கதைத்தோட்டம் (Page 15)

volcano e1615747790848

பல வருடங்களுக்கு முன்னால் நம் பூமி இப்போது இருப்பது போல இருக்கவில்லை. பூமி முழுக்க நெருப்பு மனிதர்கள்தான். மேலும் படிக்க…

kagamum nariyum

ஒரு கிராமத்தில் ஒரு வயதான பாட்டி சின்ன கடை வைத்து பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தார். அவரின் கடையின் மொறுமொறு மசால் வடை அந்த ஏரியாவில் மிகப் பிரபலம். பாட்டிக்கு மிகவும் வயதானதால் கண் பார்வை மங்கி இருந்தது. இருப்பினும் அவருக்கு உற்ற தோழனாய் சிக்கு என்ற நாய்க்குட்டி இருந்ததால் அவரால் நன்றாக வியாபாரம் செய்ய முடிந்தது.மேலும் படிக்க…

nilavum vaanamum

வானம் மேகத்தை வைத்து, யானை, கரடி, கார் என விதவிதமான பொம்மைகள் செய்து, விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நிலாவுக்கு, யானை பொம்மை மிகவும் பிடித்து விட்டது. ”அந்த யானை பொம்மையைத் தர்றியா?” என்று நிலா, கேட்டது.மேலும் படிக்க…

kokkarakko1

பல கோடி வருடங்களுக்கு முன்னால், நம்ம பூமியைச் சுற்றி பத்து சூரியன்கள் இருந்தனவாம். அதில் பெரியதுதான் நம் சன். பத்து சூரியன்கள் இருப்பதால் பூமியில் எப்போதும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.மேலும் படிக்க…

vanathil galatta

ஒரு பெரிய வனம் இருந்தது. அந்த வனத்துக்குள்ளே ஒரு நாள் விலங்குகள், பறவைகள் எல்லாமே கூட்டம் கூட்டமாக ஏதோ பேசிக்கிட்டே இருந்தாங்க. என்ன பிரச்சினையா இருக்கும்? வாங்க, நாம போயிக் கண்டுபிடிக்கலாம். மேலும் படிக்க…

maathiyosi

முன்னொரு காலத்தில் கந்தன் தாத்தா என்பவர்  காட்டுப் பகுதிக்கு அருகே குடிசை அமைத்து வாழ்ந்து வந்தார். காட்டில் தன் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொண்டு போய் சந்தையில் விற்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு நாள் சந்தையிலிருந்து வாங்கி வந்த திராட்சைப் பழத்தை உண்டுவிட்டு, அதன் விதையை தன் தோட்டத்தில் போட்டார் கந்தன். சிறிது நாட்களில் தாத்தா போட்ட விதைகள் அனைத்தும் முளைத்து, திராட்சைக் கொடி வளர்ந்து,மேலும் படிக்க…

kakkai

கருணா அவர்கள் வீட்டின் இளவரசி. அவளோட அம்மா, அப்பாவிற்கு ஒரே மகள். ரொம்பச் செல்லம். ஆனாலும் கருணா  ரொம்ப நல்ல பொண்ணு தான். பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்குவா‌. சொன்ன பேச்சைக் கேப்பா. அப்புறம் எல்லோருக்கும் தானாவே உதவி செய்வா. அதுனாலயே அவளை எல்லோருக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கருணாவோட பாட்டி அவங்க வீட்டிலயே அவங்க கூடத்தான் இருந்தாங்க. அதுனால கருணா பாட்டிக்கும் செல்லம் தான். அவளுக்கும் பாட்டியை ரொம்பமேலும் படிக்க…

appadiya

பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் கற்பனை உலகத்தில் வானத்திற்கு நிறமே கிடையாது. காலையில் சூரியனும் இரவில் நிலவும் நட்சத்திரங்களும் நிறமற்ற வானத்தில் உலாவி வந்தன. அங்கே ஓர் உயரமான,  பல நூறு உயிர்களின் வாழ்விடமாக மலை ஒன்று இருந்தது. அந்த மலையின் பெயர் நீல மலை. அந்த பெயருக்குப் காரணம் அந்த மலை எங்கும் பூத்திருக்கும் நீலநிறப்பூ. அந்த மலையின் அடிவாரத்தில் பல அழகான கிராமங்கள் இருந்தன. அந்தமேலும் படிக்க…

minmini

நம் கற்பனை உலகத்தில் பல கோடி வருடங்களுக்கு முன்னால் இப்போதிருப்பது போலவே நீலநிற வானம், அந்த அழகு வானத்தைப் பேரழகு செய்ய காலையில் சூரியன் இரவில் நிலா, பல கோடி நட்சத்திரங்கள்    எல்லாம் இருந்தன.  அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியமான கடமையும் இருந்தது. சூரியனுக்கு உயிர்கள் வாழத் தேவையான வெப்பத்தையும், பளிச்சென்ற ஒளியையும் காலை முழுதும் கொடுக்க வேண்டும். நிலவிற்கு இரவில் உயிர்கள் ஓய்வெடுக்க குளிர்ச்சியான, மிதமான ஒளி தரமேலும் படிக்க…

fathermanthiram

“குமரா, ஸ்கூல் பஸ் வர டயம் ஆச்சு. இன்னுமா ரெடியாகலை நீ? ராகவி, அவனோட ஸ்கூல் பேக்கில லஞ்ச் பாக்ஸ் வச்சுட்டயா?” என்று மகன் குமரனையும் மனைவி ராகவியையும் ஒரே சமயத்தில் கேள்விகள் கேட்டார் மகேந்திரன். “இதோ ரெடியாயிட்டேன்பா” என்று சொல்லிக் கொண்டே யூனிஃபார்ம் அணிந்த குமரன், மகேசன் எதிரே வந்து நின்றான். ராகவியும் கையில் லஞ்ச்பாக்ஸைக் கொண்டு வந்து குமரன் கையில் தர, அவனும் அதை பேக்கில் வைத்துக்மேலும் படிக்க…