தகத்தில் குடியிருந்த அந்தத் தேவதை, தலையை வெளியே நீட்டிப் பார்த்தது. அங்கு இரண்டு குழந்தைகள், விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.  அவர்கள் பெரிய புத்தகங்களைமேலும் படிக்க –>