வனத்தில் கலாட்டா
ஒரு பெரிய வனம் இருந்தது. அந்த வனத்துக்குள்ளே ஒரு நாள் விலங்குகள், பறவைகள் எல்லாமே கூட்டம் கூட்டமாக ஏதோ பேசிக்கிட்டே இருந்தாங்க. என்ன பிரச்சினையா இருக்கும்? வாங்க, நாம போயிக் கண்டுபிடிக்கலாம். மேலும் படிக்க –>
ஒரு பெரிய வனம் இருந்தது. அந்த வனத்துக்குள்ளே ஒரு நாள் விலங்குகள், பறவைகள் எல்லாமே கூட்டம் கூட்டமாக ஏதோ பேசிக்கிட்டே இருந்தாங்க. என்ன பிரச்சினையா இருக்கும்? வாங்க, நாம போயிக் கண்டுபிடிக்கலாம். மேலும் படிக்க –>
முன்னொரு காலத்தில் கந்தன் தாத்தா என்பவர் காட்டுப் பகுதிக்கு அருகே குடிசை அமைத்து வாழ்ந்து வந்தார். காட்டில் தன் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொண்டு போய் சந்தையில் விற்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு நாள் சந்தையிலிருந்து வாங்கி வந்த திராட்சைப் பழத்தை உண்டுவிட்டு, அதன் விதையை தன் தோட்டத்தில் போட்டார் கந்தன். சிறிது நாட்களில் தாத்தா போட்ட விதைகள் அனைத்தும் முளைத்து, திராட்சைக் கொடி வளர்ந்து,மேலும் படிக்க –>
கருணா அவர்கள் வீட்டின் இளவரசி. அவளோட அம்மா, அப்பாவிற்கு ஒரே மகள். ரொம்பச் செல்லம். ஆனாலும் கருணா ரொம்ப நல்ல பொண்ணு தான். பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்குவா. சொன்ன பேச்சைக் கேப்பா. அப்புறம் எல்லோருக்கும் தானாவே உதவி செய்வா. அதுனாலயே அவளை எல்லோருக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கருணாவோட பாட்டி அவங்க வீட்டிலயே அவங்க கூடத்தான் இருந்தாங்க. அதுனால கருணா பாட்டிக்கும் செல்லம் தான். அவளுக்கும் பாட்டியை ரொம்பமேலும் படிக்க –>
பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் கற்பனை உலகத்தில் வானத்திற்கு நிறமே கிடையாது. காலையில் சூரியனும் இரவில் நிலவும் நட்சத்திரங்களும் நிறமற்ற வானத்தில் உலாவி வந்தன. அங்கே ஓர் உயரமான, பல நூறு உயிர்களின் வாழ்விடமாக மலை ஒன்று இருந்தது. அந்த மலையின் பெயர் நீல மலை. அந்த பெயருக்குப் காரணம் அந்த மலை எங்கும் பூத்திருக்கும் நீலநிறப்பூ. அந்த மலையின் அடிவாரத்தில் பல அழகான கிராமங்கள் இருந்தன. அந்தமேலும் படிக்க –>
நம் கற்பனை உலகத்தில் பல கோடி வருடங்களுக்கு முன்னால் இப்போதிருப்பது போலவே நீலநிற வானம், அந்த அழகு வானத்தைப் பேரழகு செய்ய காலையில் சூரியன் இரவில் நிலா, பல கோடி நட்சத்திரங்கள் எல்லாம் இருந்தன. அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியமான கடமையும் இருந்தது. சூரியனுக்கு உயிர்கள் வாழத் தேவையான வெப்பத்தையும், பளிச்சென்ற ஒளியையும் காலை முழுதும் கொடுக்க வேண்டும். நிலவிற்கு இரவில் உயிர்கள் ஓய்வெடுக்க குளிர்ச்சியான, மிதமான ஒளி தரமேலும் படிக்க –>
“குமரா, ஸ்கூல் பஸ் வர டயம் ஆச்சு. இன்னுமா ரெடியாகலை நீ? ராகவி, அவனோட ஸ்கூல் பேக்கில லஞ்ச் பாக்ஸ் வச்சுட்டயா?” என்று மகன் குமரனையும் மனைவி ராகவியையும் ஒரே சமயத்தில் கேள்விகள் கேட்டார் மகேந்திரன். “இதோ ரெடியாயிட்டேன்பா” என்று சொல்லிக் கொண்டே யூனிஃபார்ம் அணிந்த குமரன், மகேசன் எதிரே வந்து நின்றான். ராகவியும் கையில் லஞ்ச்பாக்ஸைக் கொண்டு வந்து குமரன் கையில் தர, அவனும் அதை பேக்கில் வைத்துக்மேலும் படிக்க –>
திடீரென்று கரண்ட் போய்விட்டது. நல்ல இருட்டு. கட்டிலில் இருந்து இறங்கி மெழுகுவர்த்தி ஏற்றப்போனான் ஜீவா. காலில் பிசுபிசுவென்று ஏதோ ஒட்ட கையால் தடவி பார்த்தான் . ஏதோ சாக்லேட் வாசம் அடிக்க, ஆச்சரியமாக இருந்தது. மெழுகுவர்த்தியை ஏற்ற, அதன் குறைந்த வெளிச்சத்தில் அங்கே பெரிய அளவில் ஒரு பீரோ போல கீழே கிடந்தது. அருகில் சென்று பார்க்க, சட்டென்று கரண்ட் வந்துவிட்ட்து. அதை பார்த்து ஜீவாவுக்கு கண்கள் விரிந்தது.மேலும் படிக்க –>
ஒரு சிறிய கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் இருந்த விளைநிலத்தில் விவசாயியால் தனது விவசாயத் தொழிலை சரிவரச் செய்ய முடியவில்லை. மழை பொய்த்து விட்டது. விதை நெல் வாங்குவதற்கும் கையில் பணவசதி இல்லை. ஊரில் இருந்த செல்வந்தர்களிடம் உதவி கேட்டும் யாரும் அவனுக்கு உதவி செய்யவில்லை. அவனும் அவனது குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள். வயதான பெற்றோர், கனிவும் அன்பும் கொண்ட மனைவி, சிறு குழந்தைகள் அனைவரும்மேலும் படிக்க –>
கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கும் இடத்தில் அதை ஒட்டி ஒரு காடு இருந்தது. அங்கு பல்வேறு மரங்கள் மிருகங்கள் பறவைகள் என அனைத்தும் வாழ்ந்து வந்தன.. அந்த அடர்ந்த காட்டில் ஒரு சிட்டுக்குருவியும் குட்டிக் குரங்கும் இருந்தன. அவை இரண்டும் படு சுட்டி. ஒரு இடத்தில் அவை இரண்டும் ஒன்றாக இருந்தால் அவ்விடமே மகிழ்ச்சியுடனும் குதூகலமாகவும் இருக்கும். சிட்டுக்குருவி கீச் கீச் என சப்தமிட, குரங்கு கையை அசைத்தும் காலால் குதித்தும்மேலும் படிக்க –>
நமது அழகான கற்பனை உலகத்தில் ஓர் அழகான நாடு இருந்தது. அந்த நாட்டின் ராஜாவிற்கு சினுங்கன் என்ற அழகான மகன் இருந்தான். நாட்டின் இளவரசன்; வருங்கால அரசன். ஏன், எதற்கு , எப்படி என்று எங்கும் கேட்டபடி சுற்றிக்கெண்டிருக்கும் நம் சினுங்கனுக்கு உலகத்திலேயே பிடிக்காத இரண்டு விஷயங்கள் இருந்தன. ஒன்று, வேலை செய்வது; எப்போது பார்த்தாலும் எல்லோரும் ஏதாவது வேலை செய்தபடி இருப்பதைப் பார்த்தால் அவனுக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும்.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies