அடுத்து வந்த சில நாட்களில் துருவனின் பயிற்சி முழுமை பெற்றது. முழுமை என்றால் நன்றாக அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தான் என்று அர்த்தமில்லை. கௌதம முனிவருக்கு இந்தக் குறுகிய காலத்தில் அனைத்துப் பயிற்சிகளையும் கற்றுத் தருவது கடினம் என்பது நன்றாகத் தெரியும். எவ்வளவு நல்ல மாணவனாக இருந்தாலும் எல்லாக் கலைகளையும் முழுமையாகக் கற்றுத் தேர்ச்சி பெறப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். அதனால் மிகவும் அவசியமான பயிற்சியை மட்டுமே ஆசான் துருவனுக்குமேலும் படிக்க –>

குழந்தைகளே…இன்னைக்கு நூலினை வைத்து ஒவியம் உருவாக்கலாமா? தேவையான பொருட்கள் : காகிதம் சற்று தடிமனான நூல் (உல்லன் நூல்) வண்ண பெயிண்ட்கள் செய்முறை உங்களுடைய காகிதத்தை இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள். மடித்த காகிதத்தினுள், நீங்கள் வர்ணத்தில் தோய்த்த நூலினை நீங்கள் விரும்பும் வகையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, காகிதத்தினை மூடி, மேலே ஒரு கனமான புத்தகத்தினை வைத்து அழுத்தம் கொடுக்கவும். கனமான புத்தகம் அப்படியே இருக்கட்டும். இப்போது மெல்ல, நூலினைமேலும் படிக்க –>

நூல் : ஆமை காட்டிய அற்புத உலகம் ஆசிரியர் : யெஸ். பாலபாரதி பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் விலை : ₹65 வாசிப்பு அனுபவம் : கதையின் நாயகன் ஜுஜோ தனது நண்பர்களுடன் கடலுக்கடியில் உலா வருவதே கதை. ஆக்டோபஸ், சுறா மீன், டால்ஃபின், பவளப்பாறைகள், திருக்கை மீன்கள் என்று எல்லாவற்றையும் கதையில் பார்க்கலாம். இக்கதையைப் படிக்கும் போது கடல் குறித்தும், கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும், சுற்றுசூழல்மேலும் படிக்க –>

“ஹாய் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்டி இருக்கீங்க. நான் தான் உங்க வினிதா.. இன்னிக்கு நான் தாத்தா பாட்டி கூடச் சேர்ந்து தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய போறேன்”     “நீங்களும் இத உங்க வீட்ல செஞ்சு பாருங்க. வாங்க தாத்தா பாட்டி வரதுக்குள்ள ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள எடுத்து வைக்கலாம்..” “ஒரே மாதிரி இருக்குற ஐந்து கப் எடுத்துக்கோங்க. * முதல் கப்ல கடலைமாவு எடுத்துக்கோங்க., * இரண்டாவது கப்லமேலும் படிக்க –>

ரோஜாத் தோட்டம் தெரிந்தது! பூட்டப்பட்ட அந்தப் பழைய கதவைப் பார்த்த உடனேயே இது தான் அந்த ரகசியத் தோட்டத்தின் வாசல் என்று மேரிக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். நல்ல வேளையாக யாரும் அருகில் இல்லை, அதனால் அவள் உள்ளே நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை. ரொம்ப நாளாக யாருமே அங்கு நுழையாததால் அந்தத் தோட்டமே புதர்கள் வளர்ந்து, நிறைய இலைகளும், குப்பையுமாகக் காட்சியளித்தது. பல இடங்களில்மேலும் படிக்க –>

‘லொக் லொக்’ அருண் இருமும் சத்தம் சமையல் அறையில் இருந்த மாலாவுக்குக் கேட்டது. அவள் அங்கிருந்து படுக்கை அறைக்குப் போய்ப் பார்த்தாள்.அருண் எழுந்து படுக்கையில் உட்கார்ந்து இருமிக் கொண்டு இருந்தான். “அம்மா! தொண்டை எல்லாம் ரொம்ப வலிக்குது மா!” “சரிடா கண்ணா! பக்கத்து வீட்டு லக்ஷ்மி பாட்டி கிட்டே கேட்கிறேன். அவங்க ஏதாவது வீட்டு வைத்தியம் சொல்லுவாங்க, சரியாயிடும், கவலைப்படாதே! “சரிம்மா!” பக்கத்து வீட்டு லக்ஷ்மி பாட்டியிடம் அருண் இருமலால்மேலும் படிக்க –>

கருணை ததும்பும் அந்த முனிவர் பேசியதைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்ற துருவன் தன்னை ஒருவழியாகச் சமாளித்துக் கொண்டு அந்த முனிவரைப் பணிவுடன் வணங்கினான். அறிவும் ஞானமும் சேர்ந்து ஒளி வீசுகின்ற முனிவரின் முகத்தைக் கண்டதுமே துருவனின் மனதில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் சேர்ந்து எழுந்தன. “அரசர், நம்மை ஒரு சரியான குருவிடம் தான் அனுப்பியிருக்கிறார். இவருடைய சொற்களைக் கேட்டுக் குறுகிய காலத்தில் நம்மால் முடிந்த அளவு கலைகளைக் கற்றுக் கொண்டுமேலும் படிக்க –>

குழந்தைகளே! எம்.சி.ராஜா (1883 – 1943) எனச் சுருக்கமாக அறியப்படும் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்பவரைப் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இவர் பள்ளி நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். ஆர்.ரங்கநாயகி அம்மாள் என்பவருடன் இணைந்து, மழலையர் பள்ளிப் பாடநூல் ஒன்றை வெளியிட்டார்.  நிலா நிலா ஓடி வா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, கை வீசம்மா கை வீசு போன்ற பிரபலமானமேலும் படிக்க –>

“தாத்தா.. தாத்தா.. தாத்தா!” வீட்டின் தாழ்வாரத்திலிருந்து சத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான் மனோ. “என்னடா ஏலம் போடுற?” கைபார்த்துக்  கொண்டிருந்த கீரைக் கட்டைக் கீழே வைத்தார் தாத்தா. “உடனே வெளியே வாங்க தாத்தா!” அனுவின் சத்தமும் சேர எழுந்து வெளியே வந்தவர் அலுத்துக் கொண்டே சொன்னார், “வந்துட்டேன்.. எதுக்குக் கூப்பிட்ட? “நாம் இங்கே இருக்கிற டயர், தேங்காய் சிரட்டை எல்லாத்தையும் க்ளீன் பண்ணனும்.. எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. வாங்க!” “ஏன்டாமேலும் படிக்க –>